" /> -->

அயனிச் சமநிலை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.

 2. பின்வரும் நீரிய கரைசல்களில் நிகழும் வினைகளில் இணை அமில-கார இரட்டைகளை கண்டறிக.
  i) \(HS^{-}(aq)+HF\rightleftharpoons F^{-}(aq)+H_{2}S)(aq)\)
  ii) \(HPO_{4}^{2-}+SO_{3}^{2-}\rightleftharpoons PO_{4}^{3-}+HSO_{3}^{-}\)
  iii) \(NH_{4}^{+}+CO_{3}^{2-}\rightleftharpoons NH_{3}+HCO_{3}^{-}\)

 3. HClO4 மூலக்கூறின் அமிலத்தன்மைக்கான காரணம் கூறு. ப்ரான்ஸ்டட் – லெளரி கொள்கையின் அடிப்படையில், அதன் இணை காரத்தை கண்டறிக.

 4. CuSO4 கரைசலுடன் நீர்த்த அம்மோனியாவை சேர்க்கும் போது, டெட்ராஅம்மைன்காப்பர் (II) அணை வு உருவாவதால் கரைசல் அடர் நீல நிறமாக மாறுகிறது.
  \([Cu(H_{2}O)_{4}]^{2+}_{(aq)}+4NH_{3}(aq)\rightleftharpoons [Cu(NH_{3})_{4}]^{2+}_{(aq)}\), H2O மற்றும் NH3 ஆகியவற்றில் எது வலிமை மிகு லூயி காரம்?

 5. ஒரு ஆய்வக உதவியாளர், 25oC வெப்ப நிலையில், கணக்கிடப்பட்ட அளவுள்ள HCl வாயுவை சேர்த்து \([H_{3}O^{+}]=4\times10^{-5}M\) செறிவு கொண்ட கரைசலை தயாரித்தார் . அந்தக் கரைசல் நடுநிலைத்தன்மை கொண்டதா (அல்லது) அமிலத்தன்மை கொண்டதா (அல்லது) காரத்தன்மை கொண்டதா?

 6. கரைதிறன் பெருக்கம் வரையறு.

 7. நீரின் அயனிப் பெருக்கம் வரையறு. அறை வெப்ப நிலையில் அதன் மதிப்பை தருக.

 8. HCN இன் Ka மதிப்பு 10-9 எனில் 0.4M HCN கரைசலின் pH மதிப்பு என்ன?

 9. 0.1 M அம்மோனியம் அசிட்டேட் கரைசலின் நீராற்பகுப்பு வீதம் மற்றும் pH மதிப்பை கணக்கிடுக. \(K_{a}=K_{b}=1.8\times10^{-5}\) என கொடுக்கப்பட்டுள்ளது.

 10. வலிமை மிகு அமிலம் மற்றும் வலிமை குறைந்த காரத்திலிருந்து உருவாகும் உப்பின்
  நீராற்பகுத்தல் மாறிலி மற்றும் நீராற்பகுத்தல் வீதம் ஆகியவற்றிற்கான சமன்பாடுகளை தருவி.

 11. Ca3(PO4)2 இன் கரை திறன் பெருக்கத்திற்கான சமன்பாட்டை எழுதுக.

 12. \(2 \times 10^{-3}\) M, H3O+ அயனிச் செறிவைக் கொண்டுள்ள ஒரு பழரசத்தில் OH அயனிச் செறிவை கணக்கிடுக. கரைசலின் தன்மையை கண்டறிக.

 13. 0.001M HCl கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக

 14. ஒரு வலிமை குறை ந்த மின்பகுளியின் 0.10M செறிவுடை ய கரைச ல் 25oC ல் 1.20% வரை பிரிகையடைகிறது என கண்டறியப்பட்டுள்ளது. அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பை காண்க .

 15. 0.1M CH3COOH கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக. அசிட்டிக் அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு \(1.8\times10^{-5}\).

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வேதியியல் - அயனிச் சமநிலை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Ionic Equilibrium Two Marks Question Paper )

Write your Comment