அணைவு வேதியியல் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. [Fe(H2O)5NO]SOஅணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே __________

    (a)

    முறையே +2 மற்றும் 0

    (b)

    முறையே +3 மற்றும் 0

    (c)

    முறையே +3 மற்றும் -1

    (d)

    முறையே +1 மற்றும் +1

  2. K3[Al(C2O4)3] என்ற அணைவுச் சேர்மத்தின் IUPAC பெயர் ____________

    (a)

    பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினியம் (III)

    (b)

    பொட்டாசியம் ட்ரைஆக்சலேட்டோ அலுமினேட் (II)

    (c)

    பொட்டாசியம் ட்ரிஸ் ஆக்சலேட்டோ அலுமினேட் (III)

    (d)

    பொட்டாசியம் ட்ரைஆக்லேட்டோ அலுமினேட் (III)

  3. பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?

    (a)

    TiCl4

    (b)

    [CoCl6]4-

    (c)

    [Cu(NH3)4]2+

    (d)

    [Ni(CN)4]2-

  4. [Co(NH3)4Br2]Cl என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம் ______________

    (a)

    வடிவ மற்றும் அயனியாதல் மாற்றியம்

    (b)

    வடிவ மற்றும் ஒளி சுழற்ச்சி மாற்றியம்

    (c)

    ஒளி சுழற்ச்சி மாற்றியம் மற்றும் அயனியாதல் மாற்றியம்

    (d)

    வடிவ மாற்றியம் மட்டும்

  5. பின்வரும் அணைவுச் சேர்மங்களில் மாற்றியப் பண்பினைப் பெற்றிருக்காதது எது?

    (a)

    [Ni(NH3)4(H2O)2]2+

    (b)

    [Pt(NH3)2Cl2]

    (c)

    [Co(NH3)5SO4]Cl

    (d)

    [Fe(en)3]3+

  6. மைய உலோக அயனியும், ஈனிகளும் வலிமையாக பிணைக்கப்பட்டுள்ள கோளம் ______________ எனப்படும்.

    (a)

    உட்புறக்கோளம் 

    (b)

    அயனியாகும் கோளம் 

    (c)

    அணைவுக் கோளம் 

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை.

  7. அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணைதிறன் ________________ ஆகும்.

    (a)

    அயனியுறும் இணைதிறன் 

    (b)

    திசைநோக்கும் பண்புடையது

    (c)

    திசைநோக்கும் பண்பற்றது 

    (d)

    ஆக்சிஜனேற்ற எண் 

  8. [Ni(CO)4] என்ற அணைவில் மைய உலோக அணுவில் உள்ள தனித்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ___________

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  9. தாலோ நீலம் என்ற ஆழ்ந்த நீல நிற அணைவு நிறமியின் மைய உலோக அயனி _____________

    (a)

    Ni2+

    (b)

    Co3+

    (c)

    Cu2+

    (d)

    Ag+

  10. இரத்த சிகப்பணு மற்றும் குளோரோபில் ஆகியவற்றில் காணப்படும் ஈனி ___________

    (a)

    EDTA 

    (b)

    DMG 

    (c)

    பார்பைரின் 

    (d)

    en 

  11. 5 x 2 = 10
  12. பின்வரும் பெயருடைய அணைவுச் சேர்மங்களுக்கு உரிய வாய்ப்பாட்டினைத் தருக.
    அ) பொட்டாசியம் ஹெக்சாசயனிடோபெர்ரேட் (II)
    ஆ) பென்டாகார்பனைல் இரும்பு (o)
    இ) பென்டாஅம்மைன்நைட்ரிடோ -K-N-கோபால்ட் (III) அயனி 
    ஈ) ஹெக்ஸாஅம்மைன்கோபால்ட் (III) சல்பேட் 
    உ) சோடியம் டெட்ராபுளூரிடோடை ஹைராக்ஸிடோகுரமேட் (III)

  13. டைமீத்தைல் கிளையாக்ஸைமின் ஆல்கஹால் கலந்த கரைசலைப் பயன்படுத்தி Ni2+ கண்டறியப்படுகிறது இவ்வினையில் உருவாகும் ரோஜா சிவப்பு நிற அணைவுச் சேர்மத்தின் வாய்ப்பாட்டினை எழுதுக.

  14. [Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.

  15. அணைவுக் கோளம் என்றால் என்ன?

  16. d - d எலக்ட்ரான் பரிமாற்றம் என்றால் என்ன?

  17. 5 x 3 = 15
  18. எண்முகி படிக புலத்தில், d – ஆர்பிட்டாலின் படிக புலப் பிளப்பினை குறிப்பிடும் வரைபடம் வரைக

  19. நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களைப் பெற்றிருப்பதில்ல. ஏன்?

  20. ஒரு முக மாற்றியம் (Facial isomer) மற்றும் நெடுவரை (Meridional isomer) மாற்றியம் பற்றி எழுதுக.

  21. பல்வேறு உயிரியல் அமைப்புகளில் பயன்படும் உலோக அணைவுகள் பற்றி எழுதுக. 

  22. சிஸ் பிளாட்டின் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிரான மருந்துப்பொருளாக எவ்வாறு பயன்படுகிறது?

  23. 3 x 5 = 15
  24. படிகப்புல பிளப்பு ஆற்றல் என்றால் என்ன? விளக்குக.

  25. அணைவுச் சேர்மங்களின் வகைப்பாட்டினை விவரி?

  26. பின்வரும் அணைவுச் சேர்மங்களின் வாய்ப்பாடுகளைத் தருக.
    i) டிரிஸ் (எத்திலீன் டை அமின்) குரோமியம் (III) குளோரைடு 
    ii) பொட்டாசியம் டெட்ரா சயனிடோ நிக்கலேட் (II)
    iii) அம்மீன் புரோமிடோ குளோரிடோ நைட்ரிட்டோ - kN பிளாட்டினேட் (II) அயனி 
    iv) டைகுளோரிடா பிஸ் (ஈத்தேன் - 1, 2 - டைஅமின்) பிளாட்டினம் (IV)  நைட்ரேட்
    v) ஹெக்ஸா அக்வா மாங்கனீசு (II) பாஸ்பேட் 

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் Unit 7 அணைவு வேதியியல் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry Unit 7 Chemical Kinetics Model Question Paper )

Write your Comment