பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. நிர்வாகம் மற்றும் ஆளுமைப் பணி எதனுடன் தொடர்புடையது?

    (a)

    நிர்வாகம்

    (b)

    மேலாண்மை

    (c)

    நிர்வாகம் மற்றும் மேலாண்மை

    (d)

    நிறுவனம்

  2. பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது? 

    (a)

    திட்டமிடுதல் 

    (b)

    ஒழுங்கமைத்தல் 

    (c)

    பணிக்கமர்த்துதல் 

    (d)

    கட்டுப்படுத்துதல் 

  3.  _________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

    (a)

    முதுகலை வணிக மேலாண்மை 

    (b)

    விதிவிலக்கு மேலாண்மை 

    (c)

    குறியிலக்கு மேலாண்மை 

    (d)

    முதுகலை வணிக நிர்வாகம் 

  4. உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் ______ நடைபெறும் ஒரு சந்தை ஆகும். 

    (a)

    உடனடியாக 

    (b)

    எதிர்காலத்தில் 

    (c)

    நிலையானது 

    (d)

    ஒரு மாதத்திற்குப் பின்னர் 

  5. மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை. 

    (a)

    குறுகிய கால நிதி 

    (b)

    கடனுறுதி பத்திரங்கள் 

    (c)

    சமநிலை நிதி 

    (d)

    நீண்ட கால நிதி 

  6. கீழ்க்கண்டவற்றுள் எது பணச் சந்தையின் கூறுகளாகும்?

    (a)

    மத்திய வங்கி

    (b)

    வணிக வங்கி

    (c)

    நிதி நிறுவனங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  7. காளை வணிகர் நம்பிக்கையூட்டுவது ______ 

    (a)

    விலை ஏற்றம் 

    (b)

    விலை குறைப்பு 

    (c)

    விலை நிலைத்தன்மை 

    (d)

    விலையில் மாற்றமில்லை 

  8. நேரடி வரிகள் வாரியம் அல்லது வருமானத் துறையினால் வழங்கப்படுவது

    (a)

    நிரந்தர தொகை எண்

    (b)

    நிரந்தர கணக்கு வாரிசு

    (c)

    நிரந்தர கணக்கு எண்

    (d)

    முதன்மை கணக்கு எண்

  9. மனித வள மேலாண்மை என்பது ___________ மற்றும் ___________ ஆகும்.

    (a)

    அறிவியல் மற்றும் கலை 

    (b)

    கோட்பாடு மற்றும் நடைமுறை 

    (c)

    வரலாறு மற்றும் புவியியல்

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 

  10. தகுதியற்ற நபரர்களை தேர்ந்தெடுத்தால் பயிற்சி மற்றும் மேற்பார்வைக் கு கூடுதல் செலவை _______ ஏற்படுத்தும்.

    (a)

    பயிற்சி 

    (b)

    ஆட்சேர்ப்பு 

    (c)

    வேலைத்தரம் 

    (d)

    இவை எதுவும் இல்லை 

  11. ஒலி, ஒளி காட்சி உதவிகள் மூலம் இது நடைபெறுகிறது.

    (a)

    கருத்தரங்கு மாநாட்டு முறை

    (b)

    பங்கேற்று நடத்தல் முறை

    (c)

    மின்னணு கற்றல் முறை

    (d)

    செயல்விளக்க பயிற்சி முறை

  12. பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    களச்சந்தை 

    (b)

    உள்ளூர் சந்தை 

    (c)

    பத்திரங்களின் சந்தை

    (d)

    தேசிய சந்தை 

  13. இன்றைய பொருளாதார நிலை வாழ்க்கையின் மாற்றத்திற்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது.

    (a)

    உற்பத்தி சார்ந்து

    (b)

    சந்தையிடுகை சார்ந்து

    (c)

    விற்பனை சார்ந்து

    (d)

    நுகர்வோர் சார்ந்து

  14. வாங்குவோர் ஜாக்கிரதை அல்லது விழித்திரு எனும் கோட்பாடு ________ முன் நடைமுறையில் இருந்தது

    (a)

    வேளாண்புரட்சி

    (b)

    பசுமைப் புரட்சி

    (c)

    தொழிற்புரட்சி

    (d)

    வெண்மைப் புரட்சி

  15. நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில் ____ ஆகும். 

    (a)

    அளவீடுகள் 

    (b)

    விற்பனை அதிகப்படுத்துதல் 

    (c)

    பொறுப்புகள் 

    (d)

    கடமைகள் 

  16. ______ சூழலில் வானிலை மற்றும் காலநிலை நிலைமைகள் உள்ளன. 

    (a)

    நுண்தன்மை கொண்டது 

    (b)

    பேரியல் தன்மை கொண்டது 

    (c)

    குறைந்தபட்சமானது 

    (d)

    அதிகபட்சமானது 

  17. பொருளின் மீதான உரிமை என்பது 

    (a)

    பொருளின் உடைமை 

    (b)

    பொருளைப் பாதுகாத்தல் 

    (c)

    பொருளின் மீதான உரிமை பாத்தியம் வைத்திருப்பவர் 

    (d)

    இவற்றில் ஏதுமில்லை 

  18. அயல்நாட்டு மாற்று சீட்டுகள் எத்தனை படிகளில் தயாரிக்கப்படுகிறது?

    (a)

    ஐந்து

    (b)

    மூன்று

    (c)

    இரண்டு

    (d)

    நான்கு

  19. எவ்வித பின்புலமும் இன்றி தன்னம்பிக்கை வைத்து தொழில் துவங்கி புதிய பொருட்களை படைப்பவர்கள் ________ தொழில் முனைவோர் ஆவார்.

    (a)

    பாராம்பரிய 

    (b)

    நவீன 

    (c)

    முதல் தலைமுறை 

    (d)

    ஊரக 

  20. நிறுமச் சட்டத்தின் படி கீழ்கண்ட அதிகாரங்களில் ஒன்று இயக்குநர்களின் குழுவால் செயல்படுத்த முடியும்

    (a)

    நிறுமத்தை விற்கும் அதிகாரம்

    (b)

    அழைப்பு பணத்துக்கு அழைப்பு விடும் அதிகாரம் 

    (c)

    செலுத்தப்பட்ட மூலதனத்திற்கு மேல் கடன் வாங்கும் அதிகாரம் 

    (d)

    தணிக்கையாளர்களை மீண்டும் பதவி நியமனம் செய்யும் அதிகாரம் 

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 2 = 14
  22. மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக. 

  23. புதுமைப்படுத்துதல் உள்ளடக்கியது எது?

  24. குறியிலக்கு மேலாண்மையின் ஏதேனும் இரண்டு நன்மைகளைக் குறிப்பிடுக.

  25. நிதிச் சந்தை தேசிய வளர்ச்சிக்கு எங்ஙனம் வழி செய்கிறது?

  26. மூலதனச் சந்தை என்றால் என்ன? 

  27. இந்தியாவில் 1986 வரை கிடைத்த பணச் சந்தையின் ஆவணங்களைக் கூறு.

  28. தலால் தெரு - விளக்குக.

  29. செபி பற்றிய சிறுகுறிப்பு வரைக .

  30. மனித வளத்தின் பொருள் தருக.

  31. கிளாதக் மற்றும் கிளார்க் பேராசிரியர் சந்தையிடுகை பணியினை எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளார்? அவை யாவை?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 3 = 21
  33. மேலாண்மை அடிப்படைக் கருதுக்களைக் கூறுக.

  34. குறிப்பு வரைக:
    i) ஒழுங்கமைத்தல்
    ii) பணிக்கமர்த்துதல்

  35. நிதிச் சொத்துக்களின் வகைகளைக் கூறுக

  36. உள் மூல ஆட்சேர்ப்பின் அம்சங்கள் யாவை? 

  37. கட்டமைக்கப்பட்ட நேர்காணல் என்றால் என்ன? 

  38. பயிற்சி அளிப்பவர் மற்றும் பயிற்சி பெறுபவர் பற்றி சிறு குறிப்பு எழுதுக. 

  39. சந்தையீட்டாளரின் பணிகளை பட்டியலிடுக.

  40. கன்வர்சி அவர்களின் சந்தையிடுகையின் வரைவிலக்கணம் யாது?

  41. தனியிடச்சந்தை (Niche) பற்றி விளக்குக

  42. தேசிய ஆணையத்தின் உறுப்பினர்கள் பற்றி விவரி. 

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    7 x 5 = 35
    1. வணிக இரசீதின் இயல்புகள் மற்றும் வகைகளை விவரி. 

    2. நிறுமச் செயலரின் பணிகளை விளக்கு? 

    1. பயிற்சியின் நோக்கம் யாது? அல்லது பயிற்சியின் அவசியம் என்ன?

    2. வியாபார அடிப்படையிலான தொழில் முனைவு வகைப்பாட்டினை விவரித்து எழுதுக. (ஏதேனும் 5)

    1. மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்குக. 

    2. தொழில் முனைவோரின் சிறப்பியல்புகள் யாவை? (ஏதேனும் 5)

    1. மூலதனச் சந்தையின் பல்வேறு பணிகளை விளக்குக. 

    2. புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்காக படிநிலைகளை விளக்குக. 

    1. மேலாண்மையின் பல்வேறு முக்கிய பணிகளை விளக்குக.

    2. வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்கு. (ஏதேனும் 5)

    1. மேலாண்மை, நிர்வாகம் - ஒப்பிடுக.

    2. நுகர்வோர் பாதுகாப்பின் தேவைகள் யாவை?

    1. விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் என்ன?

    2. சந்தையிடுகை பணிகளில் வசதிப் பணிகளை விளக்குக. (அல்லது) சந்தையிடுகை பணிகளின் துணைப் பணிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th வணிகவியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 12th Commerce - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment