அரையாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. தரவு வகை குறிப்பு எழுதும்போது, எது கட்டாயமாகிறது?

    (a)

    { }

    (b)

    ( )

    (c)

    [ ]

    (d)

    < >

  2. பின்வருவனவற்றுள் நிரலர்களை நிரல் குறியீட்டை ஒரு பொருளாக கருத வழிச் செய்வது எது?

    (a)

    தருவமாக்கம் 

    (b)

    தரவுஅருவமாக்கம் 

    (c)

    மரபுரிமம் 

    (d)

    செயலுறுப்புக்கள் 

  3. பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப்பயன்படுகிறது.

    (a)

    Ctrl + C

    (b)

    Ctrl + F

    (c)

    Ctrl + B

    (d)

    Ctrl + N

  4. மாற்று அல்லது கிளைப்பிரிவு கூற்று மூலம் நாம் கற்க இருப்பது 

    (a)

    மடக்கு 

    (b)

    முடிவெடுத்தல் 

    (c)

    செயற்கூறுகள் 

    (d)

    இனக்குழுக்கள் 

  5. பைத்தானில் வரையெல்லைகளை எத்தனை வகையாக பார்க்கலாம்?

    (a)

    3

    (b)

    4

    (c)

    2

    (d)

    பல வகையாக 

  6. பைத்தானில் சரங்களானது: ______.

    (a)

    மாற்றக்கூடியது

    (b)

    மாறக்கூடியது

    (c)

    பரஸ்பதன்மையற்றது

    (d)

    நெகிழ்வானது

  7. list அல்லது Tupleஐ _______ செயற்கூறு பயன்படுத்தி set ஆக மாற்ற முடியும்.

    (a)

    list ( )

    (b)

    tuple ( )

    (c)

    setlt ( )

    (d)

    set ( )

  8. இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் செயற்கூறு எது:

    (a)

    செயற்கூறு

    (b)

    கூறு

    (c)

    வழிமுறை

    (d)

    பிரிவு

  9. உறவுநிலை தரவுத்தள மாதிரி முதலில் யாரால் முன்மொழியப்பட்டது?

    (a)

    E F Codd

    (b)

    E E Codd

    (c)

    E F Cadd

    (d)

    E F Codder

  10. பின்வருவனவற்றுள் எவை கணினி அமைப்பிலிருந்து மின்னணு முறையில் பெறப்பட்டு சேமிக்கப்படுகின்ற தரவுகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொகுப்பு

    (a)

    Spreadsheet

    (b)

    தரவுதளம் 

    (c)

    DBMS 

    (d)

    தகவல் 

  11. பின்வருவனவற்றுள் எவை இணையதள நேரலை சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்

    (a)

    Windows

    (b)

    Google

    (c)

    WAMP

    (d)

    Google Chrome

  12. பின்வருபவனவற்றுள் CSV செயற்கூறில் writer( ) முறையால் வழங்கப்பட்டுள்ள வரிமுறிப்பான் எது?

    (a)

    Line Terminator

    (b)

    Enter key

    (c)

    Form feed

    (d)

    Data Terminator

  13. _____ அளபுரு சரங்களின் பட்டியலுடன் செலுத்தப்படுகிறது.

    (a)

    argv

    (b)

    options

    (c)

    long _ options

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  14. பின்வரும் எது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்?

    (a)

    தரவுத்தளம்

    (b)

    DBMS

    (c)

    தகவல்

    (d)

    பதிவுகள்

  15. பின்வரும் கூற்றை படித்து, வட்ட வரைபடத்திற்காக சரியான தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
    கூற்று A: plt.pie( ) செயற்கூற்றை பயன்படுத்தி Matplotlibல் வட்ட வரைப்படம் வரையலாம்.
    கூற்று B: autopct அளபுரு பைத்தான் சரம் வடிவமைப்பை பயன்படுத்தி சதவீத மதிப்பை காட்டும்.

    (a)

    கூற்று A சரி

    (b)

    கூற்று B சரி

    (c)

    இரு கூற்றும் வரி

    (d)

    இரு கூற்றும் தவறு

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. Pure செயற்கூறு என்றால் என்ன?

  18. Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  19. செயற்கூறுக்கு உள்ளே உள்ள மாரிகளின் ஏற்படும் மாற்றங்கள் செயற்கூறுவுக்கு வெளியே எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது? ஏன்?

  20. நெறிமுறை பகுப்பாய்வு மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை எத்தனை கட்டங்களாக பிரிக்கலாம்? விளக்குக

  21. பைத்தானில் உள்ள மாற்று அல்லது கிளைப்பிரிப்பு கூற்றின் வகைகளை எழுதுக.

  22. lower ( ) மற்றும் islower ( ) செயற்கூறுக்கான வேறுபாடு யாது?

  23. RDBMS-ன் சில எடுத்துக்காட்டுகளைப் பட்டியலிடுக

  24. ஒரு தரவுத்தளத்தை எவ்வாறு உருவாக்குவாய் எ.கா தருக

  25. csv.register-dialect ( ) செயற்கூறுகை பற்றி சிறுகுறிப்பு வரைக. 

  26. பகுதி - III

    ஏதேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33கு கட்டாயமாக விடை அளிக்கவும்.

    6 x 3 = 18
  27. செயற்கூற்றை வரையறுப்பதற்கான தொடரியல் விவரி.

  28. தரவு அருவமாக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன?

  29. உள்ளமை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  30. ஒரு எண்ணின் வர்க்கம் (sqare) கண்டுபிடித்து அதன் விடையை காண்பிப்பதற்கான நிரல் நெறிமுறையை எழுதுக

  31. மும்ம செயற்குறியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  32. வரிசை முறை கூற்றுகள் -எடுத்துக்காட்டுடன் சிறுகுறிப்பு வரைக.

  33. தற்சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது?

  34. எக்ஸ்லை பயன்படுத்தி CSV கோப்பினை எவ்வாறு உருவாக்குவாய்?

  35. MinGW என்றால் என்ன? அதன் பயன் யாது?

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. இனக்குழுவை பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண் ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை எண்ணா எனச் சோதித்து அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.

    2. Dictonary பயனர் வரையறுத்த பிரிப்பானை பயன்படுத்தி CSV கோப்பினை படிக்கும் பைத்தான் நிரலை எழுதவும்.

    1. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    2. பின்னலான Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    1. அனைத்து மூன்று இலக்க ஒற்றைப்படை எண்களை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.

    2. இரண்டு எண்களின் HCF கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

    1. செருகும் வரிசையாக்கத்தை பற்றி விளக்கமாக எழுதுக

    2. கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
      x=20
      x+=20
      print ("The x +=20 is =",x)
      x-=5
      print ("The x-=5 is =",x)
      x*=5
      print ("The x*=5 is =",x)
      x/=2
      print ("The x/=2 is =",x)
      x%=3
      print ("The x%=3 is =",x)
      x**=2
      print ("The x**=2 is =",x)
      x//=3
      print ("The x//=3 is =",x)
      #program End

    1. விகிதமுறு எண்களைக் கொண்டு அருவமாக்க தரவு வகையை உருவமைப்பு செய்தலை பற்றி விரிவாக எழுதுக.

    2. அணுகல் கட்டுப்பாடு - விளக்கமாக விவரிக்கவும்

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Computer Science - Half Yearly Model Question Paper )

Write your Comment