பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

    15 x 1 = 15
  1. செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    துணை நிரல்கள்

    (b)

    செயற்கூறு

    (c)

    அளப்புருக்கள்

    (d)

    செயலுறுபு

  2. பின்வரும் எதனை கொண்டு list அமைப்பு கோவைகள் பிரிக்கப்படவேண்டும்?

    (a)

    ( ), ,

    (b)

    < > , ;

    (c)

    [ ], ,

    (d)

    [ ] , :

  3. ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறை எனப்படுவது

    (a)

    தொகுதி நிரலாக்கம்

    (b)

    பொருள்நோக்கு நிரலாக்கம்

    (c)

    இடைமுக நிரலாக்கம்

    (d)

    வரையெல்லை நிரலாக்கம்

  4. Big O - வின் தலைகீழ் என்பது _________

    (a)

    Big Ω

    (b)

    Big α

    (c)

    Big β

    (d)

    Big Σ

  5. பின்வரும் எது வில்லைகள் கிடையாது?

    (a)

    நிரல்பெயர்ப்பி

    (b)

    குறிப்பெயர்கள்

    (c)

    சிறப்புச் சொற்கள்

    (d)

    செயற்குறிகள்

  6. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    x=lambda y,z =y+z 
    print (10,15)

    (a)

    10t 

    (b)

    15

    (c)

    25

    (d)

    1025

  7. பின்வரும் குறியிருப்புக்கான வெளியீடு யாது?
    str1 = "Chennai Schools"
    str1[7] = "-"

    (a)

    Chennai-Schools

    (b)

    Chenna-School

    (c)

    Type error

    (d)

    Chennai

  8. If List  =[10,20,30,40,50] எனில் List[2] = 35 ன் விடை ______.

    (a)

    [35,10,20,30,40,50]

    (b)

    [10,20,30,40,50,35]

    (c)

    [10,20,35,40,50]

    (d)

    [10,35,30,40,50]

  9. பைத்தானில் நமக்கு விருப்பமான இடத்தில் ஒரு உருப்பை சேர்க்க எந்த செயற்கூறு பயன்படுத்த வேண்டும்?

    (a)

    append ( )

    (b)

    Extend ( )

    (c)

    insert ( )

    (d)

    format ( )

  10. ஒரு tuple என்பது ______.

    (a)

    table

    (b)

    row

    (c)

    attribute

    (d)

    field

  11. எந்த கட்டளையானது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பதிவுகளின் துணைக் கூறுகளை மீட்டெடுக்கப் பயன்படுகிறது

    (a)

    QUERY

    (b)

    SUBSET

    (c)

    SET

    (d)

    SELECT

  12. dialct அளபுருவமான skipnitialspace என்பதன் கொடா நிலையான மதிப்பு 

    (a)

    True 

    (b)

    false 

    (c)

    on 

    (d)

    off 

  13. பைத்தான் மற்றும் C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு ______.

    (a)

    Ctypes

    (b)

    SWIG

    (c)

    Cython

    (d)

    Boost

  14. எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?

    (a)

    MAX( )

    (b)

    LARGE( )

    (c)

    HIGH( )

    (d)

    MAXIMUM( )

  15. பல்வேறு வகையான தரவுகளை ஒப்பிட பயன்படுவது எது?

    (a)

    பட்டை வரைபடம்

    (b)

    ஹிஸ்டோகிராம் வரைபடம்

    (c)

    வட்ட வரைபடம்

    (d)

    வரி விளக்கப்படம்

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    6 x 2 = 12
  17. அளபுருக்கள் மற்றும் செயலுருபுக்களின் வேறுபாட்டை எழுதுக.

  18. மேப்பிங் என்றால் என்ன?

  19. பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?

  20. break கூற்றின் செயல்பாட்டை பாய்வு படத்தின் மூலம் விளக்கவும்.

  21. பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பியை வரையறுக்க.

  22. CSV கோப்பினை திறக்கும் open கட்டளை எவ்வாறு கொடுக்கப்படல் வேண்டும்?

  23. கூறுநிலைகளின் பயன் யாது?

  24. தரவுத்தளத்தை இணைக்க பயன்படும் முறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  25. வரி விளக்கப்படம் என்றால் என்ன?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    6 x 3 = 18
  27. இரண்டு நேரம் முழு எங்களின் மீப்பெரு வகு எண்ணை கண்டுபிடிக்கும் pure செயற்கூற்றின் நெறிமுறையை எழுது.

  28. மாறிகளின் வரையெல்லை பற்றி குறிப்பு வரைக

  29. Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.

  30. செயற்கூறினை வரையறுக்கும் போது குறிப்பிடப்பட வேண்டிய குறிப்புகள் யாவை?

  31. del மற்றும் clear( ) செயற்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  32. RDMS - ன் பல்வேறு வகைகளை பயனர்களைப் பற்றி குறிப்பு வரைக.

  33. reader( ) செயற்கூறின் தொடரியலை எழுதுக.

  34. கீழ்காணும் கூற்றில் கூறுநிலை, செயற்குறி, வரையறையின் பெயர் ஆகியவற்றை அடையாளம் காண்க.
    welcome.display( )

  35. பைத்தானில் கூறுநிலைகளை எவ்வாறு தருவித்துக் கொள்வது?

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    2. Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.

    1. பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி கட்டளைகள் பற்றி விவரி.

    2. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
      அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
      தரவுத்தளத்தின் பெயர் :- ABC
      அட்டவணையின் பெயர் :- Item
      நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :-

      Icode :- integer and act as primary key
      Item Name :- Character with length 25
      Rate :- Integer
      Record to be added :- 1008, Monitor,15000
    1. அனைத்து மூன்று இலக்க ஒற்றைப்படை எண்களை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.

    2. பல்வேறு கோப்பு முறைமைகளின் பொருள்களை பட்டியலிடுக.

    1. தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    2. DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.

    1. கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
      x=20
      x+=20
      print ("The x +=20 is =",x)
      x-=5
      print ("The x-=5 is =",x)
      x*=5
      print ("The x*=5 is =",x)
      x/=2
      print ("The x/=2 is =",x)
      x%=3
      print ("The x%=3 is =",x)
      x**=2
      print ("The x**=2 is =",x)
      x//=3
      print ("The x//=3 is =",x)
      #program End

    2. பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 12th Computer Science - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment