" /> -->

திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 70

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  15 x 1 = 15
 1. ஒரு குறிப்பிட்டச் செயலைச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே

  (a)

  துணை நிரல்கள்

  (b)

  கோப்புகள்

  (c)

  Pseudo குறிமுறை

  (d)

  தொகுதிகள்

 2. பின்வரும் எதனின் உருவமைப்பு இனக்குழுக்கள்?

  (a)

  அருவமாக்க தரவுவகை 

  (b)

  உள்ளமைந்த தரவுவகை 

  (c)

  கான்கீரிட் தரவுவகை 

  (d)

  பயனர் வரையறுத்த தரவுவகை 

 3. மாறி மற்றும் பொருளை பிணைக்கும் குறியீடு செயல்குறி எது?

  (a)

  =

  (b)

  ! =

  (c)

  : =

  (d)

  = =

 4. கொடுக்கப்பட்ட சிக்கலைத் தீர்க்கும் படிநிலை உடைய செயல்முறை என்பது _________ 

  (a)

  வரையெல்லை

  (b)

  இடைமுகம்

  (c)

  செயல்படுத்துதல்

  (d)

  நெறிமுறை

 5. எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்

  (a)

  அரைப்புள்ளி

  (b)

  டாலர்

  (c)

  காற்புள்ளி

  (d)

  முக்காற்புள்ளி

 6. chr ( ) செயற்கூறின் தலைகீழ் செயற்கூறு எது?

  (a)

  type ( )

  (b)

  id ( )

  (c)

  format ( )

  (d)

  ord ( )

 7. பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicling) செயற்குறியாகும்?

  (a)

  {  }

  (b)

  [ ]

  (c)

  < >

  (d)

  ( )

 8. தரவினத் தொகுதியின் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க

  (a)

  List

  (b)

  Tuple

  (c)

  Dictionary

  (d)

  Loop

 9. பைத்தானில் உள்ள எந்த செயற்கூறு list-ன் நீளத்தை கண்டறிய பயன்படுகிறது?

  (a)

  len ( )

  (b)

  length ( )

  (c)

  list length ( )

  (d)

  lenlist ( )

 10. எந்த தரவுத்தள மாதிரி பெற்றோர் குழந்தை உறவுநிலையை குறிப்பிடுகிறது?

  (a)

  உறவுநிலை

  (b)

  வலையமைப்பு

  (c)

  படிநிலை

  (d)

  பொருள்

 11. ஒன்றுக்கு மேற்பட்ட புலனங்களை புதுப்பிக்க, SET clause பயன்படுத்தி அவற்றிற்கான மதிப்புகளை எதனால் பிரித்து குறிப்பிட வேண்டும்?

  (a)

  இடைவெளி

  (b)

  , காற்புள்ளி

  (c)

  ; அரைபுள்ளி

 12. ______ வழிமுறைகளில் CSV கோப்பினை படிக்கலாம்.

  (a)

  2

  (b)

  3

  (c)

  4

  (d)

  1

 13. நீங்கள் விண்டோஸ் இயக்க முறைமையுடன் தொடர்பு கொள்ள எந்த கூறுநிலை அனுமதிக்கிறது?

  (a)

  OS கூறுநிலை

  (b)

  sys கூறுநிலை

  (c)

  csv கூறுநிலை

  (d)

  getopt கூறுநிலை

 14. பின்வரும் எது முதன்மை அட்டவணை?

  (a)

  sqlite_master

  (b)

  sql_master

  (c)

  main_master

  (d)

  master_main

 15. ______ என்பது தரவு மற்றும் தகவல்களை வரைகலையாக உருவாக்குகிறது.

  (a)

  தரவு காட்சிப்படுத்துதல்

  (b)

  தரவு அருவமாக்கம்

  (c)

  பல்லூடகம்

  (d)

  செயற்கூறு

 16. பகுதி - II

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 2 = 12
 17. செயற்கூறு என்பது யாது?

 18. private மற்றும் protected அணுகியல்புகளை பைத்தான் எவ்வாறு குறிப்பிடுகிறது.

 19. எக்ஸ்போனைட் தரவு பற்றி குறிப்பு வரைக.

 20. மடக்கு அமைப்பில் break மற்றும் continue கூற்றுகளின் செயல்பாட்டை பாய்வு படத்தினை கொண்டு விளக்குக.

 21. பைத்தானில் இனக்குழுவை எவ்வாறு வரையறுப்பாய்.

 22. reader ( ) செயற்கூறு-சிறுகுறிப்பு வரைக.

 23. தொகுப்பான் மற்றும் வருமொழி மாற்றியை வேறுபடுத்துக.

 24. தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் பயனர்களை குறிப்பிடவும்.

 25. பட்டை வரைபடம் என்றால் என்ன?

 26. பகுதி - III

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 3 = 18
 27. செயற்கூறுவிற்கு வெளியில் மாறியை மாற்றுதல் ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்கமாக எழுதுக.

 28. மாறிகளின் வரையெல்லை பற்றி குறிப்பு வரைக

 29. நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.

 30. தற்சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது?

 31. பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?
  list = [2**x for x in range(5)]
  print(list)

 32. DBAவின் பணி என்ன?

 33. எக்ஸ்லை பயன்படுத்தி CSV கோப்பினை எவ்வாறு உருவாக்குவாய்?

 34. கீழ்காணும் கூற்றில் கூறுநிலை, செயற்குறி, வரையறையின் பெயர் ஆகியவற்றை அடையாளம் காண்க.
  welcome.display( )

 35. C++ நிரலைத் தருவித்துக் கொள்ளல் பற்றி சிறு குறிப்பு வரைக.

 36. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  5 x 5 = 25
 37. தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 38. கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
  x=20
  x+=20
  print ("The x +=20 is =",x)
  x-=5
  print ("The x-=5 is =",x)
  x*=5
  print ("The x*=5 is =",x)
  x/=2
  print ("The x/=2 is =",x)
  x%=3
  print ("The x%=3 is =",x)
  x**=2
  print ("The x**=2 is =",x)
  x//=3
  print ("The x//=3 is =",x)
  #program End

 39. அனைத்து மூன்று இலக்க ஒற்றைப்படை எண்களை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.

 40. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 41. DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.

 42. பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி கட்டளைகள் பற்றி விவரி.

 43. பைத்தானில் ஒரு கோப்பை படிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை எழுதுக.

 44. பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 45. HAVING துணைநிலைகூற்றின் பயன் யாது? எதுத்துக்காட்டு தருக.

 46. Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணினி அறிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Computer Science - Revision Model Question Paper 2 )

Write your Comment