முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது______.

    (a)

    நிறுமம்

    (b)

    அரசு

    (c)

    சிறிய அளவிலான தனிஆள் வணிகம்

    (d)

    பன்னாட்டு நிறுவனங்கள்

  2. தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது______.

    (a)

    தொடக்க முதல் கண்டறிய

    (b)

    இறுதி முதல் கண்டறிய

    (c)

    அவ்வாண்டின் இலாபம் கண்டறிய

    (d)

    அவ்வாண்டின் நட்டம் கண்டறிய

  3. கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

    (a)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு

    (b)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு

    (c)

    அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு

    (d)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது

  4. முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

    (a)

    இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை

    (b)

    ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.

    (c)

    இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்

    (d)

    வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை

  5. கடனாளிகள் தொடக்க இருப்பு: ரூ. 30,000, பெற்ற ரொக்கம்: ரூ. 1,00,000, கடன் விற்பனை: ரூ. 90,000; கடனாளிகள் இறுதி இருப்பு:?

    (a)

    ரூ. 30,000

    (b)

    ரூ. 1,30,000

    (c)

    ரூ. 40,000

    (d)

    ரூ. 20,000

  6. 2 x 2 = 4
  7. சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  8. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலைக் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனீந்தோர் 50,000
    வெளித் திருப்பம் 6,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 1,60,000
    2019, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 70,000
  9. 2 x 3 = 6
  10. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  11. 2017, ஏப்ரல் 1 அன்று கணேஷ் ரூ. 75,000 முதலுடன் தன்னுடைய தொழிலைத் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. 31.03.2018 ஆம் நாளைய அவருடைய ஏடுகளின் விவரங்கள் பின்வருமாறு.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்கம் 5,000 கடனாளிகள் 16,000
    சரக்கிருப்பு 18,000 கடனீந்தோர் 9,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 7,000 வங்கி ரொக்கம் 24,000
    அறைகலன் 3,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 6,000
    நிலம் மற்றும் கட்டடங்கள் 30,000    

    அவ்வாண்டில் தன்னுடைய சொந்தப் பயனுக்காக அவர் ரூ. 15,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 20,000. அவருடைய இலாபம் அல்லது நட்டத்தைக் கண்டறியவும்.

  12. 3 x 5 = 15
  13. அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் 1.4.2017 31.3.2018
    ரூ. ரூ.
    வங்கி இருப்பு 14,000 (வ) 18,000 (ப)
    கைரொக்கம் 800 1,500
    சரக்கிருப்பு 12,000 16,000
    கடனாளிகள் 34,000 30,000
    பொறித்தொகுதி 80,000 80,000
    அறைகலன் 40,000 40,000
    கடனீந்தோர் 60,000 72,000

    அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.

  14. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றம் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.

    விவரம் தொடக்க இருப்பு ரூ. இறுதி இருப்பு ரூ.
    கடனாளிகள் 60,000 55,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 1,000
    கடனீந்தோர் 25,000 28,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000 3,000
    பிற தகவல்கள் ரூ.
    கடளாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது 1,30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி 5,500
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 70,000
    சரக்களித்தோர் வழங்கிய தள்ளுபடி 3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது 7,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது 14,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 1,200
    வாராக்கடன் 3,500
  15. மளிகை வியாபாரம் நடத்திவரும் அர்ஜுன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

    விவரம் 1-4-2018
    ரூ.
    31-3-2019
    ரூ.
    பொறி மற்றும் இயந்திரம் 20,000 20,000
    சரக்கிருப்பு 9,000 16,000
    பற்பல கடனாளிகள் 2,000 5,300
    பற்பல கடனீந்தோர் 5,000 4,000
    வங்கி ரொக்கம் 4,000 6,000

    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் பிற தகவல்கள் பின்வருமாறு:

    விவரம் ரூ.
    விளம்பரம் 4,700
    உள்தூக்குக் கூலி 8,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 64,000
    எடுப்புகள் 2,000

    அவ்வாண்டின் மொத்த விற்பனை ரூ. 85,000. கொள்முதல் திருப்பம் ரூ. 2,000 மற்றும் விற்பனைத் திருப்பம் ரூ. 1,000. பொறி மற்றும் இயந்திரம் மீது 5% தேய்மானம் நீக்கவும். ரூ. 300 ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்க வேண்டும். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் Book Back Questions ( 12th Standard Accountancy - Accounts From Incomplete Records Book Back Questions )

Write your Comment