" /> -->

கூட்டாளி சேர்ப்பு Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு

  (a)

  சொத்து க/கு

  (b)

  பெயரளவு க/கு

  (c)

  ஆள்சார் க/கு

  (d)

  ஆள்சாரா க/கு

 2. மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது

  (a)

  ஆதாயம்

  (b)

  நட்டம்

  (c)

  செலவு

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 3. கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

  (a)

  முதல் விகிதம்

  (b)

  தியாக விகிதம்

  (c)

  ஆதாய விகிதம்

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 4. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

  (a)

  மறுமதிப்பீட்டு இலாபம்

  (b)

  பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்

  (c)

  புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்

  (d)

  முதலீட்டு மாறுபடும் நிதி

 5. பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

  (a)

  1:3

  (b)

  3:1

  (c)

  2:1

  (d)

  1:2

 6. 3 x 2 = 6
 7. மாலா மற்றும் விமலா எனும் கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31.03.2017 அன்று வர்ஷினி என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அவர் சேர்ந்த நாளில் நிறுவன ஏடுகளில் காப்பு நிதி ரூ.50,000 எனக் காட்டியது. காப்புநிதியை பகிர்ந்தளிக்க குறிப்பேட்டுப் பதிவு தரவும்.

 8. மகேஷ் மற்றும் தனுஷ் என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் அருண் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அருண் தன்னுடைய பங்கை மகேஷ் மற்றும் தனுஷ் ஆகிய இரு கூட்டாளிகளிடமிருந்தும் சம விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

 9. தியாக விகிதம் என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3.2 என இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
  (அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15,000 உயர்த்தப்பட்டது
  (ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4,000 குறைக்கப்பட்டது
  (இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1,000 உருவாக்கப்பட்டது.

 12. வாசு மற்றும் தேவி இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் நிலா என்பவரை 1/4 இலாப பங்கிற்கு கூட்டாண்மையில் சேர்க்கின்றனர். நிலா தன்னுடைய பங்காக ரூ.3,000 நற்பெயருக்கென செலுத்துகிறார். அவர்களின் புதிய இலாபப்பகிர்வு விகிதம் 3:3:2. நிலைமுதல் முறையில் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன எனக்கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளை உருவாக்கவும்

 13. சொத்துகள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்வதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் யாவை?

 14. 2 x 5 = 10
 15. ஆனந்த் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் முறையே 7 : 3 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31 மார்ச், 2018 ஆம் நாளைய அவர்களது இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு:

  பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
  முதல் கணக்குகள்:     நிலம் 60,000
  ஆனந்த் 50,000   சரக்கிருப்பு 40,000
  பாலு 30,000 80,000 கடனாளிகள் 20,000
  பற்பல கடனீந்தோர்   20,000 கைரொக்கம் 10,000
  இலாப நட்ட க/கு   30,000    
      1,30,000   1,30,000

  2018 ஏப்ரல் 1 ஆம் நாளன்று அவர்கள் சந்துரு என்பவரை கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு ஒப்புக்கொண்டு 1/4 பங்குக்கு கூட்டான்மையில் சேர்த்துக் கொண்டனர்
  (அ) சரக்கிருப்பு மதிப்பை ரூ.3,000 குறைப்பது
  (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.2,000 உருவாக்குவது
  (இ) நிலத்தின் மதிப்பை ரூ.10,000 மதிப்பேற்றம் செய்வது
  மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் முதல் கணக்கினை கூட்டாளி சேர்ப்பிற்குப் பின் தயாரிக்கவும்.

 16. சாய் மற்றும் சங்கர் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அந்நிறுவனத்தின் 2017 டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு இருந்தது.

  குறிப்பு
  பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ. ரூ.
  முதல் கணக்குகள்:     கட்டடம்   34,000
  சாய் 48,000   அறைகலன்   6,000
  சங்கர் 40,000 88,000 முதலீடுகள்   20,000
  கடனீந்தோர்   37,000 கடனாளிகள் 40,000  
  கொடுபடவேண்டிய கூலி   8,000 கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு 3,000 37,000
        பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு   12,000
        சரக்கிருப்பு   16,000
        வங்கி   8,000
      1,33,000     1,33,000

   2017, டிசம்பர் 31 இல் சண்முகம் என்பவர் 1/4 இலாபப்பகிர்வு விகிதத்தில் கூட்டாண்மையில் சேருகிறார். அவர் பின்வரும் சரிகட்டுதலுக்குட்பட்டு ரூ.12,000 முதலாக கொண்டு வருகிறார்.
  (அ) அறைகலன் ரூ.5,000 மற்றும் கட்டடம் ரூ.50,000 ஆகவும் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
  (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.5,500 ஆக உயர்த்த வேண்டும்.
  (இ) பதிவுறாத ரூ.6,000 மதிப்புள்ள முதலீடு கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும்.
  (ஈ) பதிவுறாத ரூ.2,500 மதிப்புள்ள பொறுப்பு பதிவு செய்யப்பட வேண்டும்.
  குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள முதல் கணக்கினையும் பதிவு செய்யவும்.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் - கூட்டாளி சேர்ப்பு Book Back Questions ( 12th Standard Accountancy - Admission of a Partner Book Back Questions )

Write your Comment