நிறுமக் கணக்குகள் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. முன்னுரிமைப் பங்கு என்பது
    (i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
    (ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு

    (a)

    (i) மட்டும் சரியானது

    (b)

    (ii) மட்டும் சரியானது

    (c)

    (i) மற்றும் (ii) சரியானது

    (d)

    (i) மற்றும் (ii) தவறான

  2. ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?

    (a)

    முகமதிப்பு

    (b)

    பெயரளவு மதிப்பு

    (c)

    செலுத்தப்பட்ட தொகை

    (d)

    அழைக்கப்பட்ட தொகை

  3. முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு _____.

    (a)

    பத்திர முனைமக் கணக்கு

    (b)

    அழைப்பு முன்பணக் கணக்கு

    (c)

    பங்குமுதல் கணக்கு

    (d)

    பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

  4. ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை_____.

    (a)

    பங்கொன்று ரூ.10

    (b)

    பங்கொன்று ரூ.8

    (c)

    பங்கொன்று ரூ.5

    (d)

    பங்கொன்று ரூ.2

  5. சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ரூ.10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை ரூ.2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை_____.

    (a)

    ரூ.700

    (b)

    ரூ.800

    (c)

    ரூ.900

    (d)

    ரூ.1,000

  6. 5 x 2 = 10
  7. தாய் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 நேர்மைப் பங்குகளை வெளியீடு செய்தது. விண்ணப்பத்தின்போது ரூ.5; ஒதுக்கீட்டின்போது ரூ.2; முதல் அழைப்பின்போது ரூ.2 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.1 செலுத்தவேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டு தொகை பெறப்பட்டது. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

  8. அருணா ஆலைகள் வரையறு நிறுமத்தின் பதிவு செய்யப்பட்ட பங்கு முதல் ரூ.5,00,000. அதில் 20,000 பங்குகளை ரூ.10 வீதம் பின்வருமாறு செலுத்ததக்க வகையில் வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது
    ரூ.4; ஒதுக்கீட்டின் மீது ரூ.4; முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. வெளியிட்டப் பங்குகள் அனைத்தும் ஒப்பப்பட்டன. அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஆனால், ஒரு பங்குதாரர் தான் வைத்துள்ள 300 பங்குகளுக்கான அனைத்து தொகைகளையும் ஒதுக்கீட்டின்போதே முழுவதுமாக செலுத்தி விட்டார்.
    குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  9. பங்கு என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

  10. அழைப்பு நிலுவை என்பதன் பொருள் என்ன?

  11. பங்குகள் ஏன் ஒறுப்பிழப்பு செய்யப்படுகின்றன?

  12. 5 x 3 = 15
  13. அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த ரூ.200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் லக்ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன். ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  14. முன்னுரிமைப் பங்குகளுக்கும், நேர்மைப் பங்குகளுக்குமுள்ள வேறுபாடுகளை கூறவும்

  15. அழைப்பு முன்பணம் குறித்து சுருக்கமாக எழுதவும்.

  16. சிறுகுறிப்பு வரைக.
    (அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
    (ஆ) காப்புமுதல்

  17. ரொக்கம் தவிர இதர மறுபயனுக்கு பங்கு வெளியீடு என்றால் என்ன?

  18. 4 x 5 = 20
  19. திவ்யா நிறுமம் 10,000 ரூ.10 மதிப்புள்ள நேர்மைப் பங்குகளை ரூ.2 முனைமத்தில் 14,000 பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. மிகுதியாகப் பெறப்பட்ட விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டுத் தொகையில் சரிக்கட்டப்படும். பங்கொன்றுக்கு விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.5 (முனைமம் ரூ.2 உட்பட) முதல் அழைப்பின்போது ரூ.3 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.2 செலுத்தப்பட வேண்டும். விகாஸ் என்ற பங்குதாரர் தன்னுடைய 300 பங்குகளுக்கு முதல் மற்றும் இறுதி அழைப்புகளை செலுத்தத் தவறினார். அனைத்துப் பங்குகளும் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன. அவற்றில் 200 பங்குகள் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  20. தங்கம் நிறுமம் பங்கொன்று ரூ.10 வீதம் 50,000 பங்குகளை, பங்கொன்று ரூ.2 வீதம் முனைமத்தில் வெளியிட்டது. தொகை கீழ்க்கண்டவாறு செலுத்தப்பட வேண்டும்
    விண்ணப்பத்தின் போது ரூ.5
    ஒதுக்கீட்டின் போது ரூ.5 (முனைமம் உட்பட)
    முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2
    அனைத்துப் பங்குகளும் ஒப்பப்பட்டன. பிரியா என்பவருக்கு ஒதுக்கப்பட்ட 500 பங்குகள் மீதான ஒதுக்கீட்டுத் தொகை, முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகை தவிர அனைத்துத் தொகையும் பெறப்பட்டது. அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு செய்த அனைத்து பங்குகளும் தேவி என்பவருக்கு ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  21. அஞ்சலி மாவு அரைக்கும் வரையறு நிறுமம் பங்கு ஒன்று ரூ.10 வீதம் ரூ.4,00,000 அங்கீகரிக்கப்பட்ட முதல் கொண்டுள்ளது. அதில், 30,000 நேர்மைப் பங்குகளை விண்ணப்பத்துடன் ரூ.2, ஒதுக்கீட்டில் ரூ.5 மற்றம் முதலாவது அழைப்பில் ரூ.3 பெற வெளியிட்டது. அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டன. அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஆனால், ஒதுக்கீட்டில், 500 பங்குள்ள ஒரு பங்குதாரர் முழுவதுமான தனது தொகையினை செலுத்திவிட்டார். குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  22. பாரடைஸ் வரையறு நிறுமம், ரூ.4,40,000 மதிப்புள்ள சொத்துகளை சுகுணா அறைகலன் வரையறு நிறுவனத்திடமிருந்து வாங்கியது. இதற்குப் பதிலாக ரூ.10 மதிப்புள்ள முழுவதும் செலுத்தப்பட்ட பங்குகளை செலுத்தி நிறைவு செய்தனர். பின்வரும் சூழலுக்கான பதிவுகளைத் தரவும்.
    அ) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
    ஆ) பங்குகளை 10% முனைமத்தில் வெளியிட்டால்

*****************************************

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் Chapter 7 நிறுமக் கணக்குகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Accountancy Chapter 7 Company Accounts Model Question Paper )

Write your Comment