" /> -->

நிறுமக் கணக்குகள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
  10 x 1 = 10
 1. முன்னுரிமைப் பங்கு என்பது
  (i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
  (ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு

  (a)

  (i) மட்டும் சரியானது

  (b)

  (ii) மட்டும் சரியானது

  (c)

  (i) மற்றும் (ii) சரியானது

  (d)

  (i) மற்றும் (ii) தவறான

 2. நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்

  (a)

  அங்கீகரிக்கப்பட்ட முதல்

  (b)

  அழைக்கப்பட்ட முதல்

  (c)

  முதலினக் காப்பு

  (d)

  காப்பு முதல்

 3. ஒறுப்பிழப்பு செய்யும்போது பங்கு முதல் கணக்கு எதில் பற்று வைக்கப்படுகிறது?

  (a)

  முகமதிப்பு

  (b)

  பெயரளவு மதிப்பு

  (c)

  செலுத்தப்பட்ட தொகை

  (d)

  அழைக்கப்பட்ட தொகை

 4. ஒறுப்பிழப்புச் செய்த பங்குகளை மறுவெளியீடு செய்த பிறகு, பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கின் இருப்பு மாற்றப்படுவது

  (a)

  பொதுக்காப்பு கணக்கிற்கு

  (b)

  முதலினக் காப்பு கணக்கிற்கு

  (c)

  பத்திர முனைமக் கணக்கிற்கு

  (d)

  உபரி கணக்கிற்கு

 5. முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

  (a)

  பத்திர முனைமக் கணக்கு

  (b)

  அழைப்பு முன்பணக் கணக்கு

  (c)

  பங்குமுதல் கணக்கு

  (d)

  பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

 6. பின்வரும் வாக்கியங்களில் எது தவறானது?

  (a)

  வெளியிடப்பட்ட பங்குமுதல் அங்கீகரிக்கப்பட்ட பங்குமுதலை விட ஒருபோதும் அதிகமாக இருக்கக் கூடாது.

  (b)

  பங்குகள் குறை ஒப்பமாக இருக்கும் நிலையில் வெளியிடப்பட்ட பங்குமுதல், ஒப்பிய பங்குமுதலை விட குறைவாக இருக்கும்

  (c)

  காப் காப்பு முதல் நிறுமத்தை கலைக்கும்போது செலுத்துமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

  (d)

  செலுத்தப்பட்ட பங்குமுதல், அழைக்கப்பட்ட பங்கு முதலின் ஒரு பகுதி ஆகும்

 7. சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு

  (a)

  விற்பனையாளர் க/கு

  (b)

  பற்பல சொத்துகள் க/கு

  (c)

  பங்குமுதல் க/கு

  (d)

  வங்கி க/கு

 8. சரியான குறியீட்டைப் பயன்படுத்தி பொருத்தமான இணையை தேர்ந்தெடுக்கவும்

  (A) குறை ஒப்பம்  (i) முன்கூட்டிச் செலுத்திய அழைப்பு பணம் 
  (B) மிகை ஒப்பம் (ii) வெளியிட்ட பங்குகளை விட அதிகமாக ஒப்பப்பட்டது
  (C)அழைப்பு நிலுவை (iii) வெளியிட்ட பங்குகளை விட குறைவாக ஒப்பப்பட்டது
  (D) அழைப்பு முன்பணம் (iv) செலுத்தப்பெறாத அழைப்பு பணம்
  (a)
  (A) (B) (C) (D)
  (i) (ii) (iii) (iv)
  (b)
  (A) (B) (C) (D)
  (iv) (iii) (ii) (i)
  (c)
  (A) (B) (C) (D)
  (iii) (ii) (iv) (i)
  (d)
  (A) (B) (C) (D)
  (iii) (iv) (i) (ii)
 9. ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை

  (a)

  பங்கொன்று ரூ.10

  (b)

  பங்கொன்று ரூ.8

  (c)

  பங்கொன்று ரூ.5

  (d)

  பங்கொன்று ரூ.2

 10. சுப்ரீம் நிறுமம் பங்கொன்று ரூ.10 மதிப்புடைய 100 பங்குகளை இறுதி அழைப்புத்தொகை ரூ.2 செலுத்தாததால் ஒறுப்பிழப்பு செய்தது. அவை அனைத்தும் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. முதலினக் காப்புக்கு மாற்றப்பட வேண்டிய தொகை.

  (a)

  ரூ.700

  (b)

  ரூ.800

  (c)

  ரூ.900

  (d)

  ரூ.1,000

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் நிறுமக் கணக்குகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Accountancy Company Accounts One Marks Question And Answer )

Write your Comment