முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

  (a)

  நிறுமம்

  (b)

  அரசு

  (c)

  சிறிய அளவிலான தனிஆள் வணிகம்

  (d)

  பன்னாட்டு நிறுவனங்கள்

 2. முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

  (a)

  இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை

  (b)

  ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.

  (c)

  இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்

  (d)

  வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை

 3. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு

  (a)

  பெயரளவு கணக்கு

  (b)

  சொத்து கணக்கு

  (c)

  ஆள்சார் கணக்கு

  (d)

  பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

 4. பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?

  (a)

  பழைய செய்தித்தாள்கள் விற்றது

  (b)

  சொத்து விற்பனை மீதான நட்டம் 

  (c)

  செயலாளருக்கு வழங்கிய மதிப்பூதியம்

  (d)

  அறைகலன் விற்ற தொகை

 5. ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ரூ.100 செலுத்துகின்றனர்.நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ. 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

  (a)

  ரூ 50,000

  (b)

  ரூ 50,200

  (c)

  ரூ 49,000

  (d)

  ரூ 49,800

 6. 5 x 2 = 10
 7. பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:

  விவரம் ரூ.
  2018, ஏப்ரல் 1 இல் முதல் 1,60,000
  2019, மார்ச் 31 இல் முதல் 1,50,000
  அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 25,000
  அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
 8. சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

  விவரம் ரூ. விவரம் ரூ.
  பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
  செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
  இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
  அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

  2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

 9. வேலூர் பொழுதுபோக்கு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

  விவரம் ரூ  விவரம் ரூ
  தொடக்க இருப்பு (1.4.2016) 3,000 கேளிக்கை வரவுகள் 20,000
  தொடக்க வங்கி இருப்பு (1.4.2016) 12,000 சேர்க்கைக் கட்டணம் பெற்றது 1,000
  அறைகலன் வாங்கியது 11,000 நகராட்சி வரி 22,000
  விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது 11,000 அறக்கொடை நாடகக்காட்சி செலவு 2,000
  விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை 8,000 பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது 15,000
  பழைய டென்னிஸ் பந்துகள் விற்றது 1,500 புதிய டென்னிஸ் மைதானம் கட்டியது 18,000
  செய்தித்தாள்கள் வாங்கியது 500 அறக்கொடை நாடகக்காட்சிவரவுகள் 2,500
  பயணச் செலவுகள் 4,500 இறுதி கைரொக்க இருப்பு 8,000
 10. ஆயுள் உறுப்பினர் கட்டணம் – சிறு குறிப்பு தரவும்

 11. இலாப நோக்கற்ற அமைப்பின் வருவாயின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்

 12. 5 x 3 = 15
 13. அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

  விவரம் 1.4.2017 31.3.2018
  ரூ. ரூ.
  வங்கி இருப்பு 14,000 (வ) 18,000 (ப)
  கைரொக்கம் 800 1,500
  சரக்கிருப்பு 12,000 16,000
  கடனாளிகள் 34,000 30,000
  பொறித்தொகுதி 80,000 80,000
  அறைகலன் 40,000 40,000
  கடனீந்தோர் 60,000 72,000

  அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.

 14. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலைக் கணக்கிடவும்:

  விவரம் ரூ.
  2018, ஏப்ரல் 1 அன்று கடனீந்தோர் 50,000
  வெளித் திருப்பம் 6,000
  கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 1,60,000
  2019, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 70,000
 15. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.

  எழுதுபொருள்களுக்காககொடுத்த தொகை (2017-2018) ரூ1,500
  எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) ரூ 200
  எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018)  ரூ 200

 16. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு என்றால் என்ன

 17. இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதிக் கணக்குகளில் ஆண்டுச் சந்தா எவ்வாறு கையாளப்பளப்படுகிறது?

 18. 4 x 5 = 20
 19. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்:

  விவரம் ரூ.
  2018, ஏப்ரல் 1 அன்று முதல் 40,000
  2019, மார்ச் 31 அன்று முதல் 50,000
  அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 7,000
  அவ்வாண்டின் இலாபம் 8,000
  அவ்வாண்டில் எடுப்புகள் ?
 20. பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறுதோன்றும்?

  விவரம் ரூ
  1.4.2017 அன்று பரிசு நிதி 60,000
  1.4.2017 அன்று பரிசு நிதிக்கான முதலீடு 60,000
  பரிசு நிதி முதலீடு மீதான வட்டிப் பெற்றது 6,000
  பரிசுகள் வழங்கியது 8,000
  பரிசு நிதிக்காக நன்கொடைப் பெற்றது 12,000
 21. சிவகாசி ஓய்வூதியர் மனமகிழ் மன்றத்தின் பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

  ப 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
  பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ
  இருப்பு கீ/கொ     வாடகையும், வரியும் 18,000
  கைரொக்கம்  10,000   மின் கட்டணம் 17,000
  வங்கி ரொக்கம் 20,000 30,000 அறைகலன் வாங்கியது 12,000
  சந்தா     பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது 70,000
  2016 – 2017 5,000   பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல்  16,000
  2017 – 2018 25,000   சிறப்பு விருந்து செலவுகள் 4,000
  2018 – 2019 6,000 36,000 பற்பலச் செலவுகள் 2,000
  உயில்கொடை   40,000 இருப்பு கீ/இ  
  அரங்க வாடகை   14,000 கைரொக்கம்  1,000
  பாதுகாப்பு பெட்டக வாடகை    5,000    
  சிறப்பு விருந்திற்கான வசூல்   12,000    
  இருப்பு கீ/இ        
  வங்கி மேல்வரைப்பற்று   3,000    
      1,40,000   1,40,000

  கூடுதல் தகவல்கள்:
  (i) சங்கத்தின் 300 உறுப்பினர்கள் தலா ரூ100 வீதம் ஆண்டுச்சந்தா செலுத்துகின்றனர்.
  (ii) 1.4.2017 அன்று சங்கத்தின் அறைகலன் இருப்பு ரூ10,000
  (iii) 2016-2017 ஆம் ஆண்டிற்கான கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ.1,000.

 22. விருதுநகர் கைப்பந்து சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.

  ப 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ.
  பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள் ரூ ரூ 
  இருப்பு கீ/கொ      விளையாட்டுப் போட்டிச்    
  கைரொக்கம்   5,000 செலவுகள்   25,000
  சந்தா     விளையாட்டு அரங்க பராமரிப்பு   17,000
  2017 10,000   செயலாளருக்கான மதிப்பூதியம்   18,000
  2018 55,000   பந்து மற்றும் மட்டைகள்    
  2019 5,000 70,000 வாங்கியது   22,000
  நன்கொடைகள்   40,000 புல் விதைகள் வாங்கியது   2,000
  விளையாட்டுப் போட்டி     நிலைவைப்பு   58,000
  நிதி வரவுகள்   30,000 பல்வகைச் செலவுகள்   3,000
  நிலைவைப்பு மீதான வட்டி   8,000 இருப்பு கீ/இ    
  இதர வரவுகள்   5,000 கைரொக்கம் 7,000  
        வங்கி ரொக்கம் 6,000 13,000
      1,58,000     1,58,000

  கூடுதல் தகவல்கள்:
  (i) 1.1.2018 அன்று சங்கத்தில் இருந்த முதலீடுகள் ` 10,000; வளாகம் மற்றும் மைதானங்கள் ரூ.40,000 ; பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ.5,000.
  (ii) 2017 ஆம் ஆண்டிற்கான சந்தா இன்னும் பெறவேண்டியது ரூ.5,000
  (iii) 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ.6,000.
  2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்ககையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Accountancy First Mid Term Model Question Paper )

Write your Comment