கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

    (a)

    நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து

    (b)

    நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து

    (c)

    நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து

    (d)

    நற்பெயரினை வாங்க முடியாது

  2. ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது _____.

    (a)

    சராசரி இலாபம்

    (b)

    சாதாரண இலாப விகிதம்

    (c)

    எதிர்நோக்கும் இலாப விகிதம்

    (d)

    இவைகளில் ஏதுமில்லை

  3. சரியற்ற இணையினை அடையாளம் காணவும்.

    (a)

    சராசரி இலாபமுறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

    (b)

    உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

    (c)

    ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் x ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு

    (d)

    கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் x கொள்முதல் ஆண்டுகளின் எண்ணிக்கை

  4. 2017- ல் கணக்கேட்டின்படி இலாபம் ரூ.35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.2,000 எனில், சரிக்கட்டப்பட்ட இலாபம்_____.

    (a)

    ரூ.36,000

    (b)

    ரூ.35,000

    (c)

    ரூ.38,000

    (d)

    ரூ.34,000

  5. ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ரூ.1,00,000; சொத்துகள் ரூ.1,50,000 மற்றும் பொறுப்புகள் ரூ.80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு _____.

    (a)

    ரூ.40,000

    (b)

    ரூ.70,000

    (c)

    ரூ.1,00,000

    (d)

    ரூ.30,000

  6. 3 x 2 = 6
  7. நற்பெயர் என்றால் என்ன?

  8. உயர் இலாபம் என்றால் என்ன?

  9. கூட்டாண்மை நிறுவனத்தில் நற்பெயரை மதிப்பிடும் ஏதேனும் இரண்டு சூழ்நிலைகளைத் தரவும்.

  10. 3 x 3 = 9
  11. ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
    2014:  ரூ.4,000; 2015: ரூ.3,000; 2016: ரூ.5,000; 2017: ரூ.4,500 மற்றும் 2018: ரூ.3,500. 5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  12. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
    (அ) ஈட்டிய இலாபங்கள் : 2016: ரூ.30,000; 2017: ரூ.29,000 மற்றும் 2018: ரூ.32,000.
    (ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
    (இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.2,000 குறைக்கப்பட்டது.
    (ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.5,600 என மதிப்பிடப்பட்டது.
    3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  13. பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 5 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) பயன்படுத்தப்பட்ட முதல் : ரூ.1,20,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் : 20%
    (இ) 5 ஆண்டுகளுக்குரிய நிகர இலாபம் :
    2014: ரூ.30,000; 2015: ரூ.32,000; 2016: ரூ.35,000; 2017: ரூ.37,000 மற்றும் 2018: ரூ.40,000
    (ஈ) கூட்டாளிகளுக்கான உழைப்பூதியம் ஆண்டுக்கு ரூ.2,800.

  14. 2 x 5 = 10
  15. ஒரு கூட்டாண்மை நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக ஈட்டிய நிகர இலாபங்கள் பின்வருமாறு:
    2016: ரூ.20,000; 2017: ரூ.17,000 மற்றும் 2018: ரூ.23,000.
    மேற்குறிப்பிட்ட காலம் முழுவதும் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.80,000. நிறுவனம் கொண்டுள்ள இடரினைக் கருத்தில் கொண்டு, பயன்படுத்தப்பட்ட முதல் மீதான சாதாரண இலாப வீதம் 15% என கருதப்பட்டது. உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  16. பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் காணவும்.
    (அ) சராசரி இலாபம் ரூ.20,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
    (இ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.1,50,000

*****************************************

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை கணக்குகள் - நற்பெயர் Book Back Questions ( 12th Standard Accountancy - Goodwill In Partnership Accounts Book Back Questions )

Write your Comment