கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
  10 x 1 = 10
 1. கூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது

  (a)

  நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்

  (b)

  முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்

  (c)

  கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்

  (d)

  கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்

 2. கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து கூட்டாளி விலகலின்போது பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு இந்த அடிப்படையில் பகிரப்படுகிறது

  (a)

  புதிய இலாபப் பகிர்வு விகிதம்

  (b)

  பழைய இலாபப் பகிர்வு விகிதம்

  (c)

  ஆதாய விகிதம்

  (d)

  தியாக விகிதம்

 3. கூட்டாளி விலகலின் பொதுக்காப்பு மாற்றப்படுவது

  (a)

  அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு

  (b)

  மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு

  (c)

  தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு

  (d)

  நினைவுக் குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு

 4. மறுமதிப்பீட்டின்போது, பொறுப்புகளின் அதிகரிப்பு தருவது

  (a)

  ஆதாயம்

  (b)

  நட்டம்

  (c)

  இலாபம்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 5. ஒரு கூட்டாளி விலகலின்போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?

  (a)

  மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்டம் மாற்றப்படுவதற்கு

  (b)

  பகிர்ந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்தளிப்பதற்கு

  (c)

  நற்பெயரை சரிக்கட்டுவதற்கு 

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை 

 6. விலகும் கூட்டாளிக்குரிய தீர்வுத்தொகை உடனடியாக செலுத்தாதபோது, அது மாற்றப்படும் கணக்கு

  (a)

  வங்கி க/கு

  (b)

  விலகும் கூட்டாளியின் முதல் க/கு

  (c)

  விலகும் கூட்டாளியின் கடன் க/கு

  (d)

  பிற கூட்டாளிகளின் முதல் க/கு

 7. ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த ‘A’ என்பவர் 2019, மார்ச் 31 அன்று இறந்து விட்டார். அவருக்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை ரூ.25,000 உடனடியாகச் செலுத்தப்படவில்லை. அது மாற்றப்பட வேண்டிய கணக்கு

  (a)

  A-ன் முதல் கணக்கு

  (b)

  A-ன் கடன் கணக்கு

  (c)

  A –ன் நிறைவேற்றாளர் கணக்கு

  (d)

  A –ன் நிறைவேற்றாளர்கடன் கணக்கு

 8. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின்போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்

  (a)

  ரூ.20,000 மற்றும் ரூ.10,000

  (b)

  ரூ. 8,000 மற்றும் ரூ.4,000

  (c)

  ரூ.10,000 மற்றும் ரூ.20,000

  (d)

  ரூ.15,000 மற்றும் ரூ.15,000

 9. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4:2:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார். A மற்றும் B யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்.

  (a)

  4:3

  (b)

  3:4

  (c)

  2:1

  (d)

  1:2

 10. X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.

  (a)

  ரூ. 1,000

  (b)

  ரூ. 3,000

  (c)

  ரூ.12,000

  (d)

  ரூ.36,000

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Accountancy Retirement and Death of a Partner One Marks Question And Answer )

Write your Comment