" /> -->

இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. Sc(Z=21) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் Zn(Z=30) இடைநிலைத் தனிமம் அல்ல ஏனெனில்

  (a)

  Sc3+ மற்றும் Zn2+ ஆகிய இரு அயனிகளும் நிறமற்றவை மேலும் வெண்மை நிற சேர்மங்களை உருவாக்குகின்றன

  (b)

  d-ஆர்பிட்டால் ஆனது Sc-ல் பகுதியளவு நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் Zn-ல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது.

  (c)

  Zn-ல் கடைசி எலக்ட்ரான் 4s ஆர்பிட்டாலில் நிரம்புவதாக கருதப்படுகிறது

  (d)

  Sc மற்றும் Zn ஆகிய இரண்டும் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெற்றிருப்பதில்லை.

 2. பின்வருவனவற்றுள் எதனுடைய சேர்மம் நிறமற்றது?

  (a)

  Fe3+

  (b)

  Ti4+

  (c)

  Co2+

  (d)

  Ni2+

 3. பின்வருவனவற்றுள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஜனை வெளியிடாத சேர்மம் எது?

  (a)

  K2Cr2O7

  (b)

  (NH4)2Cr2O7

  (c)

  KClO3

  (d)

  Zn(ClO3)2

 4. கார pH மதிப்புடைய கரைசலில் MnO4- ஆனது Br- உடன் வினைபுரிந்து தருவது

  (a)

  BrO3- MnO2

  (b)

  Br2,MnO42-

  (c)

  Br2,MnO2

  (d)

  BrO-MnO42-

 5. 1 மோல் பொட்டாசியம் டைகுரோமேட் ஆனது பொட்டாசிய அயோடைடுடன் வினைபட்டு வெளியேற்றும் அயோடினின் மோல்களின் எண்ணிக்கை?

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 6. பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை யாது?

  (a)

  4

  (b)

  2

  (c)

  5

  (d)

  3

 7. கூற்று: Ce4+ ஆனது பருமனறி பகுப்பாய்வில் ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது,
  காரணம் : Ce4+ ஆனது +3 ஆக்சிஜனேற்ற நிலையை அடையும் தன்மையினைக் கொண்டுள்ளது

  (a)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்

  (b)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல 

  (c)

  கூற்று சரி ஆனால் காரணம் தவறு

  (d)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

 8. ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை

  (a)

  +2

  (b)

  +3

  (c)

  +4

  (d)

  +6

 9. +7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம்

  (a)

  Np, Pu ,Am

  (b)

  U, Fm, Th

  (c)

  U, Th, Md

  (d)

  Es, No, Lr

 10. பின்வருவனவற்றுள் சரியில்லாதது எது?

  (a)

  La(OH)3 ஆனது Lu(OH)3 ஐக்காட்டிலும் குறைவான காரத்தன்மை உடையது.

  (b)

  லாந்தனாய்டு வரிசையில் Ln3+ அயனிகளின் அயனி ஆர மதிப்பு குறைகிறது.

  (c)

  La ஆனது லாந்தனாய்டு தொடரில் உள்ள தனிமம் என்பதை விட ஒரு இடைநிலை தனிமம் என்பதே சரி

  (d)

  லாந்தனாய்டு குறுக்கத்தின் விளைவாக Zr மற்றும் Hf ஒத்த அணு ஆர மதிப்பினைப் பெற்றுள்ளன.

 11. 5 x 2 = 10
 12. இடைநிலைத் தனிமங்கள் என்பன எவை? உதாரணம் தருக

 13. 4d வரிசை தனிமங்களின் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.

 14. உள்இடைநிலை தனிமங்கள் என்றால் என்ன?

 15. லாந்தனாய்டுகள் மற்றும் ஆக்டினாய்டுகள் தனிம வரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினை நிறுவுக.

 16. ஆக்டினாய்டுகள் என்றால் என்ன? மூன்று உதாரணங்கள் தருக.

 17. 5 x 3 = 15
 18. Fe3+ மற்றும் Fe2+ல் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?

 19. 3d வரிசையில் E0M3+/M2+ மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை விவரி

 20. லாந்தனாய்டுகளையும், ஆக்டினாய்டுகளையும் ஒப்பிடுக.

 21. Cr2+ ஆனது வலிமையான ஆக்சிஜனொடுக்கி ஆனால் Mn3+ ஆனது வலிமையான ஆக்சிஜனேற்றி விளக்குக.

 22. முதல் இடைநிலை வரிசை தனிமங்களின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளை ஒப்பிடுக.

 23. 3 x 5 = 15
 24. Cr2+ அல்லது Fe2+ இவற்றுள் எது வலிமையான ஆக்சிஜனொடுக்கி?

 25. தாமிரத்தின் E0M2+/M மதிப்பு நேர்க்குறி மதிப்புடையது. இதற்கான தகுந்த சாத்தியமான காரணத்தை கூறுக.

 26. 3d வரிசையில் எத்தனிமம் +1 ஆக்சிஜனேற்ற நிலையைக் கொண்டுள்ளது. ஏன்?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வேதியியல் Chapter 4 இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Chemistry Chapter 4 Transition And Inner Transition Elements Model Question Paper )

Write your Comment