திட நிலைமை மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே ______________

    (a)

    சகப்பிணைப்பு மற்றும் மூலக்கூறு படிகங்கள்

    (b)

    அயனி மற்றும் சகப்பிணைப்பு படிகங்கள்

    (c)

    இரண்டும் சகப்பிணைப்பு படிகங்கள்

    (d)

    இரண்டும் மூலக்கூறு படிகங்கள்

  2. ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும்  F அயனிகளின் அணைவு எண்கள் முறையே ____________

    (a)

    4 மற்றும் 2

    (b)

    6 மற்றும் 6

    (c)

    8 மற்றும் 4

    (d)

    4 மற்றும் 8

  3. வைரத்தின் ஒரு அலகு கூட்டில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை.___________

    (a)

    8

    (b)

    6

    (c)

    1

    (d)

    4

  4. ஒரு உர்ஸைட்டின் மாதிரியின் இயைபு Fe0.93O1.00 இதில் இடம் பெற்றுள்ள இரும்பில் எத்தனை சதவீதம் Fe3+ அயனிகளாக உள்ளது?

    (a)

    16.05%

    (b)

    15.05%

    (c)

    18.05%

    (d)

    17.05%

  5. A+ மற்றும் B- ஆகியனவற்றின் அயனி ஆர மதிப்புகள் முறையே 0.98x 10-10m மற்றும் 1.81x10-10 m ஆகும். ABல் உள்ள ஒவ்வொரு அயனியின் அணைவு எண் _____________

    (a)

    8

    (b)

    2

    (c)

    6

    (d)

    4

  6. ஒரு அணுவின் ஆர மதிப்பு 300pm அது முகப்புமைய கனச்சதுர அமைப்பில் படிகமானால், அலகு கூட்டின் விளிம்பு நீளம் _____________

    (a)

    488.5pm

    (b)

    848.5pm

    (c)

    884.5pm

    (d)

    484.5pm

  7. எளிய கனசதுர அமைப்பில் மொத்த கனஅளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கனஅளவின் விகிதம் ___________

    (a)

    \(\left( \frac { \pi }{ 4\sqrt { 2 } } \right) \)

    (b)

    \(\left( \frac { \pi }{ 6 } \right) \)

    (c)

    \(\left( \frac { \pi }{ 4 } \right) \)

    (d)

    \(\left( \frac { \pi }{ 3\sqrt { 2 } } \right) \)

  8. ஒரு படிகத்தில் ஷாட்கி குறைபாடு பின்வரும் நிலையில் உணரப்படுகிறது.

    (a)

    சமமற்ற எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்

    (b)

    சமமான எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்

    (c)

    ஒரு அயனி அதன் வழக்கமான இடத்தில் இடம் பெறாமல் அணிக்கோவை இடைவெளியில் இடம் பெறுதல்

    (d)

    படிக அணிக் கோவையில் எந்த ஒரு அயனியும் இடம் பெறாத நிலை இல்லாதிருத்தல்

  9. ஒரு படிகத்தின் நேர் அயனி அதன் வழக்கமான இடத்தில் இடம் பெறாமல், படிக அணிக்கோவை இடைவெளியில் இடம் பெற்றிருப்பின், அப்படிக குறைபாடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    (a)

    ஷாட்கி குறைபாடு

    (b)

    F-மையம்

    (c)

    பிராங்கல் குறைபாடு

    (d)

    வேதி வினைக்கூறு விகிதமற்ற குறைபாடு

  10. உலோகக் குறையுள்ள குறைபாடு காணப்படும் படிகம் ______________

    (a)

    NaCl

    (b)

    FeO

    (c)

    ZnO

    (d)

    KCl

  11. 5 x 2 = 10
  12. அலகுக் கூட்டினை வரையறு. 

  13. படிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக. 

  14. ஏழு வகையான அலகு கூடுகளை சுருக்கமாக விளக்குக.

  15. எண்முகி மற்றும் நான்முகி வெற்றிடங்களை வேறுபடுத்துக.

  16. புள்ளி குறைபாடுகள் என்றால் என்ன?

  17. 5 x 3 = 15
  18. ஷாட்கி குறைபாட்டினை விளக்குக.

  19. உலோகம் அதிகமுள்ள குறைபாடு மற்றும் உலோகம் குறைவுபடும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுடள் விளக்குக

  20. Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.

  21. AAAA, ABABA மற்றும் ABC ABC வகை முப்பரிமாண நெருங்கிப் பொதிந்த அமைப்புகளை தகுந்த படத்துடன் விளக்குக.

  22. அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?

  23. 3 x 5 = 15
  24. அலுமினியமானது கனச்சதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில் படிகமாகிறது. அதன் உலோக ஆரம் 125pm அலகுகூட்டின் விளிம்பு நீளத்தைக் கணக்கிடுக.

  25. 10-2 mol சதவீதத்தில் ஸ்ட்ரான்சியம் குளோரைடானது NaCl படிகத்தில் மாசாக சேர்க்கப்படுகிறது. நேர் அயனி வெற்றிடத்தின் செறிவினைக் கண்டறிக.

  26. அலகு கூட்டின் விளிம்பு நீளம் 4.3x10-8cm ஆக உள்ள bcc வடிவமைப்பில் சோடியம் படிகமாகிறது. சோடியம் அணுவின் அணு ஆர மதிப்பினைக் கண்டறிக

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் திட நிலைமை மாதிரி வினாத்தாள் ( 12th Standard Chemistry Solid State Model Question Paper )

Write your Comment