" /> -->

திட நிலைமை ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
  20 x 1 = 20
 1. கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே 

  (a)

  சகப்பிணைப்பு மற்றும் மூலக்கூறு படிகங்கள்

  (b)

  அயனி மற்றும் சகப்பிணைப்பு படிகங்கள்

  (c)

  இரண்டும் சகப்பிணைப்பு படிகங்கள்

  (d)

  இரண்டும் மூலக்கூறு படிகங்கள்

 2. கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையேயான விகிதம்

  (a)

  1:1

  (b)

  1:2

  (c)

  2:11

  (d)

  1:4

 3. திண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு

  (a)

  சகப்பிணைப்பு திண்மம்

  (b)

  உலோகத் திண்மம்

  (c)

  மூலக்கூறு திண்மம்

  (d)

  அயனி திண்மம்

 4. ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும்  F– அயனிகளின் அணைவு எண்கள் முறையே

  (a)

  4 மற்றும் 2

  (b)

  6 மற்றும் 6

  (c)

  8 மற்றும் 4

  (d)

  4 மற்றும் 8

 5. அணு நிறை 40 உடைய 8g  அளவுடைய X என்ற தனிமத்தின் அலகுக்கூடுகளின் எண்ணிக்கையினைக் கண்டறிக. இத்தனிமம் bcc வடிவமைப்பில் படிகமாகிறது.

  (a)

  6.023 X 1023

  (b)

  6.023 X 1022

  (c)

  60.23 X 1023

  (d)

  \(\left( \frac { 6.023\times { 10 }^{ 23 } }{ 8\times 40 } \right) \)

 6. ஒரு திண்மத்தின், M என்ற அணுக்கள் ccp அணிக்கோவை புள்ளிகளில் இடம் பெறுகின்றன.மேலும் \((\frac{1}{3})\) பங்கு நான்முகி வெற்றிடங்கள் N என்ற அணுவால் நிரப்பட்டுள்ளது. M மற்றும் N ஆகிய அணுக்களால் உருவாகும் திண்மம்

  (a)

  MN

  (b)

  M3N

  (c)

  MN3

  (d)

  M3N2

 7. ஒரு உர்ஸைட்டின் மாதிரியின் இயைபு Fe0.93O1.00 இதில் இடம் பெற்றுள்ள இரும்பில் எத்தனை சதவீதம் Fe3+ அயனிகளாக உள்ளது?

  (a)

  16.05%

  (b)

  15.05%

  (c)

  18.05%

  (d)

  17.05%

 8. XY என்ற திண்மம் NaCl வடிவமைப்பினை உடையது. நேர் அயனியின் ஆர மதிப்பு 100pm எனில், எதிர் அயனியின் ஆர மதிப்பு

  (a)

  \(\left( \frac { 100 }{ 0.414 } \right) \)

  (b)

  \(\left( \frac { 0.732 }{ 100 } \right) \)

  (c)

  100x0.414

  (d)

  \(\left( \frac { 0.414 }{ 100 } \right) \)

 9. எளிய கனசதுர அமைப்பில் மொத்த கனஅளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கனஅளவின் விகிதம்

  (a)

  \(\left( \frac { \pi }{ 4\sqrt { 2 } } \right) \)

  (b)

  \(\left( \frac { \pi }{ 6 } \right) \)

  (c)

  \(\left( \frac { \pi }{ 4 } \right) \)

  (d)

  \(\left( \frac { \pi }{ 3\sqrt { 2 } } \right) \)

 10. Sc, bcc மற்றும் fcc ஆகிய கனச்சதுர அமைப்புகளின் விளிம்பு நீளத்தினை ‘a’ எனக் குறிப்பிட்டால், அவ்வமைப்புகளில் காணப்படும் கோளங்களின் ஆரங்களின் விகிதங்கள் முற

  (a)

  \(\left( \frac { 1 }{ 2 } a:\frac { \sqrt { 3 } }{ 2 } a:\frac { \sqrt { 2 } }{ 2 } a \right) \)

  (b)

  \(\left( \sqrt { 1a } :\sqrt { 3a } :\sqrt { 2a } \right) \)

  (c)

  \(\left( \frac { 1 }{ 2 } a:\frac { \sqrt { 3 } }{ 4 } a:\frac { 1 }{ 2\sqrt { 2 } } a \right) \)

  (d)

  \(\left( \frac { 1 }{ 2 } a:\sqrt { 3a } :\frac { 1 }{ \sqrt { 2 } } a \right) \)

 11. பொட்டாசியம் (அணு எடை 39 g mol–1) bcc வடிவமைப்பை பெற்றுள்ளது . இதில் நெருங்கி அமைந்துள்ள இரு அடுத்தடுத்த அணுக்களுக்கிடையேயானத் தொலைவு  4.52A0 ஆக உள்ளது. அதன் அடர்த்தி

  (a)

  915 kg m-3

  (b)

  2142 kg m-3

  (c)

  452 kg m-3

  (d)

  390 kg m-3

 12. கூற்று: பிராங்கல் குறைபாட்டின் காரணமாக, படிக்கச் திண்மத்தின் அடர்த்தி குறைகிறது.
  காரணம்: பிராங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் பதிகத்தை விட்டு வெளியேறுகின்றன.

  (a)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்

  (b)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல 

  (c)

  கூற்று சரி ஆனால் காரணம் தவறு

  (d)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

 13. படிகத்தின் நிலையற்றலானது _______ மதிப்பினை பெற்றிருக்கும் வகையில் படிக வடிவமுடைய திடப்பொருட்களின் உட்கூறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

  (a)

  அதிகபட்ச

  (b)

  குறைந்தபட்ச 

  (c)

  பூஜ்ய 

  (d)

  முடிவிலா 

 14. படிக திடப்பொருள் பொதுவாக 

  (a)

  திசையொப்பு பண்பு உடையவை 

  (b)

  திசையொப்பு பண்பற்றவை 

  (c)

  புறவேற்றுமை வடிவங்கள் உடையவை 

  (d)

  மாற்றியங்கள் உடையவை 

 15. அயனிப்படிகங்களில் நேர் மற்றும் எதிர் அயனிகள் ஒன்றொடொன்று _________ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.

  (a)

  வலிமை குறைந்த வாண்டர்வால்ஸ் விசை 

  (b)

  வலிமையான நிலைமின்னியல் கவர்ச்சி விசை 

  (c)

  ஹைட்ரஜன் பிணைப்பு 

  (d)

  சகப்பிணைப்பு 

 16. அயனிப்படிகங்கள் ______ நிலையில் மின்சாரத்தை கடத்துகின்றன.

  (a)

  திண்ம படிக 

  (b)

  திண்ம 

  (c)

  படிக உருவற்ற 

  (d)

  உருகிய 

 17. முனைவற்ற மூலக்கூறு படிகங்களில் அதன் உட்கூறுகள் _______ மூலம் பிணைக்கப்பட்டுள்ளன

  (a)

  வலிமையான நிலை மின்னியல் கவர்ச்சி விசை 

  (b)

  முனைவுற்ற சகப்பிணைப்புகள் 

  (c)

  வலிமை குறைந்த லண்டன் விசைகள் 

  (d)

  ஹைட்ரஜன் பிணைப்புகள் 

 18. உலோகப் படிகங்களின் அணிக்கோவைப் புள்ளிகளில்  காணப்படுகின்றன.

  (a)

  உலோக எதிர் அயனிகள் 

  (b)

  புரோட்டான்கள் 

  (c)

  உலோக அணுக்கள் 

  (d)

  உலோக நேர் அயனிகள் 

 19. எளிய கனசதுர அலகுக்கூட்டின் மூலை அணுவை பகிர்ந்து கொள்ளும் அலகுக்கூடுகளின் எண்ணிக்கை

  (a)

  6

  (b)

  8

  (c)

  4

  (d)

  2

 20. கனசதுர அலகுக்கூட்டில் மூலையில் உள்ள அனுவின் பங்கு 

  (a)

  \(\frac{1}{2}\)

  (b)

  \(\frac{1}{4}\)

  (c)

  \(\frac{1}{8}\)

  (d)

  \(\frac{1}{16}\)

 21. 5 x 1 = 5
 22. பொருள் மைய கனசதுரம் 

 23. (1)

  AgBr 

 24. எளிய கனசதுரம் 

 25. (2)

  52.31%

 26. முகப்பு மைய கனசதுரம் 

 27. (3)

  FeO 

 28. பிராங்கல் குறைபாடு 

 29. (4)

  74%

 30. உலோகம் குறைவுபடும் குறைபாடு 

 31. (5)

  இரண்டு 

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வேதியியல் திட நிலைமை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Chemistry Solid State One Marks Question And Answer )

Write your Comment