Important Questions Part - II

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60

    2 Marks

    235 x 2 = 470
  1. துணைநிரல் என்றால் என்ன?

  2. நிரலாக்க மொழியைப் பொறுத்து செயற்கூறுவை வரையறுக்கவும்.

  3. பின்வருவனவற்றுள் எது சாதாரண செயற்கூறு வரையறை மற்றும் எது தற்சுழற்சி செயற்கூறு வரையறை.
    i) let rec sum x y:
    return x + y
    ii) let disp :
    print ‘welcome’
    iii) let rec sum num:
    if (num!=0) then return num + sum (num-1)
    else
    return num

  4. செயற்கூறு என்பது யாது?

  5. Impure செயற்கூறு என்றால் என்ன?

  6. தரவு வகையுடன் கூடிய அளபுறு எடுத்துக்காட்டு தருக.

  7. பொருள் என்றால் என்ன?

  8. கொடுக்கப்பட்டுள்ள 3 செயலுருபுகளில் குறைந்த மதிப்பைக் காணும் செயல்கூறின் நெறிமுறையை எழுதுக.

  9. இனக்குழு அறிவிப்பானது எதனை இணைக்கிறது?

  10. Pure செயற்கூறு - ஒரு எடுத்துக்காட்டை எழுதுக.

  11. தற்சுழற்சி செயற்கூறு என்றால் என்ன?

  12. Pair என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  13. Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  14. பின்வரும் கூற்றினில் ஆக்கி மற்றும் செலக்டர்களை கண்டறியவும்.
    (i) city = makecity (name, eat, ion)
    (ii) getname (city)
    (iii) makepoint
    (iv) xcoord (point)

  15. தரவு அருவமாக்கம் - சிறுகுறிப்பு வரைக.

  16. கான்கீரிட் உவமைப்பை வரையறுக்கும் பிரிவுகளை பற்றி எழுதுக.

  17. கண்ஸ்டரக்டர்ஸ் மற்றும் செலக்டர்ஸ் கொண்டு விகிதமுறு எண்களை உருவமைக்கும் போலிக் குறிமுறையை எழுதுக.

  18. தரவு அருவமாக்கினை ஸ்திரமுடன் எவற்றை கொண்டு உருவாக்கப்படும்?

  19. P1: = person ( ) என்ற கூற்றில் P1 மற்றும் Person எதனை குறிக்கின்றது?

  20. List -ல் உள்ள உறுப்புகளை எவ்வாறு அணுகலாம்?

  21. Pairs எனும் கலவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

  22. வரையெல்லை என்றால் என்ன?

  23. மாறிகளுக்கு எதற்காக வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?

  24. Namespaces சிறுகுறிப்பு வரைக?

  25. செயற்கூறுக்கு உள்ளே உள்ள மாரிகளின் ஏற்படும் மாற்றங்கள் செயற்கூறுவுக்கு வெளியே எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது? ஏன்?

  26. மாறிகளை என்றால் என்ன?

  27. மாரியின் வரையெல்லை என்பது என்ன?

  28. ஒரு மாரியின் வாழ்நாள் என்றால் என்ன?

  29. கீழே உள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக

  30. இனக்குழு உறுப்புகளின் அணுகலைக் கட்டுப்படுத்தும் சிறப்பு சொற்களை எழுதுக

  31. நெறிமுறை என்றால் என்ன?

  32. நெறிமுறையாளர் என்பவர் யார்?

  33. தேடல் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

  34. தரவு கட்டமைப்பின் சில எடுத்துக்காட்டுகளை எழுதுக

  35. நிரல் நெறிமுறை தீர்வு என்றால் என்ன?

  36. நிரல் நெறிமுறையின் செயல்திறன் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

  37. ஒரு செயல்பாட்டின் இயங்கு நேரம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

  38. நெறிமுறை பகுப்பாய்வு என்பது என்ன?

  39. ஒரு சிறந்த நெறிமுறை என்பது என்ன?

  40. Asymptotic குறியீடுகள் என்ன?

  41. நெறிமுறையின் நேரசிக்கலைக் குறிக்க பயன்படும் Asymptotic குறியீடுகள் யாவை?

  42. Big Omega - குறிப்பு வரைக

  43. நினைவிருத்தல் என்பது என்ன?

  44. நெறிமுறை செயல்திறன் என்பது என்ன?

  45. இயங்கு நிரலாக்கத்தின் பயன் யாது?

  46. வில்லைகள் பற்றி சிறு குறிப்பு வரைக.

  47. குறிப்பெயர்கள் என்றால் என்ன? குறிப்பெயர்கள் வகைகள் யாவை?

  48. எக்ஸ்போனைட் தரவு பற்றி குறிப்பு வரைக.

  49. பைத்தான் பதிப்பில் IDLEன் பயன் யாது?

  50. பைத்தான் ஷெல் செயல்படுத்தப்படும் வழிகளை எழுதுக.

  51. பைத்தான் ஷெலின் ஊடாடும் முறைமை ஒரு எளிய முறை கால்குலேட்டரை போல் எவ்வாறு பயன்படுத்தலாம்? 

  52. பைத்தான் IDLE யை எவ்வாறு தொடங்குவாய்?

  53. பைத்தான் IDLE திரையில் ஊடாடும் முறைமையில் இருப்பதை எவ்வாறு அறிவாய்?

  54. உள்ளீடு - வெளியீடு செயற்கூறுகளின் பயன்பாட்டை எழுதுக.

  55. Print ( ) செயற்கூறின் தொடரியலை எழுதுக.

  56. கீழ்க்காணும் வெளியீட்டை பெற நிரலில் உள்ள கோடிட்ட இடத்தை நிரப்புக.
    வெளியீடு:
     Enter Number 1 : 34
     Enter Number 2 : 70
     The sum = 104
    நிரல்
     x = __(1)___ (input ("Enter Number 1: "))
     y = ___(2)___ __(3)____ ("Enter Number 2 : "))
     ___(4)___ ("The sum = ", ___(5)____) 
     

  57. கீழ்க்காணும் கூற்று ஏன் எண்களை தரவுகளாக ஏற்றுக்கொள்ளாது? விளக்கவும் மேலும் எண்களாக ஏற்று கொள்ள பயன்படும் செயற்கூறினை பற்றி எழுதுக.

  58. கீழ்க்காணும் வெளியீட்டை பெற பைத்தான் நிரலை எழுதுக.

  59. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் தவறான ஒன்றை தேர்ந்தெடுத்து விளக்கவும்.
    (i) Sum = 100
    (ii) regno = 12401
    (iii) name = "Sura"
    (iv) name $ = "Sura"

  60. பைத்தானில் உள்ள ஏதேனும் நான்கு சிறப்புச்சொற்கள் எழுதவும். 

  61. தருக்க செயற்குறிகளின் பயன் யாது?

  62. a = 50, b = 50 என்றால் கீழேகாணும் கூற்றுகளின் வெளியீடு என்ன?
    print ("A = ",a," and b =",b)
    print ("The a>b or a==b = ",a>b or a==b)
    print ("The a>b and a==b =",a>b and a==b)
    print ("The not a a>b = ",not a>b)

  63. கீழே காணும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
    x, y = 50,150
    z = x if x > y else y
    pring ("z is",z)

  64. எண் நிலைஉருக்களின் வகைகள் யாவை?

  65. பின்வரும் விடுபடு தொடர் குறியுருக்களை எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
    (i) \n
    (ii) \t

  66. சிறப்புச் சொற்கள் என்றால் என்ன?

  67. பைத்தானில் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புகளைப் பட்டியலிடுக.

  68. கட்டுப்பாட்டு கட்டமைப்பு என்றால் என்ன?

  69. முழுமையான if-else கூற்றை மாற்று முறையில் எவ்வாறு பைத்தானில் எழுதலாம்?

  70. உள்ளிடப்பட்ட எண் ஒற்றைப்படை அல்லது இரட்டைப்படை எண்ணா என்பதைக் கண்டறியும் நிரலை எழுதுக. (if-else க்கு மாற்று முறையைப் பயன்படுத்தவும்)

  71. மடக்கு அமைப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்கும் பாய்வு படத்தை வரைக.

  72. பைத்தானில் மடக்கு அமைப்புகளை எழுதுக.

  73. 10 லிருந்து 15 வரை அனைத்து எண்களையும் அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.

  74. prlnt ( ) செயற்கூறில் பயன்படுத்தப்படும் அளபுருக்களை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  75. பின்வரும் range ( ) எடுத்துக்காட்டுகளின் வெளியீட்டை எழுதுக.
    range (1,30,1)
    range (2,30,2)
    range (30,3,-3)
    range (20)

  76. for மடக்கின் செயல்பாட்டை பதிவு படத்தினை கொண்டு விளக்கவும்.

  77. கீழ்காணும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
    for i in range (1,9,2):
    print (i, end =' ')
    else:
    print ("In end of the loop")

  78. 1 முதல் 100 வரையிலான எண்களின் கூட்டுத் தொகையை கணக்கிடும் நிரலை எழுதுக.

  79. 1 முதல் 10 வரையிலான உள்ள இரட்டைப்படை எண்களின் கூட்டுத் தொகையை கணக்கிடும் நிரலை எழுதுக.

  80. 10 முதல் 20 வரையிலான உள்ள ஒற்றைப்படை எண்களின் கூட்டுத் தொகையை கணக்கிடும் நிரலை எழுதுக.

  81. பின்னலான மடக்கு அமைப்பு என்றால் என்ன?

  82. Jump கூற்றின் பயனை எழுதுக.

  83. மடக்கு அமைப்பில் break மற்றும் continue கூற்றுகளின் செயல்பாட்டை பாய்வு படத்தினை கொண்டு விளக்குக.

  84. break கூற்றின் செயல்பாட்டை பாய்வு படத்தின் மூலம் விளக்கவும்.

  85. pass கூற்று -சிறுகுறிப்பு வரைக.

  86. continue கூற்றின் செயல்பாட்டை பாய்வு படத்தின் மூலம் விளக்குக.

  87. pass கூற்று எதற்காக உடற்பகுதியில் அமைக்கப்படுகிறது ஏன்?

  88. செயற்கூறு என்றால் என்ன?

  89. செயற்கூறின் வகைகளை எழுதுக

  90. செயற்கூறுவின் முக்கிய நன்மைகள் யாவை?

  91. மாறியின் வரையெல்லை என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.

  92. தன்னைத்தானே அழைக்கும் செயற்கூறுக்கு வரம்பை எவ்வாறு அமைக்க வேண்டும்? எடுத்துக்காட்டு தருக.

  93. பைத்தானில், தொகுதியில் உள்ள கூற்றுகள் எவ்வாறு எழுதப்படுகிறது?

  94. பைத்தானில், தொகுதி என்றால் என்ன?

  95. கீழ்க்காணும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
    def display (a, b) :
    return a * * b
    print (area (2, 5) )

  96. அளபுருக்கள் மற்றம் செயலுறுப்புகள் - வேறுபாட்டை எழுதுக.

  97. அளபுருக்கள் அல்லது செயலுருப்புகளை செயற்கூறினுக்கு அனுப்பும் தொடரியலை எழுதுக.

  98. செயலுருப்புகள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  99. மாறும் நீள செயலுருபின் பொதுவடிவத்தை எழுதுக.

  100. கீழ்காணும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
    z = lambda x, y : x//y
    print (z(10,3))

  101. tuples என்றால் என்ன?

  102. பெயரில்லாத செயற்கூறுகள் என்றால் என்ன?

  103. லாம்டா செயற்கூறு எடுத்து கொள்ளும் செயலுருபுகளை எவ்வாறு திருப்பி அனுப்பும்?

  104. return கூற்றின் பொதுவடிவத்தை பற்றி குறிப்பு வரைக.

  105. பெயரில்லா செயற்கூறின் பொது வடிவத்தை எழுதுக.

  106. உள்ளமை வரையெல்லை என்றால் என்ன?

  107. குளோபல் மாறியை செயற்கூறின் உள்ளே மாற்றம் எவ்வாறு செய்வாய்?

  108. கீழ்க்காணும் கூற்றுகளின் வெளியீட்டை எழுதுக.
    (i) print (ord('a')
    (ii) print (chr(65))
    (iii) print (bin(15))
    (iv) print (format (15, 'b')

  109. பைத்தானில் சரங்களை மாற்றம் செய்ய முடியுமா?

  110. பைத்தானில் சாரத்தை எவ்வாறு நீக்குவாய்?

  111. சரத்தை துண்டாக்குதல்/ பிரித்தல் என்றால் என்ன?

  112. கொடுக்கப்பட்ட சரத்தில் உள்ள குறியுருக்களை பின்வரிசையில் எவ்வாறு print செய்வதற்கான நிரலை எழுதுக.

  113. தங்களது பெயரை 10 முறை Print பண்ணுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  114. பின்வருவனவற்றின் வெளிப்பாடு யாது?
    'strl = "THIRUKKURAL"
    (i) print (strl [0])
    (ii) print (strl [0:5])
    (iii) print (strl [:5])
    (iv) print (strl [6:])

  115. பிரிப்பதற்கான தொடரியலை பற்றி எழுதுக.

  116. மூன்றாம் அளபுரு பற்றி எழுதுக.

  117. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    str1 = "Welcome to learn Python"
    print (str1 [: : -2])

  118. பின்வரும் சரவடிவமைப்பு செயற்குறிகளுக்கான பயன் யாது?
    (i) %c
    (ii) %d or %i
    (iii) %s

  119. விடுபட்ட இடங்களை நிரப்புக.
       வடிவமைப்பு குறியுரு       பயன்பாடு 
    1)     ________                      -  குறியில்லா முழு எண் 
    2)     %o                               -       ________       
    3)     ________                      -   பதினறும எண் 
    4)     %i                                -       ________     

  120. பின்வருவனவற்றிற்கான வடிவமைப்பு குறியுருக்களை எழுதுக.
    1) அடுக்கெண் 
    2) மிதப்பு புள்ளி எண்கள் 
    3) மிதப்பு புள்ளி வடிவிலான குறு எண் அல்லது அடுக்கு எண் குறியீட்டு முறை 

  121. பொருத்துக.

      விடுபட வரிசை    விளக்கம் 
    \a  1 பின்னிட வெளி 
    ii  \b 2 கிடைமட்ட தத்தல் 
    iii  \n  3 மணி ஒலிப்பு 
    iv  \t  4 வரி செலுத்தி 
  122. பின்வரும் விடுபடு வரிசைக்கான விளக்கத்தை எழுதுக.
    (i) \r
    (ii) \000
    (iii) \v

  123. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    (i) print (len ("corporation"))
    (ii) print ("School" .capitalize 0)
    (iii) print ("welcome". centre(15,'*'))

  124. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    strl = "mammals"
    1) str1.find ('ma ')
    2) str1.find ('ma', 2)
    3) str1.find ('ma', 2,4)
    4) str1.find ('ma', 2,5)

  125. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    1) "Python 2.3" isalpha ( )
    2) "Python Program". isalnum ( )
    3) "Python" .isupper ( )

  126. பின்வரும் கூற்றின் வெளியிடு யாது?
    (i) print ("save earth" .title( ))
    (ii) print ("save earth" .swapcase( ))

  127. lower ( ) மற்றும் islower ( ) செயற்கூறுக்கான வேறுபாடு யாது?

  128. பைத்தானில் List என்றால் என்ன?

  129. பின்வரும் பைத்தான் குறிமுறையில் x ன் மதிப்பு என்ன?
    List1 = [2,4,6[1,3,5]]
    x = len(List1)

  130. பைத்தானில் set என்றால் என்ன?

  131. பைத்தான் நிரலாக்க மொழியில் உள்ள தொகுப்பு தரவினங்களின் பெயர்களை எழுதுக.

  132. List ல் உள்ள உறுப்புகளை பின்னோக்கு முறையில் வெளியிட பைத்தான் நிரலை எழுதுக.

  133. மடக்கையை பயன்படுத்தி list-ல் உள்ள ("Physics","Chemistry", "Biology") உறுப்புகளை அச்சிடுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக. 

  134. for மடக்கை பயன்படுத்தி list-ல் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒவ்வொன்றாக அணுகுவதற்கான தொடரியலை எழுதுக.

  135. பைத்தானில் list-கள் மாறும் தன்மையுடையவை என்பதற்கான தொடரியலை எழுதுக.

  136. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
    list = [2,4,6]
    list = [0:3] = [1,3,5]
    for x in list :
     print (x)

  137. List-ல் விருப்பமான இடத்தில் ஒரு உறுப்பை எவ்வாறு சேர்க்கலாம் அதற்கான தொடரியலை எழுதுக.

  138. append ( ) மற்றும் Extend ( ) செயற்கூறின் தொடரியலை எழுதுக.

  139. பின்வரும் நிரலை படித்து அதற்கான வெளியீட்டைத் தருக.
    list = ['T','H','N',M']
    del  List [1]
    (i) print (list)
     del list (1 : 3)
    (ii) print (list)
     del (list)
    (iii) print (list)

  140. சுட்டெண் தெரியாத உறுப்பை listலிருந்து எவ்வாறு நீக்குவாய்?

  141. பின்வரும் நிரலை நன்கு படித்து Print செயற்கூறில் கொடுக்கப்பட்டுள்ளதற்கு தகுந்த வெளியீடு தருக.
    List = [12,89,34,79,80]
    (i) print (list.remove (34))
    (ii) print (list.pop(1))
    (iii) print (list.clear( ))

  142. பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
    (i) print (list (range (1,11,2))
    (ii) print (list (range (2,11,2)

  143. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
    List = [36,12,12]
    (i) print (list.count (12))
    (ii) print (list.index (12))
    (iii) print (list.reverse (c))

  144. பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
    List = ['T ','T','A','S','L']
    List.sort(reverse = false)
    print (list)

  145. முதல் 20 வரையான எண்களில் 4-ல் வகுபடும் எண்களை பெறும் List ஒன்றை உருவாக்கும் நிரல் ஒன்றை எழுதுக.

  146. BRICSன் உறுப்பு நாடுகளின் List-ஐ வரையறை செய்து, உள்ளீடு செய்யப்படும் நாடு BRICSன் உறுப்பா (அல்லது) இல்லையா என்பதை பரிசோதிக்கும் நிரலை எழுதுக. 

  147.  list மற்றும் Tuple க்கான வேறுபாட்டை எழுதுக.

  148. Tuples ஐ உருவாக்குவதற்கான தொடரியலை எழுதுக.

  149. Tuple ( ) செயற்கூறின் பயன் யாது?எ.கா.தருக.
     

  150. பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
    TUP = (12,78,91,'A','B',3,69)
     (i) print (TUP [2.5])
     (ii) print (TUP [:5])
     (iii) print (TUP [4:])
     (iv) print (TUP [:])
     (v) print (TUP)

  151. இரண்டு tuplesகளை இணைப்பதற்கான நிரலை எழுதுக. 

  152. முழு Tuples-ஐ எவ்வாறு நீக்குவாய். எ.கா.தருக.

  153. Tuples -ஸ் மதிப்பிருத்தலை பயன்படுத்தி இரண்டு மதிப்புகளை இடமாற்றுவதற்கான நிரலை எழுதுக.

  154. பின்வருவனவற்றின் வெளியீடு யாது?
    A = {'A', 2, 4, 'D'}
    B = {'A','B ', 'C', 'D'}
    print (A \(_{ | }^{ | }\) B)
    print (A & B)
    print (A - B)
    print (A ^ B)

  155. Dictionary பற்றி குறிப்பு வரைக.

  156. List-ல் பயன்படும் மூன்று செயற்கூறு பற்றி எழுதுக.

  157. பின்வருவனவற்றுள் எது சரியானது அல்ல.காரணம் தருக.
    (i) ^
    (ii) \(_{ | }^{ | }\)
    (iii) +
    (iv) -

  158. நேர்மறை மற்றும் எதிர்மறை எண்களின் List-ஐ கொண்ட நிரலை எழுதுக. லிஸ்ட்ல் இருந்து நேர்ம எண்களை மட்டும் பெறுகின்ற புதிய Tuples உருவாக்குக.

  159. பகா எண்களைக் கொண்ட ஒரு Set,இரட்டைப்படை எண்களை கொண்ட மற்றொரு Set உருவாக்குவதற்கான நிரல் [ஒட்டு, வெட்டு, வேறுபாடு, சமச்சீரான வேறுபாடு போன்ற செயற்பாடுகளுக்கான விடையை நிரூபிக்கவும்].

  160. சான்றுருவாக்கல் என்றால் என்ன?

  161. பைத்தானில் ஆக்கியாய் எவ்வாறு உருவாக்குவாய்?

  162. அழிப்பியின் நோக்கம் என்ன?

  163. பைத்தானில் இனக்குழுவை எவ்வாறு வரையறுப்பாய்.

  164. பின்வருவனவற்றிற்கான தொடரியலை எழுதுக.
    (i) பொருள்களை உருவாக்குதல் 
    (ii) இனக்குழு உறுப்புகளை அணுகுதல் 

  165. பைத்தானில் இனக்குழு செயற்கூறுக்கும் சாதாரண செயற்கூறுக்கும் உள்ள வேறுபாடு யாது?

  166. பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பியை வரையறுக்க.

  167. ஆக்கியை விளக்கும் நிரலை எழுதுக.

  168. தரவுத்தள மேலாண்மை அமைப்பிற்கு சில எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடுக

  169. தரவு நிலைத் தன்மை என்றால் என்ன?

  170. படிநிலை மற்றும் வலையமைப்பு தரவு மாதிரிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

  171. தரவுக்கும் தகவலுக்கும் உள்ள வேறுபாடு யாது?

  172. தரவுதள மேலாண்மை என்றால் என்ன?

  173. தரவுதளங்களை உருவாக்க, வரையறுக்க மற்றும் கையாளுவதற்கு அனுமதிக்கின்ற மென்பொருள் பற்றி எழுதுக.

  174. DBMS-ன் கூறுகளை எழுதுக.

  175. விடுபட்ட இடத்தை நிரப்புக.
    (i) அட்டவணை _________ எனவும் அழைக்கப்படுகின்றன.
    (ii) அட்டவணையின் வரிசை  _________ எனப்படும்.
    (iii) அட்டவணையின் நெடுவரிசை  __________ எனப்படும்.

  176. தரவு மாதிரியின் பயன் யாது?

  177. தரவு மாதிரியின் பல்வேறு வகைகளை எழுதுக.

  178. DBMS பயனர்களின் வகைகளை எழுதுக.

  179. DBMS மென்பொருளுக்கான எ.கா தருக.

  180. EF Codd விதி குறிப்பு வரைக.

  181. Unique மற்றும் Primary Key கட்டுப்பாடுகளை வேறுபடுத்துக.

  182. அட்டவணை கட்டுப்பாட்டிற்கும், நெடுவரிசை கட்டுப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  183. SQL மற்றும் MySQLக்கு உள்ள வேறுபாடுகள் யாவை?

  184. RDBMS குறிப்பு வரைக

  185. விரிவாக்கம் தருக
    (i) DDL
    (ii) DML
    (iii) WAMP

  186. WAMP - ன் பயன் யாது?

  187. தரவு கையாளுதல் வகைகளை எழுதுக

  188. SQL - ல் உள்ள தரவு கையாளுதல் மொழியின் கட்டளைகளை பற்றி எழுதுக

  189. பின்வரும் பரிவர்த்தனைக்கான கட்டுப்பாட்டு மொழியின் கட்டளை பற்றி எழுதுக
    (i) Commit
    (ii) Roll back
    (iii) Save point

  190. தரவு வினவல் மொழி பற்றி எழுதுக

  191. SQL - ல் பயன்படுத்தப்படும் தரவுவகைகளை எழுதுக

  192. அட்டவணையை கட்டுப்பாட்டுடன் உருவாக்கும் தொடரியலை எழுதுக

  193. கட்டுப்பாடுகளின் வகைகளை எழுதுக

  194. Primary key என்றால் என்ன?

  195. அட்டவணையில் உள்ள இரட்டிப்பு வரிசைகளை எவ்வாறு இருத்தி வைக்கலாம்?

  196. IN மற்றும் NOT IN வேறுபடுத்துக

  197. அட்டவணையில் உள்ள பதிவுகளை எவ்வாறு வடிகட்டுவாய்? எ.கா தருக

  198. GROUP BY Clause ன் தொடரியலை எழுதுக

  199. எவ்வாறு பயனர் ஒன்றிணைந்த செயற்கூறுகளை SELECT கட்டலையுடன் பயன்படுத்தலாம் எ.கா தருக

  200. பைத்தான் மூலம் CSV கோப்பை படிப்பதற்கான இரு வழிகளை குறிப்பிடுக.

  201. கோப்பின் கொடாநிலை முறைமைகளை குறிப்பிடுக.

  202. csv கோப்பில் ஒன்றிற்கு மேற்பட்ட நெடுவரிசையை எவ்வாறு வரிசையாக்கம் செய்வாய்? எடுத்துக்காட்டுத் தருக.

  203. CSV கோப்பின் பயன் யாது?

  204. விரிவாக்கம் -
    (i) CSV 
    (ii) CRLF 

  205. CSV கோப்பினை திறக்கும் open கட்டளை எவ்வாறு கொடுக்கப்படல் வேண்டும்?

  206. CSV கோப்பினை திறக்கும் மூன்று முறைமைகளை எழுதுக.

  207. உரை முறைமை மற்றும் இருமநிலை முறைமையின் வேறுபாட்டை எழுதுக.

  208. பைத்தானில் ஏன் தேவையற்ற நினைவக பகுதியை சேகரிக்கும் வசதி உள்ளது?

  209. open ( ) செயற்கூறுடன் கொடுக்கப்படும் with கூற்றின் பயன் யாது?

  210. close ( ) செயற்கூறின் பயன்யாது?

  211. reader ( ) செயற்கூறு-சிறுகுறிப்பு வரைக.

  212. dialect என்றால் என்ன?

  213. பட்டியல் என்றால் என்ன?

  214. sort ( ) மற்றும் sorter ( ) செயற்கூறுவின் வேறுபாட்டை எழுதுக.

  215. DicReader எவ்வாறு வேலை செய்கிறது?

  216. ordered.dict என்றால் என்ன?

  217. writer ( ) மற்றும் writerow ( ) செயற்கூறின் வேறுபாட்டை எழுதுக.

  218. skipintialspace அளபுரு பயன்படுத்துவதன் நோக்கம் என்ன?

  219. வரிமுறிப்பான் - சிறுகுறிப்பு வரைக.

  220. Dictionary-யின் திறவுகோலாக பயன்படுத்துவது எது?

  221. Scripting மொழிக்கும் மற்ற நிரலாக்க மொழிக்கும் உள்ள தத்துவர்த்த வேறுபாடு யாது?

  222. தொகுப்பான் மற்றும் வரிமொழி மாற்றியை வேறுபடுத்துக.

  223. விரிவாக்கம் தருக
    (i) SWIG
    (ii) MinGW

  224. Scripting மொழி என்றால் என்ன? அவற்றில் பயன்படுத்தப்படும் மொழிகள் யாவை?

  225. உரைஇடுதல் என்றால் என்ன?

  226. தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் பயனர்களை குறிப்பிடவும்.

  227. தரவுத்தளத்தை இணைக்க பயன்படும் முறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  228. புலத்தை “INTEGER PRIMARY KEY” என அறிவிப்பதன் நன்மை என்ன?

  229. Select வினவல் என்றால் என்ன? அதன் பயன் யாது?

  230. SQL ல் துணைநிலை கூற்றுகள் யாவை?

  231. மதிப்பீட்டு சார்புகள் யாவை?

  232. Matplotlib யுள்ள காட்சிப்படுத்துதல் வகைகளை பட்டியலிடுக.

  233. Matplotlib யை எவ்வாறு நிறுவலாம்?

  234. plt.plot([1,2,3,4]), plt.plot([1,2,3,4], [1,4,9,16]) ஆகிய இரு செயற்கூறுகளிடேயேயான வேறுபாட்டை எழுதுக.

  235. வரி விளக்கப்படம் என்றால் என்ன?

  236. 3 Marks

    133 x 3 = 399
  237. இடைமுகத்தின் பண்புக்கூறுகள் யாவை?

  238. strlen ஏன் pure செயற்கூறு என்று அழைக்கப்படுகிறது?

  239. impure செயற்கூறுவின் பக்க விளைவுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  240. pure மற்றும் impure செயற்கூற்றை வேறுபடுத்துக.

  241. ஒரு செயற்கூறுக்கு வெளியே ஒரு மாறியை மாற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும்? ஒரு எடுத்துக்காட்டு தருக.

  242. செயற்கூற்றை வரையறுப்பதற்கான தொடரியல் விவரி.

  243. செயற்கூறு வகைகளின் தொடரியலை விளக்கமாக எழுதுக.

  244. இரண்டு நேரம் முழு எங்களின் மீப்பெரு வகு எண்ணை கண்டுபிடிக்கும் pure செயற்கூற்றின் நெறிமுறையை எழுது.

  245. இரண்டு வகையான பச்சோந்திகள் சமமான எண்ணாக இருந்தால், இந்த இரண்டு வகையும் சேர்ந்து மூன்றாவது வகையின் நிறத்தை மாற்றுவதற்கான நிரல் நெறிமுறையை உருவாக்கவும். முடிவில் அனைத்தும் ஒரே நிறத்தை காண்பிக்க வேண்டும். நிரல் நெறிமுறையை செயற்கூறுவைப் பயன்படுத்தி எழுதவும்.

  246. செயற்கூறுவிற்கு வெளியில் மாறியை மாற்றுதல் ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்கமாக எழுதுக.

  247. கான்கிரிட் தரவு வகை மற்றும் அருவமாக்கம் தரவு வகை வேறுபடுத்துக.

  248. நிரல் வடிவமைப்பில் பின்பற்றப்படும் யுக்தி எது? யுக்தியை வரையறுக்க.

  249. பின்வருவனவற்றில் எது constructors and selectors என்று அடையாளம் காணவும்?
    (a) N1=number( )
    (b) accetnum(n1)
    (c) displaynum(n1)
    (d) eval(a/b) (e) x,y= makeslope (m), makeslope(n)
    (f) display( )

  250. list உள்ள உருப்புகளை அணுகும் பல்வேறு வழிமுறைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

  251. பின்வருவனவற்றில் எது List, Tuple மற்றும் இனக்குழு (class) என அடையாளம் காண்க.
    (a) arr [1, 2, 34]
    (b) arr (1, 2, 34)
    (c) student [rno, name, mark]
    (d) day = (‘sun’, ‘mon’, ‘tue’, ‘wed’)
    (e) x = [2, 5, 6.5, [5, 6], 8.2]
    (f) employee [eno, ename, esal, eaddress]

  252. ADT -யை எந்த வகையில் செயல்படுத்தலாம் என்பதற்கு உதாரணம் தருக.

  253. தரவு அருவமாக்கத்தின் அடிப்படை நோக்கம் என்ன?

  254. உள்ளமை வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  255. முழுதளாவிய வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி?

  256. அடைக்கப்பட்ட வரையெல்லையை எடுத்துக்காட்டுடன் விவரி.

  257. அணுகல் கட்டுப்பாடு எதற்குத் தேவைப்படுகிறது?

  258. பின்வரும் போலிக் (Pseudo) குறிமுறையில் மாரிகளின் வரைஎல்லையைக் கண்டறிந்து வெளிப்பாட்டை எழுதுக.
    output
    color: = Red
    mycolor( ):
    b: = Blue
    myfavcolor( ):
    g: = Green
    printcolor, b, g
    myfavcolor( )
    printcolor, b
    mycolor( )
    print color

  259. உள்ளிணைந்த வரையெல்லை என்பது என்ன?

  260. தொகுதி - சிறுகுறிப்பு வரைக

  261. பின்வரும் சிறப்புச் சொற்களை பற்றி குறிப்பு வரைக
    (i) Public
    (ii) Protected
    (iii) Private

  262. மாறிகளின் வரையெல்லை பற்றி குறிப்பு வரைக

  263. நெறிமுறையின் பண்பியல்புகளைப் பட்டியலிடுக.

  264. சிக்கல்தன்மை மற்றும் வகைகளைப் பற்றி விவாதிக்க.

  265. இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

  266. Asymptotic குறியீடு - குறிப்பு வரைக.

  267. இயங்கு நிரலாக்கத்தைப் பற்றி நீவிர் அறிவன யாவை? 

  268. நிரல் நெறிமுறையைப் பயன்படுத்தி திறமையாக குறைக்கக்கூடிய தரவு கட்டமைப்பின் சில முக்கிய செயல்களை எழுதுக

  269. நெறிமுறை யுக்தி என்றால் என்ன?

  270. ஒரு எண்ணின் வர்க்கம் (sqare) கண்டுபிடித்து அதன் விடையை காண்பிப்பதற்கான நிரல் நெறிமுறையை எழுதுக

  271. இயங்கு நேரம் அறவிடப்படும் காரணிகளை எழுதுக

  272. இடம் நேரம் பரிமாற்றம் அல்லது நேரம் நினைவகம் பரிமாற்றம் என்பது என்ன?

  273. வரிசைமுறைத் தேடலுக்கான போலி குறிமுறையை எழுதுக

  274. இருமத் தேடலுக்கான போலி குறிமுறையை எழுதுக

  275. குமிழி வரிசையாக்கத்தின் போலி குறிமுறையை எழுதுக

  276. தேர்ந்தெடுப்பு வரிசையாகத்தின் போலி குறிமுறையை எழுதுக

  277. செருக்கும் வரிசையாக்கத்தின் போலி குறிமுறையை எழுதுக

  278. இயங்கு நிரலாக்கத்தின் படிநிலைகளை எழுதுக:

  279. இயங்கு நிரலாக்க முறையில் பைபோனாசி சுழற்சி நெறிமுறையின் படிநிலைகளை எழுதுக

  280. கணித செயற்குறிகள் பற்றி குறிப்பு வரைக, எடுத்துக்காட்டு தருக.

  281. பைத்தானில் மதிப்பிடுதல் செயற்குறிகள் என்றால் என்ன?

  282. மும்ம செயற்குறியை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  283. விடுபடு வரிசைப்பற்றி குறிப்பு எழுதி எடுத்துக்காட்டு தருக.

  284. சாரநிலையுரு என்றால் என்ன?

  285. பைத்தானின் சிறப்பம்சங்கள் யாவை?

  286. பைத்தான் நிரலாக்கம் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  287. inPut( ) செயற்கூறு - சிறுகுறிப்பு வரைக.

  288. பைத்தான் குறிப்புரை - சிறுகுறிப்பு வரைக.

  289. பைத்தான் நிரலின் தொகுப்புகளை எவ்வாறு குறிக்கப்படும்?

  290. பின்வரும் வெளியீட்டைப் பெற நிரலை எழுதுக.

  291. if..else அமைப்பைப் பற்றி குறிப்பு வரைக.

  292. if..else..elif கூற்றைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பொருத்தமான நிரலை எழுதுக. 

  293. while மடக்கின் பொதுவடிவம் யாது?

  294. break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடு யாது?

  295. வரிசை முறை கூற்றுகள் -எடுத்துக்காட்டுடன் சிறுகுறிப்பு வரைக.

  296. simple if கூற்று சிறுகுறிப்பு வரைக.

  297. உள்ளமை மாறிகளுக்கான விதிமுறையை எழுதுக.

  298. செயற்கூறினுள் முழுதளாவி மாறியை மாற்றம் செய்தால் என்ன நிகழும்?

  299. கொடுக்கப்பட்ட வருடம் லீப் வருடமா இல்லையா என்பதனைச் சோதிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  300. செயற்கூறில் தொகுப்பு என்பது என்ன?

  301. தற்சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது?

  302. செயற்கூறினை வரையறுக்கும் போது குறிப்பிடப்பட வேண்டிய குறிப்புகள் யாவை?

  303. பயனர் வரையறுக்கும் செயற்கூறுகளின் நன்மைகள் யாவை?

  304. அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு செயற்கூறினை அழைக்கும் செயலுருபுகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

  305. தானமைவு செயலுருபு என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  306. மாறும் நீள செயலுருப்பு எப்போது பயன்படுத்துவாய்? ஏன்? விளக்குக.

  307. return கூற்று -குறிப்பு வரைக.

  308. ஒரே குறிமுறையில் குளோபல் மற்றும் உள்ளமை மாறிகளின் பயன்பாட்டை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  309. குறிப்பு வரைக.
    1) min ( )
    2) max ( )
    3) sum ( )

  310. குறிப்பு வரைக.
    1) floor ( )
    2) ceil ( )
    3) sqrt ( )

  311. பின்வருவனவற்றை பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் குறிப்பு வரைக.
    (அ) capitalize(  )
    (ஆ) swapcase(  )

  312. கீழே கொடுக்கப்பட்டுள்ள பைத்தான் நிரலின் வெளியீடு யாது?
    str1 = "welcome"
    str2 = "to school"
    str3 = str1[:2]+str2[len(str2)-2:]
    print(str3)

  313. format( ) செயற்கூறின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

  314. எவ்வாறு நேர்மறை கீழ் ஒட்டு மற்றும் எதிர்மறை கீழ் ஒட்டு ஒதுக்கப்படுகிறது? எ.கா. தருக?

  315. str1 = "Welcome to learn python" எனில் பின்வருவனவற்றின் வெளிப்பாடு யாது?
    (i) print (str1 [10:16])
    (ii) print (str1 [10:16:4])
    (iii) print (str1[10:16:2])
    (iv) print (str1 r ::3])

  316. சரவடிவமைப்பிற்கான தொடரியல் மற்றும் எ.கா. தருக.

  317. find ( ) செயற்கூற்றின் பயன் யாது? எ.கா. உடன் விளக்கு.

  318. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    strl = "Raja Raja Chozhan"
    (i) print (str1. count ('Raja'))
    (ii) print (str1. count ('R'))
    (iii) print (str1. count ('A'))
    (iv) print (str1. count ('a'))
    (v) print (str1. count ('a', 0,5))
    (vi) print (str1. count ('a', 11))

  319. Sort( ) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  320. del மற்றும் clear( ) செயற்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  321. List மற்றும் Dictionary இடையேயான வேறுபாடுகள் யாவை?

  322. List உறுப்புகள் எவ்வாறு மாற்றப்படலாம்? எ.கா. தருக.

  323. ஒற்றை உறுப்பு கொண்ட Tuples எவ்வாறு உருவாக்குவாய் என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  324. Tuplesக்கு மதிப்பிருத்துதல் பற்றி குறிப்பு வரைக.

  325. இரண்டு private இனக்குழு மாறிகளுடன், வழிமுறையை பயன்படுத்தி கூட்டுத் தொகை sum அச்சிடும் இனக்குழுவை வரையறுக்கவும்.

  326. பின்வரும் நிரலின் வெளியீடு என்ன?
    class Greeting:
    def __init__(self, name):
    self.__name = name
    def display(self):
    print("Good Morning ", self.__name)
    obj=Greeting('Bindu Madhavan')
    obj.display( )

  327. பைத்தானில் ஆக்கி மற்றும் அழிப்பிகளை எவ்வாறு வரையறுப்பாய்?

  328. பைத்தானில் பொருள் பற்றி எழுதுக.

  329. இனக்குழுவைப் பயன்படுத்தி மொத்தம் மற்றும் சராசரி மதிப்பெண்ணைக் கணக்கிடும் நிரல். 

  330. பின்வரும் நிரலின் வெளியீடு யாது?
    class Sample:
     num = 0
     def _ init _ ( self, var ):
     Sample. num + = 1
     self. var = var
      print ( " The object value is = ", var )
      print ( " The count of object created = ", Sample. num )
    S1 = Sample ( 15 )
    S2 = Sample ( 35 )
    S3 = Sample ( 45 )

  331. DBAவின் பணி என்ன?

  332. கார்டீசியன் பெருக்கலை பொருத்தமான எடுத்துகாட்டுடன் விளக்குக.

  333. பொருள் மாதிரியை எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

  334. தரவுதளம் பற்றி குறிப்பு வரைக.

  335. தரவுதள மேலாண்மை அமைப்பின் பண்புகளை பட்டியலிடுக.

  336. தரவுதள கட்டமைப்பு பற்றி எழுதுக.

  337. உறவுநிலை மாதிரி பற்றி குறிப்பு வரைக. 

  338. கட்டுப்பாடு என்றால் என்ன? Primary Key கட்டுப்பாடு பற்றி சிறுகுறிப்பு வரைக.

  339. ஒரு புதிய புலத்தை சேர்ப்பதன் மூலம் மாணவர் அட்டவணை கட்டமைப்பை மாற்றி அமைக்க ஒரு SQL கூற்றை எழுதுக.

  340. Savepoint கட்டளையின் பயன்பாட்டை ஒரு எடுத்துக்காட்டுகளுடன் எழுதுக.

  341. RDBMS ல் தரவுகள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன?

  342. தரவு கட்டுப்பாட்டு மொழி என்றால் என்ன? அதில் உள்ள கட்டளைகள் பற்றி எழுதுக

  343. SQL தரவுத்தளத்துடன் செயலாற்றுவதற்கான முன் வரையறுக்கப்பட்ட கட்டளைகளின் தொகுதியை பற்றி எழுதுக

  344. எந்தக் கட்டுப்பாடு ஒரு புலத்திற்காக மதிப்பின் வரம்பை நிர்ணயிக்க உதவுகிறது?

  345. அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட புலத்திற்கு எவ்வாறு Primary Key அமைக்க முடியும் என்பதை எ.கா உடன் விளக்குக

  346. ஏற்கனவே உள்ள கோப்பில் மாற்றம் செய்யும், பைத்தான் நிரலை எழுதுக.

  347. காற்புள்ளியை (,) தானமைவு பிரிப்பனாக கொண்டுள்ள CSV கோப்பினை படிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  348. சாதாரண CSV கோப்பினை எவ்வாறு உருவாக்கலாம்?

  349. எக்ஸ்லை பயன்படுத்தி CSV கோப்பினை எவ்வாறு உருவாக்குவாய்?

  350. reader( ) செயற்கூறின் தொடரியலை எழுதுக.

  351. CSV கோப்புகளை reader ( ) செயற்கூறுவின் மூலம் படிக்கும் வழிமுறைகளை எழுதுக.

  352. கொடாநிலை பிரிப்பான் காற்புள்ளியுடன் கூடிய CSV கோப்பினை படிக்கும் நிரலை எழுதுக.

  353. ஒரு ஒரு புதிய CSV கோப்பினை உருவாக்கவும் [அல்லது] ஏற்கனவே உள்ள கோப்பில் மாற்றங்கள் செய்யும் வழிமுறைகளை எழுதுக.

  354. csv.writer ( ) செயற்கூறின் தொடரியலை எழுதி அதன் அளபுருகளை விளக்கவும்.

  355. MinGW என்றால் என்ன? அதன் பயன் யாது?

  356. கீழ்காணும் கூற்றில் கூறுநிலை, செயற்குறி, வரையறையின் பெயர் ஆகியவற்றை அடையாளம் காண்க.
    welcome.display( )

  357. பைத்தானில் பயன்படுத்தப்படும் இடைமுகங்கள் யாவை?

  358. C++ நிரலை பைத்தான் மூலம் இயக்கும் வழிமுறைகளை எழுதுக.

  359. C++ நிரலைத் தருவித்துக் கொள்ளல் பற்றி சிறு குறிப்பு வரைக.

  360. பைத்தானில் கூறுநிலைகளை எவ்வாறு தருவித்துக் கொள்வது?

  361. C++ நிரலை இயக்குவதற்கான படிநிலைகளை எழுதுக.

  362. SQLite என்றால் என்ன? இதன் நன்மைகள் யாவை?

  363. Where துணைநிலைக்கூற்றின் பயன் என்ன? where கூற்றைப் பயன்படுத்தி ஒரு பைத்தான் கூற்றை எழுதவும்.

  364. fetchone ( ) - னைப் பயன்படுத்தி ஒரு பதிவை எவ்வாறு காண்பிப்பாய்? எடுத்துக்காட்டுடன் எழுதுக.

  365. COUNT ( ) - சார்பு குறிப்பு வரைக.

  366. பதிவுகளை எவ்வாறு புதுப்பிக்க முடியும்? எடுத்துக்காட்டுடன் விளக்குக

  367. பின்வருவனவற்றை குறியீட்டை எழுதவும்.
    a. உனது கணினியில் PIP நிறுவுவதற்கு.
    b. உனது கணினியில் நிறுவியுள்ள PIP யின் மதிப்பை அறிய.
    c. Matplotlib யின் தொகுதியினை பட்டியலிட.

  368. பின்வரும் வட்ட வரைபடத்தை வெளியீடாக பெற குறியீடு எழுதவும்.

  369. குறிப்பு வரைக:
    (i) ஸ்கேட்டர் வரைவிடம்
    (ii) பெட்டி வரைவிடம்

  370. 5 Marks

    102 x 5 = 510
  371. செயலுருப்புகள் என்றால் என்ன?
    (அ) தரவுவகை இல்லாத அளபுருக்கள்
    (ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் விவரி?

  372. பின்வரும் நிரலில்
    let rec gcd a b : =
    if b < > 0 then gcd b (a mod b) else return a
    அ) செயற்கூறுவின் பெயர்
    ஆ) தற்சுழலி செயற்கூறு கூற்று
    இ) அளபுருக்கள் கொண்ட மாறியின் பெயர்
    ஈ) செயற்கூறுவை தற்சுழற்சிக்கு அழைக்கும் கூற்று
    உ)  தற்சுழற்சியை முடிவுக்கு கொண்டுவரும் கூற்று ஆகியவற்றை எழுதுக

  373. pure மற்றும் impure செயற்கூறுவை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  374. இடைமுகம் மற்றும் செயல்படுத்தலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  375. தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  376. List என்றால் என்ன? ஏன List, Pairs என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுடன் விவரி.

  377. பல் உருப்பு பொருளை எவ்வாறு அணுகுவாய் எடுத்துக்காட்டுடன் விளக்கு.

  378. விகிதமுறு எண்களைக் கொண்டு அருவமாக்க தரவு வகையை உருவமைப்பு செய்தலை பற்றி விரிவாக எழுதுக.

  379. Tuple -விளக்கமாக எழுதுக.

  380. மாறியின் வரையெல்லைகளின் வகையை விளக்குக (அல்லது) LEGB விதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  381. தொகுதிகளின் ஐந்து பண்பியல்புகளை எடுத்துக?

  382. தொகுதி நிரலாக்கத்தின் பண்புகளை எழுதுக?

  383. அணுகல் கட்டுப்பாடு - விளக்கமாக விவரிக்கவும்

  384. நெறிமுறையின் பண்பியல்புகளை விவரி.

  385. வரிசைமுறை தேடல் நெறிமுறையை விவாதிக்கவும்.

  386. இருமத் தேடல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக

  387. குமிழி வரிசையாக்க நெறிமுறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  388. இயங்கு நிரலாக்கத்தின் கருத்துருவை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.

  389. சிறந்த மோசமான மற்றும் சராசரி நிலைகளின் செயல்திறன் - விளக்கமாக எழுதுக

  390. நெறிமுறையின் சிக்கலை பற்றி விரிவாக எழுதுக

  391. நெறிமுறையின் செயல்திறன் பற்றி விரிவாக எழுதுக

  392. நெறிமுறைக்கும், நிரலுக்கும் உலகள வேறுபாட்டை எழுதுக

  393. தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம் நெறிமுறையை விளக்கமாக எழுதுக

  394. செருகும் வரிசையாக்கத்தை பற்றி விளக்கமாக எழுதுக

  395. செயல்முறை ஸ்கிரிப்ட் முறைமை நிரலாக்கம் பற்றி எழுதுக

  396. input ( ) மற்றும் output( ) செயற்கூறுகள் பற்றி விளக்கு.

  397. பைத்தானில் உள்ள வில்லைகள் பற்றி எழுதுக

  398. கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
    x=20
    x+=20
    print ("The x +=20 is =",x)
    x-=5
    print ("The x-=5 is =",x)
    x*=5
    print ("The x*=5 is =",x)
    x/=2
    print ("The x/=2 is =",x)
    x%=3
    print ("The x%=3 is =",x)
    x**=2
    print ("The x**=2 is =",x)
    x//=3
    print ("The x//=3 is =",x)
    #program End

  399. for மடக்கைப் பற்றி விரிவான விடையளிக்கவும்.

  400. if..else..elif கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  401. அனைத்து மூன்று இலக்க ஒற்றைப்படை எண்களை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.

  402. கொடுக்கப்பட்ட எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை வெளியிடும் நிரலை எழுதுக. 

  403. Jump கூற்றின் வகைகளை விளக்கமாக எழுதுக.

  404. கீழ்க்காணும் அமைப்பில் எண்களை அச்சிடுவதை விளக்கும் நிரலை எழுதுக.

    1 2
    1 2 3
    1 2 3 4
    1 2 3 4 5

  405. கீழ்காணும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
    for i in range (1,6):
    for j in range (1, i+l):
    print (i, end = ' ')
    prfnt (end = '\n')

  406. கீழ்க்காணும் அமைப்பில் எண்களை அச்சிடுவதை விளக்கும் நிரலை எழுதுக.
    1)
    5 5 5 5 5 
    4 4 4 4 
    3 3 3 
    2 2
    1
    2)
    1 2 3 4 5
    1 2 3 4 
    1 2 3
    1 2
    1

  407. செயற்கூறின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  408. இரண்டு எண்களின் LCM கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  409. தற்சுழற்சி செயற்கூறு பற்றி எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

  410. இரண்டு எண்களின் HCF கண்டுபிடிப்பதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  411. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  412. கொடுக்கப்பட்ட சரம் பாலின்ட்ரோமா இல்லையா என்பதை சோதிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  413. பயனரிடமிருந்து பெறப்படும் சரத்தில் உள்ள உயிர் எழுத்துக்களை நீக்கிவிட்டு அதே சரத்தை வெளிப்படுத்தும் பைத்தான் நிரலை எழுதுக.

  414. கொடுக்கப்பட்ட சரத்தில் ஒரு குறிப்பிட்ட குறியுரு எத்தனை முறை இடம் பெறுகிறது என்பதை கணக்கிடும் பைத்தான் நிரலை எழுதுக.

  415. range( ) ன் நோக்கம் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  416. பின்னலான Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  417. remove ( ), Clear ( ), Pop ( ) செயற்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  418. ஆறு பாடங்களின் மதிப்பெண்களை உள்ளீடாகப் பெற்று. ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்களை அச்சிட்டு மதிப்பெண்களின் கூட்டுத்தொகையை காண்பிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  419. பொருள்களின் விலையை List-ல் பெற்று, அனைத்து விலைகளின் கூட்டுத்தொகை,பெருக்கற்தொகை மற்றும் சராசரியைக் கண்டறியும் பைத்தான் நிரலை எழுதுக.

  420. 1 முதல் 10 வரையுள்ள தொடர் எண்களை ஏற்கும் List ஒன்றை உருவாக்குவதற்கான நிரலை எழுதுக. பிறகு அனைத்து இரட்டைப்படை எண்களையும் நீக்கிவிட்டு இறுதிப்பட்டியலை அச்சிடுக.

  421. பைபோனாசி வரிசையை உருவாக்கி அதை List-ல் சேமிப்பதற்கான நிரலை எழுதுக. பிறகு அனைத்து மதிப்புகளின் கூட்டுத்தொகையைக் கண்டறிக. 

  422. Tuple-ல் ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்புகளை திருப்புதல் என்பதை எடுத்துக்காட்டு மூலம் விளக்குக.

  423. செயற்கூற்றைப் பயன்படுத்தி, வட்டத்தின் ஆரத்தை செயற்கூறுக்கு அளபுருவாக அனுப்பி, வட்டத்தின் பரப்பு மற்றும் சுற்றளவை திருப்பி அனுப்புவதற்கான நிரலை எழுதுக.

  424. பின்வரும் -ன் செயற்கூறுகளை விளக்குக.
    (i) copy ( )
    (ii) count ( )
    (iii) index ( )
    (iv) reverse ( )

  425. எழுது பொருட்களை (stationary) சேர்க்க அல்லது நீக்கும் பட்டியல் முறை நிரல் ஒன்றை எழுதுக. பொருள்களின் பெயர் மற்றும் பிராண்ட் - யை ஒரு dictionary - யில் சேமிக்க வேண்டும்.

  426. இனக்குழுவைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட எண் நேர்மறை எண்ணா அல்லது எதிர்மறை எண்ணா என்று சோதித்து அச்சிடும் பைத்தான் நிரலை எழுதுக.

  427. உன்னுடைய பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை பதிவு செய்து, புத்தகங்களின் பட்டியலை காட்டும் பைத்தான் நிரலை எழுதுக.

  428. பொருட்களையும், அதன் அடக்க விலையையும் சேமிக்கவும், சேமிக்கப்பட்ட பொருட்களை திரையில் தோன்றவும் செய்ய வேண்டும். அப்போது அனைத்து பொருட்கைளையும் அளவுகளை உள்ளீடாக பெற்று இறுதியில் விலைப்பட்டியலை அச்சிடும் பைத்தான் நிரல் ஒன்றை எழுதுக.

  429. உறவுநிலையின் வகைகளை விவரி.

  430. DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக. 

  431. ஒட்டுதல், வெட்டுதல், வேறுபாடு மற்றும் கார்டீசியன் பெருக்கல் போன்றவற்றை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  432. DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.

  433. பல்வேறு வகையான கட்டுப்பாடுகளையும், அதன் செயல்பாடுகளையும் எழுதுக.

  434. கீழ்காணும் பணியாளர் அட்டவணையை கருத்தில் கொண்டு (i) முதல் (v) வரையிலான வினாக்களுக்கு SQL கட்டளைகளை எழுதுக.

    EMP CODE NAME DESIG PAY ALLO WANCE
    S1001 Hariharan Supervisor 29000 12000
    P1002 Shaji Operator 10000 5500
    P1003 Prasad Operator 12000 6500
    C1004 Manjima Clerk 8000 4500
    M1005 Ratheesh Mechanic 20000 7000

    (i) அனைத்து பணியாளர்களின் விவரங்களை அவர்கள் பெறும் சம்பளங்களின் இறங்கு வரிசையில் காண்பிக்க.
    (ii) 5000 முதல் 7000 வரை ALLOWANCE பெறும் அனைத்து பணியாளர்களின் விவரங்களை காண்பிக்க.
    (iii) mechanic வகையை சார்ந்த பணியாளர்களை நீக்க.
    (iv) ஒரு புதிய வரிசையை உருவாக்க.
    (v) operators வகையை சார்ந்த அனைத்து பணியாளர்களின் விவரங்களை காண்பிக்க.

  435. SQLன் கூறுகள்? ஒவ்வொன்றிற்கும் கட்டளைகளை எழுதுக.

  436. மாணவர் அட்டவணையில் பின்வரும் SQL கூற்றுகளை கட்டமைக்கவும்.
    (i) SELECT கூற்று GROUP BY clause பயன்படுத்தி
    (ii) SELECT கூற்று ORDER BY clause பயன்படுத்தி

  437. பணியாளர்களுக்கான ஏதேனும் ஐந்து புலங்களைக் கொண்ட ஒரு அட்டவணையை உருவாக்க ஒரு SQL கூற்றினை எழுதி, அந்த பணியாளர் அட்டவணைக்கு ஒரு அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்கவும்.

  438. SQL ன் பல்வேறு செயலாக்க திறன்கள் பற்றி எழுதுக.

  439. ALTER கட்டளைப் பற்றி விரிவாக எழுதுக

  440. பின்வருவன பற்றி விரிவாக எழுதுக
    (i) TRUNCATE கட்டளை
    (ii) DROP TABLE கட்டளை

  441. பரிவர்த்தனை கட்டுப்பாட்டு மொழி கட்டளைகள் பற்றி விவரி.

  442. எக்ஸெல் மற்றும் CSV கோப்பின் வேறுபாடுகள் என்ன?

  443. பல்வேறு கோப்பு முறைமைகளின் பொருள்களை பட்டியலிடுக.

  444. பைத்தானில் ஒரு கோப்பை படிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை எழுதுக.

  445. தனிப்பயனாக்கம் பிரிப்பானுடன் கூடிய CSV கோப்பை எழுதுவதற்கான பைத்தான் நிரலை எழுதுக.

  446. CSV கோப்பிலுள்ள தரவை வடிவமைப்பதற்கு பின்பற்றவேண்டிய விதிமுறைகளை எழுதுக.

  447. பைத்தானில் உள்ள CSV.reader ( ) என்ற செயற்கூறு மூலம் கோப்பினை படிக்கும் நிரலை எழுதுக.

  448. பயனரால் வரையறுக்கப்பட்டுள்ள பிரிப்பானைக் கொண்டுள்ள '\(_{ | }^{ | }\)' கொண்டு CSV கோப்பினை படிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  449. CSV கோப்பின் அனைத்து வரிசையில் உள்ள மதிப்புகளையும் பட்டியலாக சேமிக்கும் பைத்தான் நிரலை எழுதுக.

  450. CSV கோப்பினுள் தலைப்பு நெடுவரிசையை தவிர்த்து பயனர் தேர்ந்தெடுத்த நெடுவரிசையை தவிர்த்து பயனர் தேர்ந்தெடுத்த நெடுவரிசையை வரிசையாக்கம் செய்யும் பைத்தான் நிரலை எழுதுக.

  451. CSV கோப்பினுள் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட புலங்களை வரிசைப்படுத்தும் பைத்தான் நிரலை எழுதி விளக்கவும்.

  452. வரிமுறிப்பானுடன் கூடிய CSV கோப்பினை அறியும் பைத்தான் நிரலை எழுதுக,

  453. தனியப்பன் Dialects உடன் CSV கோப்பாக Dictionary-ல் எழுதும் பைத்தான் நிரலை எழுதுக.

  454. இயங்கு நேரத்தில் தரவினை பெற்று CSV கோப்பினில் எழுதும் பைத்தான் நிரலை எழுதுக.

  455. பைத்தானில் ஏதேனும் 5 பண்புக்கூறுகளை கூறவும்.

  456. பின்வரும் கட்டளை ஒவ்வொன்றையும் விளக்கவும்.
    Python < filename.py > - < i > < C++ filename without cpp extension >

  457. பைத்தானில், sys, os, getopt கூறுநிலைகளின் தேவை என்ன என்பதை விளக்குக.

  458. getopt( ) என்ற செயற்கூறின் தொடரியலை எழுதி, அதன் செயலுறுப்புகளையும், திருப்பியனுப்பும் மதிப்புகளையும் விளக்குக.

  459. கீழ்காணும் c++ நிரலை செயல்படுத்த ஒரு பைத்தான் நிரலை எழுதவும்.
    #include < iostream >
    using namespace std;
    int main()
    { cout << “WELCOME”;
    return(0);
    }
    The above C++ program is saved in a file welcome.cpp

  460. பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  461. SQLite பற்றி விரிவாக எழுதவும். அதனை பயன்படுத்தும் படிநிலைகளை எழுதுக.

  462. fetchmany() பயன்படுத்தி பின்வரும் அட்டவணையிலுள்ள அனைத்து பதிவுகளையும் திரையிடுவதற்கான பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.

    Icode ItemName Rate
    1003 Scanner 10500
    1004 Speaker 3000
    1005 Printer 8000
    1008 Monitor 15000
    1010 Mouse 700
  463. HAVING துணைநிலைக்கூற்றின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

  464. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
    அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
    தரவுத்தளத்தின் பெயர் :- ABC
    அட்டவணையின் பெயர் :- Item
    நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :-

    Icode :- integer and act as primary key
    Item Name :- Character with length 25
    Rate :- Integer
    Record to be added :- 1008, Monitor,15000
  465. பின்வரும் supplier மற்றும் Item அட்டவணைகளை கவனித்து, (i) மற்றும் (ii) வினாக்களுக்கு பைத்தான் ஸ்கிரிப்டை எழுதவும்.

    SUPPLIER
    Suppno Name City Icode SuppQty
    S001 Prasad Delhi 1008 100
    S002 Anu Bangalore 1010 200
    S003 Shahid Bangalore 1008 175
    S004 Akila Hydrabad 1005 195
    S005 Girish Hydrabad 1003 25
    S006 Shylaja Chennai 1008 180
    S007 Lavanya Mumbai 1005 325

    i) டெல்லியில் வசிக்காத மொத்த விற்பனையாளர்களின் Name, City மற்றும் Itemname களை திரையிடவும்.
    ii) அகிலாவின் suppQty யில் உள்ள மதிப்போடு 40-யை அதிகரிக்கும்.

  466. அட்டவணையை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக

  467. SQL துணைநிலை கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக

  468. Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.

  469. Matplotlib திரையில் காணப்படும் பல்வேறு பொத்தான்களை விளக்குக.

  470. பின்வரும் செயற்கூறுகளின் பயன்பாட்டை எழுதுக.
    (அ) plt.xlabel
    (ஆ) plt.ylabel
    (இ) plt.title
    (ஈ) plt.legend( )
    (உ) plt.show( )

  471. ஹிஸ்டோகிராம் மற்றும் பட்டை வரைபடங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை எழுதுக

  472. வட்ட வரைபடம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணினி அறிவியல்  அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (12th Standard Tamil Medium Computer Science Important question)

Write your Comment