உலோகவியல் முக்கிய வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. பாக்ஸைட்டின் இயைபு  

  (a)

  Al2O3

  (b)

  Al2O3.nH2O

  (c)

  Fe2O3.2H2O

  (d)

  இவை எதுவுமல்ல

 2. ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது (A) என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது. (A)ன் நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது. வாயு (A) ஆனது 

  (a)

  CO2

  (b)

  SO3

  (c)

  SO2

  (d)

  H2S

 3. பின்வரும் வினைகளில், எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (Calcination) குறிப்பிடுகின்றது?

  (a)

  2Zn + O2 \(\rightarrow \) 2ZnO

  (b)

  2ZnS + 3O2 \(\rightarrow \) 2ZnO + 2SO2

  (c)

  MgCO3 \(\rightarrow \) MgO + CO2

  (d)

  (அ) மற்றும் (இ)

 4. கார்பனைக் கொண்டு உலோகமாக ஒடுக்க இயலாத உலோக ஆக்ஸைடு 

  (a)

  PbO

  (b)

  Al2O3

  (c)

  ZnO

  (d)

  FeO

 5. ஹால் ஹெரால்ட் செயல்முறையின்படி பிரித்தெடுக்கப்படும் உலோகம் 

  (a)

  Al

  (b)

  Ni

  (c)

  Cu

  (d)

  Zn

 6. மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  தூயகாப்பர் 

  (b)

  தூய்மையற்ற காப்பர் 

  (c)

  கார்பன் தண்டு 

  (d)

  பிளாட்டினம் மின்வாய் 

 7. பின்வருவனவற்றுள் எந்த வரைபடம்? எலிங்கம் வரைபடத்தினைக் குறிப்பிடுகிறது.

  (a)

  ΔS Vs T

  (b)

  ΔG0 Vs T

  (c)

  ΔG0 Vs \(\frac{1}{T }\)

  (d)

  ΔG0 Vs T2

 8. எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைடு உருவாதலுக்கு 

  (a)

  \(\left( \frac { \Delta { S }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது 

  (b)

  \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) நேர்குறியுடையது 

  (c)

  \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது 

  (d)

  \(\left( \frac { \Delta T }{ \Delta G ^ 0 } \right) \)ஆரம்பத்தில் நேர்குறியுடையது  7000C க்கு மேல் \(\left( \frac { \Delta {G }^{ 0 } }{ \Delta T } \right) \) எதிர்குறியுடையது 

 9. பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல?

  (a)

  Cr2O3 + 2Al \(\rightarrow \) Al2O3 + 2Cr

  (b)

  Al2O3 + 2Cr \(\rightarrow \) Cr2O3 + 2Al

  (c)

  3TiO2 + 4Al \(\rightarrow \) 2Al2O3 + 3Ti

  (d)

  இவை எதுவுமல்ல 

 10. எலிங்கம் வரைபடத்தை பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது? 

  (a)

  கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. நிலைமையில் மாற்றம் ஏற்படும் போது  நேர்கோட்டிலிருந்து விலகல் ஏற்படுகிறது.

  (b)

  CO2 உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது.

  (c)

  CO ஆனது எதிர்க்குறி சாய்வு மதிப்பினைப் பெற்றுள்ளது. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது CO அதிக நிலைப்புத் தன்மை உடையதாகிறது.

  (d)

  உலோக ஆக்சைடுகள் நேர்க்குறி சார்பு மதிப்பானது, வெப்பநிலை அதிகரிக்கும் போது  அவைகளின் நிலைப்புத்தன்மை குறைவதைக் காட்டுகிறது

 11. 5 x 2 = 10
 12. கனிமம் மற்றும் தாது ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் யாவை? 

 13. தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள் யாவை? 

 14. இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது? 

 15. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்? 

 16. நிக்கலைத் தூய்மையாக்கப் பயன்படும் ஒரு முறையினை விவரிக்க?

 17. 5 x 3 = 15
 18. புலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி.

 19. (அ) எலிங்கம் வரைபடத்தினை பயன்படுத்தி பின்வரும் நிகழ்வுகளுக்கான நிபந்தனைகளை கண்டறிக.
  i . மெக்னீசியாவை அலுமினியத்தைக் கொண்டு ஒடுக்குதல் 
  ii. மெக்னீசியத்தைக் கொண்டு அலுமினாவை ஒடுக்குதல்.
  (ஆ) 983K வெப்பநிலைக்கு கீழ் கார்பனைக் காட்டிலும் கார்பன் மோனாக்ஸைடானது சிறந்த ஒடுக்கும் காரணி விளக்குக.  
  (இ) ஏறத்தாழ 1200K வெப்பநிலையில் Fe2O3 யைக் கார்பனைக் கொண்டு ஒடுக்க இயலுமா? 

 20. துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக. 

 21. அலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக. 

 22. வாயு நிலைமைத் தூய்மையாக்கலுக்கான அடிப்படைத் தேவைகளை தருக. 

 23. 3 x 5 = 15
 24. மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.

 25. ஒடுக்கும் காரணியைத் தெரிவு செய்தல் என்பது வெப்ப இயக்கவியல் காரணியைப் பொறுத்தது தகுந்த உதாரணத்துடன் இக்கூற்றை விளக்குக.

 26. உலோகவியலில் மின்வேதி தத்துவத்தினைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.  

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard வேதியியல் Unit 1 உலோகவியல் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Chemistry Unit 1 Metallurgy Important Question Paper )

Write your Comment