இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது

  (a)

  அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்

  (b)

  அந்த ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்

  (c)

  அந்த ஆண்டின் மொத்த ரொக்கச் செலுத்தல்கள்

  (d)

  அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு

 2. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு

  (a)

  பெயரளவுக் கணக்கு

  (b)

  சொத்து கணக்கு

  (c)

  ஆள்சார் கணக்கு

  (d)

  பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

 3. நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது

  (a)

  ஒரு சொத்து

  (b)

  ஒரு பொறுப்பு

  (c)

  ஒரு செலவு 

  (d)

  தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று 

 4. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை

  (a)

  வருவாயின வரவு

  (b)

  முதலின வரவு

  (c)

  வருவாயினச் செலவு

  (d)

  முதலினச் செலவு

 5. ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ரூ.100 செலுத்துகின்றனர்.நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ. 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

  (a)

  ரூ 50,000

  (b)

  ரூ 50,200

  (c)

  ரூ 49,000

  (d)

  ரூ 49,800

 6. 5 x 2 = 10
 7. திருச்சி கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

  விவரம் ரூ விவரம் ரூ 
  தொடக்க  இருப்பு (1.1.2018) 20,000 பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது 12,000
  முதலீடுகள் செய்தது 80,000 அறைகலன் விற்றது 5,000
  மதிப்பூதியம் செலுத்தியது 3,000 பொதுச்செலவுகள்  7,000
  நன்கொடை பெற்றது 80,000 அஞ்சல் செலவுகள் 1,000
  தணிக்கைக் கட்டணம் செலுத்தியது 2,000 சந்தா பெற்றது 10,000
 8. வேலூர் பொழுதுபோக்கு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

  விவரம் ரூ  விவரம் ரூ
  தொடக்க இருப்பு (1.4.2016) 3,000 கேளிக்கை வரவுகள் 20,000
  தொடக்க வங்கி இருப்பு (1.4.2016) 12,000 சேர்க்கைக் கட்டணம் பெற்றது 1,000
  அறைகலன் வாங்கியது 11,000 நகராட்சி வரி 22,000
  விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது 11,000 அறக்கொடை நாடகக்காட்சி செலவு 2,000
  விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை 8,000 பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது 15,000
  பழைய டென்னிஸ் பந்துகள் விற்றது 1,500 புதிய டென்னிஸ் மைதானம் கட்டியது 18,000
  செய்தித்தாள்கள் வாங்கியது 500 அறக்கொடை நாடகக்காட்சிவரவுகள் 2,500
  பயணச் செலவுகள் 4,500 இறுதி கைரொக்க இருப்பு 8,000
 9. இலாப நோக்கற்ற அமைப்பின்பொருள் தரவும்.

 10. ஆயுள் உறுப்பினர் கட்டணம் – சிறு குறிப்பு தரவும்

 11. இலாப நோக்கற்ற அமைப்பின் வருவாயின வரவுகளில் ஏதேனும் நான்கினைத் தரவும்

 12. 5 x 3 = 15
 13. பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

  ப 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
  பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள் ரூ
  சந்தா        
  2017-2018 5,000      
  2018-2019 48,000      
  2019-2020 3,000 56,000    
           

  இச்சங்கத்தில் 300 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தாவாக ரூ. 200 செலுத்துகின்றனர். இன்னும் பெறவேண்டிய 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,000.

 14. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
  2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.

 15. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.

  எழுதுபொருள்களுக்காககொடுத்த தொகை (2017-2018) ரூ1,500
  எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) ரூ 200
  எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018)  ரூ 200

 16. இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதிக் கணக்குகளில் ஆண்டுச் சந்தா எவ்வாறு கையாளப்பளப்படுகிறது?

 17. இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதி கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன?
  (அ) விளையாட்டுப் பொருள்கள்கள் விற்பனை
  (ஆ) ஆயுள் உறுப்பினர் கட்டணம்
  (இ) தொடர் விளையாட்டுப் போட்டி நிதி

 18. 4 x 5 = 20
 19. கரூர் சமூக மன்றத்தின் 2018 மார்ச் 31 ஆம் நாளைய முதல் நிதியினைக் கணக்கிடவும்.

  விவரம் (31.03.2018) ரூ 
  அறைகலன் 50,000
  கட்டடம் 40,000
  2017-18 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது 10,000
  2018-19 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது 5,000
  கடன் வாங்கியது 10,000
  முதலீடுகள் 20,000
  கைரொக்கம்  6,000
 20. கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து, 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
   

  ப கோ யம்புத்தூர் கிரிக்கெட் மன்றம் 2016, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரியபெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
  பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
  இருப்பு கீ/கொ   பராமரிப்புச் செலவுகள் 5,000
  வங்கி ரொக்கம் 8,000 அறைகலன் 15,000
  சந்தா 11,000 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 1,400
  பழைய மட்டைகள் மற்றும் பந்துகள்   செயலாளர் மதிப்பூதியம் 4,500
  விற்றது 100 மட்டை கள் மற்றும் பந்துகள் 7,400
  தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா 2,000 இருப்பு கீ/இ  
  உயில்கொடை 20,000 வங்கி ரொக்கம் 7,800
    41,100   41,100

  கூடுதல் தகவல்கள்:
  2015, ஏப்ரல் 1 அன்று மன்றத்தில் பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ3,000; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.500. தொடர் விளையாட்டுப் போட்டியின் உபரித்தொகைத் நிரந்தர அரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும். 31.3.2016 அன்று பெறவேண்டிய சந்தாரூ 2,000. 31.3.2016-ல் மட்டைகள் மற்றும் பந்துகள் இருப்பு ரூ1,000.

 21. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்துகோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

  விவரம்  ரூ ரூ விவரம் ரூ
  வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018   6,000 மதிப்பூதியம் செலுத்தியது 2,800
  கைரொக்கம்    1,000 நீர் மற்றும் மின்சாரக் கட்டணம்  700
  மைதான பராமரிப்பிற்காக     விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 2,600
  கூலி செலுத்தியது   2,000 விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது 1,900
  சந்தா பெற்றது: முந்தை்தைய ஆண்டு 500   விளையாட்டுப் போட்டி நிதி நிதி வரவுகள் 5,200
  நடப்பு ஆண்டு 9,600   உயில்கொடைப் பெற்றது 2,000
  எதிர்வரும் ஆண்டு  400 10,500 ரொக்க இருப்பு (31.3.2019) 300
  கூலி கொடுபட வேண்டியது   2,200 அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை 2,000
  கடன்மீதான வட்டி செலுத்தியது   2,000 அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை 2,000
 22. பின்வரும் விவரங்கள் 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
  2018 ஆம் ஆண்டில் சந்தா பெற்றது ரூ50,000. இதில் 2017 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 5,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 7,000 உள்ளடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தாரூ 6,000. 2017 ஆம் ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.4,000

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மாதிரி வினாத்தாள்

Write your Comment