" /> -->

கூட்டாளி சேர்ப்பு மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. மறுமதிபீட்டுக் கணக்கு ஒரு

  (a)

  சொத்து க/கு

  (b)

  பெயரளவு க/கு

  (c)

  ஆள்சார் க/கு

  (d)

  ஆள்சாரா க/கு

 2. கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

  (a)

  முதல் விகிதம்

  (b)

  தியாக விகிதம்

  (c)

  ஆதாய விகிதம்

  (d)

  இவற்றுள் எதுவுமில்லை

 3. கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?

  (a)

  பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்

  (b)

  முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

  (c)

  கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்

  (d)

  ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது

 4. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

  (a)

  மறுமதிப்பீட்டு இலாபம்

  (b)

  பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்

  (c)

  புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்

  (d)

  முதலீட்டு மாறுபடும் நிதி

 5. பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

  (a)

  1:3

  (b)

  3:1

  (c)

  2:1

  (d)

  1:2

 6. 5 x 2 = 10
 7. கவிதா மற்றும் இராதா எனும் கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். 1.1.2019 அன்று அவர்கள் தீபா என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அந்நாளில் அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பில் இலாப நட்டக் கணக்கு பற்று இருப்பாக ரூ.70,000 பகிர்ந்து தரா நட்டமாக சொத்துகள் பக்கத்தில் காட்டியது. கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா நட்டத்தை மாற்றுவதற்கு குறிப்பேட்டுப் பதிவு தரவும்.

 8. இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3.2 என இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
  (அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15,000 உயர்த்தப்பட்டது
  (ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4,000 குறைக்கப்பட்டது
  (இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1,000 உருவாக்கப்பட்டது.

 9. ஆனந்த் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் முறையே 7 : 3 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 31 மார்ச், 2018 ஆம் நாளைய அவர்களது இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு:

  பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
  முதல் கணக்குகள்:     நிலம் 60,000
  ஆனந்த் 50,000   சரக்கிருப்பு 40,000
  பாலு 30,000 80,000 கடனாளிகள் 20,000
  பற்பல கடனீந்தோர்   20,000 கைரொக்கம் 10,000
  இலாப நட்ட க/கு   30,000    
      1,30,000   1,30,000

  2018 ஏப்ரல் 1 ஆம் நாளன்று அவர்கள் சந்துரு என்பவரை கீழ்க்காணும் சரிக்கட்டுதல்களுக்கு ஒப்புக்கொண்டு 1/4 பங்குக்கு கூட்டான்மையில் சேர்த்துக் கொண்டனர்
  (அ) சரக்கிருப்பு மதிப்பை ரூ.3,000 குறைப்பது
  (ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.2,000 உருவாக்குவது
  (இ) நிலத்தின் மதிப்பை ரூ.10,000 மதிப்பேற்றம் செய்வது
  மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் முதல் கணக்கினை கூட்டாளி சேர்ப்பிற்குப் பின் தயாரிக்கவும்.

 10. புதிய கூட்டாளி சேர்க்கையின்போது, பகிர்ந்துதரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் எவ்வாறு கூட்டாளிகளிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது?

 11. புதிய கூட்டாளி சேர்க்கப்படும் போது, ஏற்கனவே உள்ள நற்பெயரை பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

 12. 5 x 3 = 15
 13. ரமேஷ் மற்றும் ராஜு என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரஞ்சன் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். ரஞ்சன் அவரது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 3:2 என்ற விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

 14. விமல் மற்றும் ஆதி என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜெயம் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

 15. அனில், சுனில் மற்றும் ஹரி என்ற மூன்று கூட்டாளிகள் 4:3:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ராஜா என்பவரை 20% இலாபத்திற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

 16. கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிகட்டுதல்கள் யாவை?

 17. நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறை குறித்து சிறு குறிப்பு தரவும்.

 18. 4 x 5 = 20
 19. அசோக் மற்றும் மும்தாஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் தருண் என்பவரை 2/9 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.27,000 என்று மதிப்பிடப்படுகிறது. தருணால் தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. நிறுவனம் மாறுபடும் முதல் முறையில் கணக்கினைப் பராமரிக்கிறதெனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

 20. வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-12-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

  பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
  முதல் கணக்குகள்     அறைகலன் 25,000
  வெற்றி 30,000   சரக்கிருப்பு 20,000
  இரஞ்சித் 20,000 50,000 கடனாளிகள் 10,000
  காப்பு நிதி   5,000 கைரொக்கம் 35,000
  பற்பல கடனீந்தோர்   45,000 இலாப நட்ட க/கு (நட்டம்) 10,000
      1,00,000   1,00,000

  பின்வரும் சரிக்கட்டுதல்களில் 01.01.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.
  (i) சூரியா 1/4 இலாபப் பங்கிற்காக ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
  (ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.
  (iii) கடனாளிகள் ரூ.7,500 என மதிப்பிடப்படுகிறது.
  (iv) அறைகலன் மதிப்பு ரூ.40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது.
  (v) கொடுபட வேண்டிய கூலி ரூ.4,500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
  புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு, கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.

 21. அமீர் மற்றும் ராஜா என்ற கூட்டாளிகளின் இலாபப்பகிர்வு விகிதம் 3:2. 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

  பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
  முதல் கணக்குகள்:     இயந்திரம் 60,000
  அமீர் 80,000   அறைகலன் 40,000
  இராஜா 70,000 1,50,000 கடனாளிகள் 30,000
  காப்பு நிதி   15,000 சரக்கிருப்பு 10,000
  கடனீந்தோர்   35,000 முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு 40,000
        வங்கி ரொக்கம் 20,000
      2,00,000   2,00,000

   ரோஹித் என்பவர் புதிய கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார். அவர் எதிர்கால இலாபத்தில் தன்னுடைய 1/5 பங்கிற்காக ரூ.30,000 முதலாகக் கொண்டு வந்தார். அவர் நற்பெயரில் தன்னுடைய பங்காக ரூ.10,000 கொண்டு வந்தார்.
  மறுமதிபீடுப் பின்வருமாறு செய்யப்பட்டது
  (i) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.14,000 ஆக அதிகரிக்கப்பட்டது.
  (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்படவேண்டும்.
  (iii) இயந்திரம் மதிப்பு ரூ.80,000 ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டது.
  தேவையான பேரேட்டு கணக்குகள் தயார் செய்து சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக்
  குறிப்பினைத் தயார் செய்யவும்.

 22. இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் ஜேம்ஸ் மற்றும் ஜஸ்டினாவின் 1.1.2017 ம் நாளன்றைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

  பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
  முதல் கணக்குகள்:     கட்டடம் 70,000
  ஜேம்ஸ் 40,000   சரக்கிருப்பு 30,000
  ஜஸ்டினா 50,000 90,000 கடனாளிகள் 20,000
  கடனீந்தோர்   35,000 வங்கி ரொக்கம் 15,000
  காப்பு நிதி   15,000 முன்கூட்டிச் செலுத்திய
  காப்பீடு
  5,000
      1,40,000   1,40,000

  மேற்கூறிய நாளில் பாலன் என்பவரை எதிர்கால இலாபத்தில் 1/5 பங்கிற்கு பின்வரும் விவரங்கள் அடிப்படையில் கூட்டாளியாக சேர்த்தனர்.
  (i) பாலன் ரூ.25,000 முதல் கொண்டுவந்தார்.
  (ii) நற்பெயரில் அவருடைய பங்காக ரூ.10,000 ரொக்கமாக கொண்டுவந்தார்.
  (iii) சொத்துகள் கீழ்க்கண்டவாறு மதிப்பிடப்பட்டன:
  கட்டடம் ரூ.80,000; கடனாளிகள் ரூ.18,000; சரக்கிருப்பு ரூ.33,000.
  தேவையான பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்து கூட்டாளி சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about கூட்டாளி சேர்ப்பு மாதிரி வினாத்தாள்

Write your Comment