உலோகவியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பாக்ஸைட்டின் இயைபு  ________.

    (a)

    Al2O3

    (b)

    Al2O3.nH2O

    (c)

    Fe2O3.2H2O

    (d)

    இவை எதுவுமல்ல

  2. ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? 

    (a)

    CS2 மற்றும் H2S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் \(\Delta \)Gf0 மதிப்பு அதிகம் 

    (b)

    சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு  \(\Delta \)Gr0 மதிப்பு எதிர்க்குறியுடையது. 

    (c)

    சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்.  

    (d)

    உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும். 

  3. இளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது? 

    (a)

    தாதுக்களை சிலிக்கேட்டுகளாக மாற்ற 

    (b)

    கரையாத மாசுக்களை, கரையும் மாசுக்களாக மாற்ற 

    (c)

    கரையும் மாசுக்களை கரையாத மாசுக்களாக மாற்ற 

    (d)

    மேற்கண்டுள்ள அனைத்தும் 

  4. மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    தூயகாப்பர் 

    (b)

    தூய்மையற்ற காப்பர் 

    (c)

    கார்பன் தண்டு 

    (d)

    பிளாட்டினம் மின்வாய் 

  5. பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல.

    (a)

    Cr2O3 + 2Al \(\rightarrow \) Al2O3 + 2Cr

    (b)

    Al2O3 + 2Cr \(\rightarrow \) Cr2O3 + 2Al

    (c)

    3TiO2 + 4Al \(\rightarrow \) 2Al2O3 + 3Ti

    (d)

    இவை எதுவுமல்ல 

  6. 5 x 2 = 10
  7. கனிமம் மற்றும் தாது ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் யாவை? 

  8. தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கும் பல்வேறு படிநிலைகள் யாவை? 

  9. எவ்வகை தாதுக்களை அடர்ப்பிக்க நுரை மிதப்பு முறை ஏற்றது? அத்தகைய தாதுக்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக. 

  10. கரி மற்றும் CO ஆகிய இரண்டினுள் ZnO வை ஒடுக்க, சிறந்த ஒடுக்கும் காரணி எது? ஏன்? 

  11. நிக்கலைத் தூய்மையாக்கப் பயன்படும் ஒரு முறையினை விவரிக்க?

  12. 5 x 3 = 15
  13. புலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி.

  14. துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக. 

  15. அலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக. 

  16. பின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக. 
    (அ) மாசு 
    (ஆ) கசடு

  17. வாயு நிலைமைத் தூய்மையாக்கலுக்கான அடிப்படைத் தேவைகளை தருக. 

  18. 4 x 5 = 20
  19. மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.

  20. ஒடுக்கும் காரணியைத் தெரிவு செய்தல் என்பது வெப்ப இயக்கவியல் காரணியைப் பொறுத்தது தகுந்த உதாரணத்துடன் இக்கூற்றை விளக்குக.

  21. எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை? 

  22. உலோகவியலில் மின்வேதி தத்துவத்தினைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.  

*****************************************

Reviews & Comments about உலோகவியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment