10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஆயத்தொலைவு வடிவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

  5 Marks

  5 x 5 = 25
 1. ஓர் அறையின் தளமானது ஒரே மாதிரியான முக்கோண வடிவத் தரை ஓடுகளைக் கொண்டு (tiles) அமைக்கப்படுகிறது. அதில் ஓர் ஓட்டின் முனைகள் (-3,2),(-1,-1) மற்றும் (1,2) ஆகும். தரைத்தளத்தை முழுமையாக அமைக்க 110 ஓடுகள் தேவைப்படுகின்றது எனில், அதன் பரப்பைக் காண்க.

 2. A(-5,-4) , B(1,6) மற்றும் C(7,-4) ஆகியவற்றை முனைப் புள்ளிகளாகக் கொண்ட முக்கோண வடிவக் கண்ணாடிக்கு வர்ணம் பூசப்படுகிறது. 6 சதுர அடி பரப்புக்கு வர்ணம் பூச ஒரு வாளி தேவைப்படுகிறது எனில், கண்ணாடியின் முழுப் பகுதியையும் ஒரு முறை வர்ணம் பூச எத்தனை வாளிகள் தேவைப்படும்?

 3. A(1,-2) , B(6,-2), C(5,1) மற்றும் D(2,1) என்பன நான்கு புள்ளிகள் எனில், 
  (a) AB (b) CD என்ற கோட்டுத் துண்டுகளின் சாய்வுகளைக் காண்க. 

 4. பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்தாமல், (1, -4), (2, -3) மற்றும் (4, -7) என்ற முனைப் புள்ளிகள் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் எனக் காட்டுக.

 5. ஓர் அலைபேசி மின்கலத்தின் சக்தி 100% இருக்கும்போது (battery power) அலைபேசியைப் பயன்படுத்த தொடங்குகிறோம். x மணி நேரம் பயன்படுத்திய பிறகு மீதி இருக்கும் மின்கலத்தின் சக்தி y சதவீதம் (தசமத்தில்) ஆனது y = − 0.25x + 1 ஆகும்
  மின்கலம் தனது முழுச் சக்தியை இழக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு எவ்வளவு?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் பாடம் ஆயத்தொலைவு வடிவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 10th Standard Tamil Medium Maths Subject Coordinate Geometry Book Back 5 Mark Questions with Solution Part - I )

Write your Comment