" /> -->

மாதிரி வினாத்தாள் பகுதி - II

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

  14 x 1 = 14
 1. A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை

  (a)

  3

  (b)

  2

  (c)

  4

  (d)

  8

 2.  A={1,2,3,4}, B={4,8,9,10} என்க.  f : A ⟶ B ஆனது f={(1,4),(2,8),(3,9),(4,10)} எனக் கொடுக்கப்பட்டால் f-என்பது

  (a)

  பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு

  (b)

  சமனிச் சார்பு

  (c)

  ஒன்றுக்கொன்றான சார்பு

  (d)

  உட்சார்பு

 3. 1729-ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 4. 4x4-24x3+76x2+ax+b ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு

  (a)

  100,120

  (b)

  10,12

  (c)

  -120,100

  (d)

  12,10

 5. மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டு தொகுப்பிற்கு தீர்வு காணும் போது 0 = 0 என்பது போன்ற முற்றொருமை கிடைக்குமாயின் அந்த சமன்பாட்டு தொகுப்பிற்கு

  (a)

  தீர்வு இல்லை

  (b)

  ஒரே ஒரு தீர்வு

  (c)

  எண்ணற்ற தீர்வுகள்

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 6. x2 + 5x + 64 = 0 மற்றும் x2 - 8x + k = 0 ஆகிய இருபடிச்சமன்பாடுகள் மெய் மூலங்களை கொண்டிருக்கும் எனில், k ன் மிகை மதிப்பு = 

  (a)

  16

  (b)

  -16

  (c)

  12

  (d)

  -12

 7. படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

  (a)

  1200

  (b)

  1000

  (c)

  1100

  (d)

  900

 8. (5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோட்டமைந்தவை எனில், p–யின் மதிப்பு

  (a)

  3

  (b)

  6

  (c)

  9

  (d)

  12

 9. இரண்டு நபர்களுக்கு இடைப்பட்ட தொலைவு x மீ ஆகும். முதல் நபரின் உயரமானதுஇரண்டாவது நபரின் உயரத்தைப் போல இரு மடங்காக உள்ளது. அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்கோட்டின் மையப் புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக்ககோணங்கள் நிரப்புக்கோணங்கள் எனில், குட்டையாக உள்ள நபரின் உயரம் (மீட்டரில்) காண்க

  (a)

  \(\sqrt 2\) x

  (b)

  \(\frac {x }{2\sqrt 2}\)

  (c)

  \(\frac {x }{\sqrt 2}\)

  (d)

  2 x

 10. (1 - sinθ) sec2 θ =

  (a)

  0

  (b)

  1

  (c)

  tan2θ

  (d)

  cos2θ

 11. ஒரு கோபுரத்திலிருந்து 28.5 மீ தூரத்தில் நின்று கொண்டிருக்கும் ஒருவர் கோபுரத்தின் உச்சியை 450 ஏற்றக் கோணத்தில் காண்கிறார். அவருடைய கிடைநிலைப் பார்வைக் கோடு தரையிலிருந்து 1.5 மீ உயரத்தில் உள்ளது எனில், கோபுரத்தின் உயரம்

  (a)

  30 மீ

  (b)

  27.5மீ

  (c)

  28.5 மீ

  (d)

  27மீ

 12. ஆரம் 5 செ.மீ மற்றும் சாயுயரம் 13செ.மீ  உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம் 

  (a)

  12செ.மீ 

  (b)

  10செ.மீ 

  (c)

  13செ.மீ 

  (d)

  5செ.மீ 

 13. x,y,z  ஆகியவற்றின் திட்டவிளக்கம் p-எனில், 3x +5, 3y +5, 3z +5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது 

  (a)

  3p+5

  (b)

  3p 

  (c)

  p+5

  (d)

  9p+15

 14. ஆங்கில எழுத்துக்கள் {a,b ,.......,z}-யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x-க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு 

  (a)

  \(\frac {12 }{13}\)

  (b)

  \(\frac {1 }{13}\)

  (c)

  \(\frac {23 }{26}\)

  (d)

  \(\frac {3 }{26}\)

 15. பகுதி - II

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

  10 x 2 = 20

 16. குத்துக் கோடு சோதனையைப் பயன்படுத்தி மேற்கண்ட வரைபடம் ஓர் சார்பினைக் குறிக்குமா எனக் காண்க. உன் விடைக்கு காரணம் கூறு?

 17. ஒரு சினிமா அரங்கின் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன. அடுத்தடுத்த ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையைவிட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன. கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் இருக்கும்?

 18. பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண் 
  1,-1,-3,-5,....

 19. \(\cfrac { { x }^{ 4 }{ b }^{ 2 } }{ x-1 } \) ஐ \(\cfrac { { x }^{ 2 }-1 }{ { a }^{ 4 }{ b }^{ 3 } } \) -ஆல் பெருக்குக.

 20. \(A = \left[ \begin{matrix} 4 & 9 & -6 \\ 8 & -6 & \sqrt { 3 } \\ 3.5 & \frac { 16 }{ 19 } & \sqrt { 29 } \end{matrix} \right] \) a31,a13, a22, a33 ஆகிய உறுப்புகளை எழுதுக

 21. BC -யின் மை யப்புள்ளி D மற்று AE丄BC. BC=a, AC=b,AB=c, ED=x, AD=p மற்றும் AE=h, எனில்
  b2 = p2 + ax + \(\frac { { a }^{ 2 } }{ 4 } \)

 22. படத்தில் OA.OB = OC.OD.∠A = ∠C மற்றும் ∠B = ∠D எனக் காட்டுக.

 23. பின்வரும் சாய்வுகளைக் கொண்ட நேர்கோடுகளின் சாய்வுக் கோணம் என்ன?
  1

 24. \(\frac { sinA }{ 1+cosA } =\frac { 1-cosA }{ sinA } \) என்பதை நிரூபிக்கவும்

 25. ஒரு எலக்ட்ரீசியன் 4மீ உயரம் கொண்ட கம்பத்தில் மின்சார பழுதை சரிசெய்ய முயல்கிறார். பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ள அவர் கம்பத்தின் மேல்புறத்திலிருந்து 1.3மீ கீழே ஒரு புள்ளியை அடைய வேண்டும். அப்புள்ளியிலிருந்து தரைக்கு இணைக்கப்பட்டுள்ள ஏணியின் ஏற்றக்கோணம் 600 எனில் அந்த ஏணியின் நீளம் யாது?

 26. கித்தானைக் கொண்டு 7மீ ஆரமும் 24மீ உயரமும் உடைய ஒரு கூம்பு வடிவக் கூடாரம் உருவாக்கப்படுகிறது. செவ்வக வடிவக் கித்தானின் அகலம் 4மீ எனில், அதன் நீளம் காண்க.

 27. ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புறம் மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7செ.மீ. அதன் உயரம் 45செ.மீ எனில், அதன் கொள்ளளவைக் காண். (\(\pi =\frac { 22 }{ 7 } \) பயன்படுத்தி)

 28. ஒரு நெட்டாண்டில் (leap year) 53 சனிக்கிழமைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?(குறிப்பு:366=52x 7+2)

 29. 5 மாணவர்கள் 50 மதிப்பெண் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் 20,25,30,35,40 அவற்றின் திட்ட விலக்கம் காண். மதிப்பெண்களை 100க்கு மாற்றம் செய்தால் புதிய எண்களின் திட்டவிலக்கம் காண்.

 30. பகுதி - III

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 32க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

  7 x 5 = 35
 31. f(x) = (1 + x),
  g(x) = (2x - 1)
  எனில் fo(g(x)) ≠ gof(x) என நிரூபி.

 32. ஒரு கூட்டுத் தொடரின் 3ம் உறுப்பு 5; 7வது உறுப்பு 9 எனில் அந்த A.P  ஐக் காண்க.

 33. கீழ்க்காணும் மூன்று மாறிகளில் அமைந்த ஒருங்கமை நேரியல் சமன்பாட்டுத் தொகுப்புகளைத் தீர்க்க.
  \(\cfrac { 1 }{ x } -\cfrac { 2 }{ y } +4=0;\cfrac { 1 }{ y } -\cfrac { 1 }{ z } +1=0;\cfrac { 2 }{ x } +\cfrac { 3 }{ x } =14\)

 34. கீழ்காணும் பல்லுறுப்புக் கோவைகள் மீ.பொ.வ காண்க.
  x2-12x+35

 35. A என்ற புள்ளியில் இருந்து B என்ற புள்ளிக்குச் செல்வதற்கு ஒரு குளம் வழியாக, நடந்து செல்ல வேண்டும். குளம் வழியே செல்வதைக் தவிர்க்க 34 மீ தெற்கேயும், 41 மீ கிழக்கு நோக்கியும் நடக்க வேண்டும். குளம் வழியாகச் செல்வதற்குப் பாதை அமைத்து அப்பாதை வழியே சென்றால் எவ்வளவு மீட்டர் தொலைவு சேமிக்கப்படும்?

 36. AD丄BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.

 37. A(3,-4), B(9,-4) , C(5,-7) மற்றும் D(7,-7) ஆகிய புள்ளிகள் ABCD என்ற சரிவகத்தை அமைக்கும் எனக் காட்டுக.

 38. A(6, 1), B(8, 2), C(9, 4) மற்றும் D(P, 3) என்பன ஒரு இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் எனில், Pயின் மதிப்பைக் காண்.

 39. 66 மீ உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பின் உச்சியிலிருந்து ஒரு விளக்குக் கம்பத்தின் உச்சிமற்றும் அடியின் ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணம் முறையே 60°, 30° எனில் விளக்குக் கம்பத்திற்கும் அடுக்குமாடிக்கும் இடையே உள்ள தொலைவு காண்க.

 40. சூரியனின் குத்துக்கோடு(ஒளி) ஒரு கட்டிடத்தின் மீது படுகிறது. அது 450 லிருந்து 300 ஆக மாறும் போது கட்டிடத்தின் நிழல் 10மீ உயருகிறது. கட்டிடத்தின் உயரத்தை காண்க. ஓரிலக்க தசம விரிவில் காண்க.

 41. சம ஆரங்கள் கொண்ட இரு கூம்புகளின் கன அளவுகள் 3600 க.செ.மீ மற்றும் 5040 க.செ.மீ எனில், உயரங்களின் விகிதம் காண்க.

 42. 1.5 செ.மீ விட்டமும் 0.2 செ.மீ தடிமனும் கொண்ட வில்லைகள் உருக்கப்பட்டு 10செ.மீ உயரமும் 4.5 செ.மீ விட்டமும் கொண்ட உருளையாக வார்க்கப்பட்டால் எத்தனை வில்லை தேவைப்படும்?

 43. ஒரு வகுப்புத் தேர்வில், 10 மாணவர்களின் மதிப்பெண்கள் 25,29,30,33,35,37,38,40,44,48 ஆகும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.

 44. ஒரு விவரத்தின் மாறுபட்டுக் கெழு 69% திட்டவிலக்கம் 15.6 எனில், சராசரியைக் காண்.


 45. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  2 x 8 = 16
  1. படத்தில் O என்பது செவ்வகம் ABCD யில் உள்ளே உள்ள புள்ளி எனில், OB2 + OD2 = OA2 + OC2 என நிரூபிக்க.

  2. ஒரு உலோகக் கோளம் உருக்கப்பட்டு சிறிய கோளங்களை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சிறிய கோளத்தின் ஆரமும் பெரிய கோளத்தின் ஆரத்தில் நான்கில் 1 பங்கு எனில் எத்தனை சிறிய கோளங்கள் செய்ய முடியும்?

  1. ஒரு 52 சீட்டுக் கட்டிலிருந்து ஒரு ஸ்பேடு அல்லது ஒரு ஹார்ட் சீட்டு எடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?

  2. y=2x2-3x-5 யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி 2x2-4x-6 =0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு கணிதம் மாதிரி வினாத்தாள் பகுதி - II (10th Standard Maths Model Question Paper Part - II)

Write your Comment