" /> -->

Important Question Part-II

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  12 x 1 = 12
 1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

  (a)

  ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கே்கேரி, உதுமானியர்

  (b)

  ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா

  (c)

  ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

  (d)

  ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி 

 2. பாரிஸ் அமைதி நாடு நடைபெற்ற ஆண்டு _______

  (a)

  1917

  (b)

  1918

  (c)

  1919

  (d)

  1924

 3. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?

  (a)

  ஆங்கிலேயர்

  (b)

  ஸ்பானியர்

  (c)

  ரஷ்யர்

  (d)

  பிரெஞ்சுக்காரர்

 4. தென் அமெரிக்காவில் அஸ்டெக்குதல் _______ ஆண்டுகள் தங்கள் பேரரசை ஆட்சி செய்தனர்.

  (a)

  250

  (b)

  200

  (c)

  300

  (d)

  100

 5. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

  (a)

  கவாசாகி

  (b)

  இன்னோசிமா

  (c)

  ஹிரோஷிமா

  (d)

  நாகசாகி

 6. 1941 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் _________ படைகள் ரஷ்யாவின் மீது படையெடுத்தன

  (a)

  இங்கிலாந்து

  (b)

  ஆப்ரிக்கா

  (c)

  ஜெர்மன்

  (d)

  இத்தாலி

 7. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

  (a)

  1975

  (b)

  1976

  (c)

  1973

  (d)

  1974

 8. கோமிஸ்டாங்கின் தலைவர்

  (a)

  ஷியாங் கே - ஷேக்

  (b)

  மா - சே - துஸ்

  (c)

  யுவான் - ஷி - கே

  (d)

  நாசர்

 9. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

  (a)

  பாபா தயாள் தாஸ்

  (b)

  பாபா ராம்சிங்

  (c)

  குருநானக்

  (d)

  ஜோதிபா பூலே

 10. பிரம்மசமாஜம் இணையாக பம்பாயில் 1867ல் நிறுவப்பட்ட அமைப்பு ______ ஆகும்

  (a)

  ஆரிய சமாஜம்

  (b)

  பிராத்தனை சமாஜம்

  (c)

  தியோபந்த் இயக்கம்

  (d)

  அலிகார் இயக்கம்

 11. ______ மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும், கவிஞராகவும் பிரணமித்தார்

  (a)

  அய்யன்காளி

  (b)

  ராஜாராம் மோகன்ராய்

  (c)

  நாராயண குரு

  (d)

  சையது அகமது கான்

 12. _________ என்பார் குழந்தைத் திருமணம் பழக்கத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டுமென இயக்கம் நடத்தினார்

  (a)

  பெர்ரம்ஜி மல்பாரி

  (b)

  பெரோசா மேத்தா

  (c)

  தீன்சா வாச்சா 

  (d)

  பாபாரம் சிங்

 13. Section - II

  9 x 2 = 18
 14. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?

 15. இருபதாம் நூற்றாண்டை வரலாற்று ஆசிரியர்கள் ஏன் நீண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு என்று அழைத்தனர்?

 16. நல்ல அண்டை வீட்டுக்காரன் - குறிப்பு தருக

 17. வின்ஸ்டன் சர்ச்சிலின் எழுச்சியூட்டும் உரையை பற்றி நீ அறிந்தது என்ன?

 18. கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?

 19. சோவியத் நாட்டின் பிளவு பற்றி குறிப்பு வரைக

 20. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதி பா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.

 21. பிரம்மஞான இயக்கம் யாரால் நிறுவப்பட்டது? எங்கு?

 22. அலிகார் இயக்கம் யாரால் நிறுவப்பட்டது? அதன் நோக்கம் யாது?

 23. Section - III

  7 x 5 = 35
 24. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி?

 25. சர்வதேச சங்கத்தின் அமைப்பும் உறுப்புகளும் பற்றி விவரிக்கவும்

 26. முசோலினியின் கீழ் பாசிஸ்டுகள் என்ற கூற்றினை விளக்கி எழுதவும்

 27. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க

 28. பன்னாட்டு நிதியமைப்பு (International Monetary Fund) பற்றி விவரிக்கவும்

 29. பெர்லின் சுவர் வீழ்ச்சி பற்றி விரிவாக எழுதுக

 30. நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக

 31. Section - IV

  5 x 8 = 40
 32. ஜெர்மன் பேரரசர்
  அ) ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் இயல்பு யாது?
  ஆ) ஜெர்மனின் வன்முறைசார் தேசியம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
  இ) மொராக்கோ விவகாரத்தில் கெய்சர் வில்லியம் தலையிட்டதேன்?
  ஈ) ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகளுக்கு என்ன நேர்ந்தது?

 33. இந்தோ-சீனாவின் காலனிய எதிப்புப் போராட்டம்
  அ) காலனியாதிக்க நீக்கம் எனும் கோட்பாட்டைத் தெளிவுபட விளக்குக.
  ஆ) இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் எவை?
  இ) காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள் வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள் எவ்வாறு உதவின?
  ஈ) இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல் கட்சி எது?

 34. பொதுச்சபையும் பாதுகாப்புக் கவுன்சிலும்
  அ) பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகளை பட்டியலிடுக.
  ஆ) பேரழிவு என்றால் என்ன?
  இ) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் யார்?
  ஈ) மறுப்பாணை அதிகாரம் (தடுப்பாணை) என்றால் என்ன?

 35. பெர்லின் அவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
  அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
  ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றார்?
  இ) 1961 ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
  ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?

 36. தியோபந்த் இயக்கம்
  அ) இவ்வியக்கத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் யார்?
  ஆ) இவ்வியக்கத்தின் இரண்டு முக்கியக் குறிக்கோ ள்கள் யாவை ?
  இ) தியோபந்த் பள்ளியை நிறுவியவர் யார்?
  ஈ) யாருக்கு எதிராக தியோபந்த் உலோமாக்கல்  சமய ஆணையைப்
  பிறப்பித்தனர் ?

 37. Section - V

  2 x 10 = 20
 38. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
  1. கிரேட் பிரிட்டன்
  2.ஜெர்மனி 
  3. பிரான்ஸ் 
  4. இத்தாலி 
  5. மொராக்கோ 
  6. துருக்கி 
  7. செர்பியா 
  8. பாஸ்னிய 
  9. கிரீஸ் 
  10. ஆஸ்திரிய-ஹங்கேரி 
  11. பல்கேரியா 
  12. ருமேனியா

 39. உலக வரைபடத்தில் கீழ்கண்டவற்றைக் குறிக்கவும்.
  ஹிரோஷிமா, நாகசாகி, ஹவாய் தீவு, மாஸ்கோ, சான் பிரான்சிஸ்கோ 

 40. Section - VI

  1 x 10 = 10
 41. கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
  1914 - முதல் உலகப்போர் தொடக்கம்
  1917 - ரஷ்யப் புரட்சி
  1918 - முதல் உலகப்போர் முடிவு
  1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
  1920 -  பன்னாட்டுச் சங்கம் அமைக்கப்படுதல்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 10th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important Question All Chapter 2019-2020 )

Write your Comment