" /> -->

Important Question Part-V

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  12 x 1 = 12
 1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

  (a)

  ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கே்கேரி, உதுமானியர்

  (b)

  ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா

  (c)

  ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி

  (d)

  ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி 

 2. முதல் உலகப் போரின் மாபெரும் விளைவு ________

  (a)

  பசுமை புரட்சி

  (b)

  பிரெஞ்சுப்புரட்சி

  (c)

  ரஷ்யப் புரட்சி

  (d)

  அமெரிக்க புரட்சி

 3. லத்தீன் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக மன்றோ கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

  (a)

  தியோடர் ரூஸ்வெல்ட்

  (b)

  ட்ரூமென்

  (c)

  ஐசனோவர் 

  (d)

  உட்ரோ வில்சன் 

 4. மா சே தூங்கினால் எழுச்சியூட்டப்பட்ட தலைவர் ________

  (a)

  ஹோ சி மின்

  (b)

  டாக்டர் சன் யாட் சென்

  (c)

  லெனின்

  (d)

  சியாங் - கை - ஷேக்

 5. ஜெர்மனியயோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

  (a)

  சேம்பர்லின்

  (b)

  வின்ஸ்டன் சர்ச்சில்

  (c)

  லாயிட் ஜார்ஜ்

  (d)

  ஸ்டேன்லி பால்டுவின்

 6. மனித உரிமைகள் தினம் _______ ல் கொண்டாடப்படுகிறது

  (a)

  டிசம்பர் 10

  (b)

  நவம்பர் 10

  (c)

  ஜனவரி 10

  (d)

  ஏப்ரல் 10

 7. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?

  (a)

  1979

  (b)

  1989

  (c)

  1990

  (d)

  1991

 8. கோமிஸ்டாங்கின் தலைவர்

  (a)

  ஷியாங் கே - ஷேக்

  (b)

  மா - சே - துஸ்

  (c)

  யுவான் - ஷி - கே

  (d)

  நாசர்

 9. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்

  (a)

  M.G. ரானடே

  (b)

  தேவேந்திரநாத் தாகூர்

  (c)

  ஜோதிபா பூலே

  (d)

  அய்யன்காளி

 10. பிரம்மஞானசபை 1886இல் இந்தியாவில் செயல்பட்ட இடம் ________

  (a)

  சாந்தோம்

  (b)

  நுங்கம்பாக்கம்

  (c)

  மயிலாப்பூர்

  (d)

  அடையார்

 11. _________ பிராமண எதிர்ப்பியக்கத்தின் தொடக்ககாலத் தலைவர் என்று அறியப்படுகிறார்

  (a)

  நாராயணகுரு

  (b)

  ஜோதிபா பூலே 

  (c)

  அய்யன்காளி

  (d)

  அன்னிபெசன்ட்

 12. _______ ஒரு தீவிரத் தமிழ் அறிஞரும் சித்த மருத்துவரும் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார்

  (a)

  வைகுண்ட சுவாமிகள்

  (b)

  அயோத்தி தாசர்

  (c)

  இராமலிங்க அடிகள்

  (d)

  ஜான்ரத்தினம்

 13. Section - II

  9 x 2 = 18
 14. ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்றுவடிவங்கள் எவை?

 15. வெர்டன் போர் விளக்கி எழுதவும்

 16. இன ஒதுக்கல் கொள்கை என்றால் என்ன?

 17. வின்ஸ்டன் சர்ச்சிலின் எழுச்சியூட்டும் உரையை பற்றி நீ அறிந்தது என்ன?

 18. மேற்கத்திய நாடுகளின் தேவையின் பொருட்டே இஸ்ரேல்
  உருவாக்கப்பட்டதென்பது சூயஸ் கால்வாய் பிரச்சனையில் உறுதியானது – விளக்குக.

 19. 'டாக்டர் சன்யாட் சென்' பற்றி சிறு குறிப்பு வரைக

 20. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதி பா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.

 21. பார்சி என்பவர்கள் யார்?

 22. அயோத்தி தாசர் - சிறு குறிப்புத் தருக

 23. Section - III

  7 x 5 = 35
 24. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.அதன் தோல்விக்கான காரணங்களையும் குறிப்பிடுக.

 25. அமைதி உடன்படிக்கை பற்றிய விமர்சனம் பற்றி [ஏதேனும் ஐந்து] எழுதவும்

 26. முசோலினியின் கீழ் பாசிஸ்டுகள் என்ற கூற்றினை விளக்கி எழுதவும்

 27. அடால்ப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ஒரு கட்டுரை வரையவும்.

 28. ஐக்கிய நாடுகள் சபை பற்றி விரிவாக எழுதவும்

 29. சீனப்புரட்சி பற்றி விரிவாக எழுது

 30. நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக

 31. Section - IV

  5 x 8 = 40
 32. ஜெர்மன் பேரரசர்
  அ) ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் இயல்பு யாது?
  ஆ) ஜெர்மனின் வன்முறைசார் தேசியம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
  இ) மொராக்கோ விவகாரத்தில் கெய்சர் வில்லியம் தலையிட்டதேன்?
  ஈ) ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகளுக்கு என்ன நேர்ந்தது?

 33. இந்தோ-சீனாவின் காலனிய எதிப்புப் போராட்டம்
  அ) காலனியாதிக்க நீக்கம் எனும் கோட்பாட்டைத் தெளிவுபட விளக்குக.
  ஆ) இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் எவை?
  இ) காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள் வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள் எவ்வாறு உதவின?
  ஈ) இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல் கட்சி எது?

 34. பொதுச்சபையும் பாதுகாப்புக் கவுன்சிலும்
  அ) பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகளை பட்டியலிடுக.
  ஆ) பேரழிவு என்றால் என்ன?
  இ) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் யார்?
  ஈ) மறுப்பாணை அதிகாரம் (தடுப்பாணை) என்றால் என்ன?

 35. பெர்லின் அவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
  அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
  ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றார்?
  இ) 1961 ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
  ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?

 36. அலிகார் இயக்கம்
  அ) இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள் என்ன?
  ஆ) இவ்வியக்கத்தின் ஆன்மா வாகக் கருதப்படுபவர் யார்?
  இ) ஆங்கில நூல்கள் ஏன் உருது மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன?
  ஈ) பல்கலைக்கழகமாக  தரம் உயர்த்தப்பட்ட கல்லூரியின் பெயரைக் குறிப்பிடுக

 37. Section - V

  2 x 10 = 20
 38. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
  1. கிரேட் பிரிட்டன்
  2.ஜெர்மனி 
  3. பிரான்ஸ் 
  4. இத்தாலி 
  5. மொராக்கோ 
  6. துருக்கி 
  7. செர்பியா 
  8. பாஸ்னிய 
  9. கிரீஸ் 
  10. ஆஸ்திரிய-ஹங்கேரி 
  11. பல்கேரியா 
  12. ருமேனியா

 39. உலக வரைபடத்தில் கீழ்கண்டவற்றைக் குறிக்கவும்.
  நேச நாடுகள் 

 40. Section - VI

  1 x 10 = 10
 41. கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
  1914 - முதல் உலகப்போர் தொடக்கம்
  1917 - ரஷ்யப் புரட்சி
  1918 - முதல் உலகப்போர் முடிவு
  1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
  1920 -  பன்னாட்டுச் சங்கம் அமைக்கப்படுதல்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020  ( 10th Standard Social  Science Tamil Medium Important Question All Chapter 2020 )

Write your Comment