மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 41

    பகுதி I

    41 x 1 = 41
  1. மேலாண்மை என்பது ______ ன் செயல் ஆகும். 

    (a)

    மேலாளர் 

    (b)

    கீழ்ப்பணியாளர் 

    (c)

    மேற்பார்வையாளர் 

    (d)

    உயரதிகாரி 

  2. மேலாண்மையின் செயல்பாடுகளில் முதன்மையானது எது? 

    (a)

    புதுமைப்படுத்துதல் 

    (b)

    கட்டுப்படுத்துதல் 

    (c)

    திட்டமிடுதல் 

    (d)

    முடிவெடுத்தல் 

  3.  ________ முறை தனிப்பட்ட வலிமை மற்றும் பொறுப்பிற்கு முழு வடிவம் கொடுக்கிறது. 

    (a)

    குறியிலக்கு மேலாண்மை 

    (b)

    விதிவிலக்கு மேலாண்மை 

    (c)

    முதுகலை வணிக மேலாண்மை 

    (d)

    முதுகலை வணிக நிர்வாகம் 

  4. நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு _____ உதவுகிறது. 

    (a)

    நிதிகளை திரட்டுவதற்கு 

    (b)

    பணியாட்களை தேர்வு செய்வதற்கு 

    (c)

    விற்பனையை அதிகரிப்பதற்கு 

    (d)

    நிதித் தேவையை குறைப்பதற்கு 

  5. மூலதன சந்தை _____ ஐ வழங்குவதில்லை. 

    (a)

    குறுகிய கால நிதி 

    (b)

    கடனுறுதி பத்திரங்கள் 

    (c)

    சமநிலை நிதி 

    (d)

    நீண்ட கால நிதி 

  6. அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ____ உடன் அதிக நீர்மத் தன்மையை வழங்குகிறது. 

    (a)

    வரையறுக்கப்பட்ட இலாபத்தன்மை 

    (b)

    உயர் இலாபத்தன்மை 

    (c)

    குறைந்த இலாபத்தன்மை 

    (d)

    நடுத்தர இலாபத் தன்மை 

  7. வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை _____ என்று அழைக்கலாம். 

    (a)

    வணிகத்தாள் சந்தை 

    (b)

    கருவூல இரசீது சந்தை 

    (c)

    வணிக இரசீது சந்தை 

    (d)

    மூலதனச் சந்தை 

  8. ____ இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும். 

    (a)

    இலண்டன் பங்குச் சந்தை 

    (b)

    பம்பாய் பங்குச் சந்தை 

    (c)

    தேசிய பங்குச் சந்தை 

    (d)

    ஆம்ஸ்டர்டான் பங்கு சந்தை 

  9. நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர் 

    (a)

    காளை 

    (b)

    கரடி 

    (c)

    மான் 

    (d)

    வாத்து 

  10. இந்தியாவில் இந்திய பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியம் (செபி) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _______ 

    (a)

    1988

    (b)

    1992

    (c)

    1995

    (d)

    1998

  11. தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்றமற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு _____ ஆகும். 

    (a)

    ஜனவரி 1996

    (b)

    ஜீன் 1998

    (c)

    டிசம்பர் 1996

    (d)

    டிசம்பர் 1998

  12. மனித வளம் என்பது ஒரு ____________ சொத்து. 

    (a)

    கண்ணுக்கு புலனாகும்

    (b)

    கண்ணுக்கு புலனாக

    (c)

    நி்லையான 

    (d)

    நடப்பு 

  13. ஆட்சேர்ப்பு என்பது _______ அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும். 

    (a)

    சரியான வேலைக்கு சரியான நபர் 

    (b)

    நன்கு செயலாக்குபவர் 

    (c)

    சரியான நபர் 

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை.

  14. ஆட்சேர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல் செயல்முறையின் இலக்கு _____________

    (a)

    சரியான நபர்கள் 

    (b)

    சரியான நேரத்தில் 

    (c)

    சரியான செயல்களை செய்வதற்கு 

    (d)

    மேலே உள்ள அனைத்தும் 

  15. நிரப்பப்படாத விண்ணப்பத்தின் நோக்கம் ____ பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காகும்.

    (a)

    நிறுமம் 

    (b)

    விண்ணப்பதாரர் 

    (c)

    வினாஃநேர்காணல் அட்டவணை 

    (d)

    போட்டியாளர்கள் 

  16. முதலில் வேலை, அடுத்து மனிதர் என்பது ஒரு ____ கோட்பாடு. 

    (a)

    சோதனை 

    (b)

    நேர்காணல் 

    (c)

    பயிற்சி 

    (d)

    பணியமர்த்தல் 

  17. பணிவழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது?

    (a)

    வகுப்பறையில் 

    (b)

    தொழிற்சாலைக்கு வெளியே 

    (c)

    வேலையில்லா நாட்களில் 

    (d)

    விளையாட்டு மைதானத்தில் 

  18. _____ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.

    (a)

    பயிற்சி 

    (b)

    வேலை பகுப்பாய்வு 

    (c)

    தேர்வு 

    (d)

    ஆட்சேர்ப்பு 

  19. பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? 

    (a)

    விற்பனையாளர் 

    (b)

    சந்தையிடுகையாளர் 

    (c)

    வாடிக்கையாளர் 

    (d)

    மேலாளர் 

  20. சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை 

    (a)

    முற்றுரிமை முறை 

    (b)

    பணத்திற்கு மாற்றுதல் 

    (c)

    பண்டமாற்று முறை 

    (d)

    தற்சார்பு உற்பத்தி 

  21. இணையம் மூலம் பொருட்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யும் முறையை ____ என்கிறோம்.

    (a)

    பசுமை சந்தையிடுதல் 

    (b)

    மின் சந்தையிடுதல் 

    (c)

    சமூக சந்தையிடுதல் 

    (d)

    மெட்டா சந்தையிடுதல் 

  22. "நுகர்வோரியல்" எனும் சொல் தோன்றிய ஆண்டு 

    (a)

    1960

    (b)

    1957

    (c)

    1954

    (d)

    1958

  23. நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் _____.

    (a)

    அதிகமான இலாபம் 

    (b)

    குறைவான இலாபம் 

    (c)

    நுகர்வோர் திருப்தி 

    (d)

    சமுதாயத்திற்கு சேவை 

  24. தேசிய நுகர்வோர் மறுவாழ்வுக் குழுவின் தலைவர் யார்? 

    (a)

    இந்திய உச்ச நீதிமன்றத்தின் சேவை அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி 

    (b)

    பிரதம மந்திரி 

    (c)

    இந்தியத் தலைவர் 

    (d)

    மேலே குறிப்பிடப்பட்டவை அல்ல 

  25. நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு (IOCU) முதன்முதலில் நிறுவப்பட்டது.

    (a)

    1960

    (b)

    1965

    (c)

    1967

    (d)

    1987

  26. VUCA ______, _______, ______, ________.

    (a)

    மதிப்பு நிச்சயமின்மை சிக்கலானது தெளிவில்லாதது 

    (b)

    மதிப்பு தவிர்க்க இயலாதது நிறும மற்றும் அதிகாரம் 

    (c)

    மாற்றம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது நிறுமம் ஏலம் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  27. _____ புதிய தொழிற்துறைக் கொள்கையின் விளைவாகும், இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது. 

    (a)

    உலகமயமாக்கல் 

    (b)

    தனியார்மயமாக்கல் 

    (c)

    தாராளமயமாக்கல் 

    (d)

    இவற்றில் எதுவுமே இல்லை 

  28. சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 

    (a)

    1940

    (b)

    1997

    (c)

    1930

    (d)

    1960

  29. குறிப்பிட்ட சரக்கு என்பது விற்பனையின் எந்தக் காலகட்டத்தில் உள்ள சரக்கைக் குறிக்கிறது? 

    (a)

    உடன்பாடுபோகும்போது 

    (b)

    ஒப்பந்தம் 

    (c)

    ஆணையைப் பெறும்போது 

    (d)

    விற்க கடமைப்பட்டபோது 

  30. மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 

    (a)

    1981

    (b)

    1881

    (c)

    1994

    (d)

    1818

  31. எது கொணர்பவர் பத்திரமாக இருக்க முடியாது?

    (a)

    காசோலை 

    (b)

    மேற்கூறிய ஏதும் அல்ல 

    (c)

    கடனுறுதிச் சீட்டு 

    (d)

    மாற்றுச் சீட்டு 

  32. கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது உற்பத்திக் காரணி?

    (a)

    நிலம் 

    (b)

    உழைப்பு 

    (c)

    தொழில்முனை 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  33. கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள தொழில் முனைவோரில் பணிசாரா தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுக்க. 

    (a)

    புதினம் புனையும் தொழில் முனைவோர் 

    (b)

    பாரம்பரிய தொழில் முனைவோர் 

    (c)

    காலங்கடந்தும் பழமைவாத தொழில்முனைவோர் 

    (d)

    ஆண்தேனி தொழில் முனைவோர் 

  34. கோழிப்பண்ணை, மலர்வணிகம், பழஉற்பத்தி போன்ற வகை செயல்கள் கீழ் குறிப்பிடப்பட்ட துறையில் எதனைச் சார்ந்த செயல்.

    (a)

     கூட்டுப்பங்கு நிறுமம் 

    (b)

    சில்லறை வணிகம் 

    (c)

    வணிகம் 

    (d)

    வேளாண்மை இயல் 

  35. அனைத்து இந்திய அரசாங்கங்களும் மின்னணு முறையில் கிடைக்கச் செய்ய, இந்திய பொருளாதாரத்தை நவீனமயமாக்க _______ முன் முயற்சி தொடங்கப்பட்டது. 

    (a)

    ஸ்டாண்ட் அப் இந்தியா   

    (b)

    ஸ்டார்ட்டப் இந்தியா 

    (c)

    டிஜிட்டல் இந்தியா 

    (d)

    இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் 

  36. ஒரு நிறுமம் தனது பதிவு அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றிய அறிக்கையை ______ நாட்களுக்குள் நிறுமப் பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும்.

    (a)

    14 நாட்கள் 

    (b)

    21 நாட்கள் 

    (c)

    30 நாட்கள் 

    (d)

    60 நாட்கள் 

  37. பங்குத் தொகுதியை _______ நிறுமம் வெளியீடும். 

    (a)

    பொது 

    (b)

    தனியார் 

    (c)

    ஒரு நபர் 

    (d)

    சிறு 

  38. நிறுமச் சட்டம் 2013-ன் படி ஒரு நபர் இயக்குநராக ______ நிறுமங்களுக்கு மேல் பதவி வகிக்க கூடாது. 

    (a)

    5 நிறுமம்

    (b)

    10 நிறுமம்

    (c)

    20 நிறுமம்

    (d)

    15 நிறுமம்

  39. எந்த இயக்குநர் தகுதிப்பங்குகளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை?

    (a)

    மத்திய அரசால் நியமிக்கப்படும் இயக்குநர்

    (b)

    நிறுமத்தின் பங்கு தாரர்களால் நியமிக்கப்படும் இயக்குநர்

    (c)

    நிறுமத்தின் மேலாண்மை  இயக்குநர்ளால் நியமிக்கப்படும் இயக்குநர்

    (d)

    நிறுமத்தின் இயக்குநர் குழுவொல் நியமிக்கப்படும் இயக்குநர்

  40. நிறுமத்தின் செயலர் அந்த நிறுவனத்தின் ஓர் ______ ஆவார்.

    (a)

    உறுப்பினர் 

    (b)

    இயக்குனர் 

    (c)

    தன்னிச்சையான ஒப்பந்ததாரர் 

    (d)

    ஊழியர் 

  41. நிறுமம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து _____ மாதத்திற்குள் முதல் ஆண்டு பொதுக்கூட்டத்தை கூட்ட வேண்டும்.

    (a)

    12

    (b)

    15

    (c)

    18

    (d)

    21

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வணிகவியல் மாதிரி 1 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Commerce Important 1 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment