" /> -->

முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 54

  பகுதி I

  27 x 2 = 54
 1. \(\left[ \begin{matrix} cos\theta & -sin\theta \\ sin\theta & cos\theta \end{matrix} \right] \) என்பது செங்குத்து அணி என நிறுவுக.

 2. பின்வரும் சமப்படித்தான நேரியச் சமன்பாட்டுத் தொகுப்பைத் தீர்க்கவும்.
  2x+3y-z=0, x-y-2z=0, 3x+y+3z=0

 3. z1 = 1 - 3i, z2 = -4i, மற்றும் z3 = 5 எனில் கீழ்க்காண்பவைகளை நிறுவுக.
  (z1 + z2) + z3 = z1 + (z2 + z3)

 4. பின்வரும் சமன்பாடுகள் வட்டத்தை குறிக்கிறது என காட்டுக.மேலும் இதன் மையம் மற்றும் ஆரத்தைக் காண்க.
  |z - 2 - i| = 3

 5. z = x + yi எனில், கீழ்காண்பவைகளின் செவ்வக வடிவினைக் காண்க.
  Re\(\left( \bar { iz } \right) \)

 6. கீழ்காணும் கலப்பெண்களின் துருவ வடிவினைக் காண்க.
  -2 - i2

 7. 2i+3-ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் விகிதமுறு கெழுக்களுடைய ஓர் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டைக் காண்க.

 8. முதன்மை மதிப்பைக்காண்க.
  \({ Sin }^{ -1 }\left( \frac { 1 }{ \sqrt { 2 } } \right) \)

 9. மதிப்பு காண்க.
   \(sin\left[ \frac { \pi }{ 3 } -{ sin }^{ 2 }\left( -\frac { 1 }{ 2 } \right) \right] \)

 10. முதன்மை மதிப்பைக்காண்க.
  \({ Sin }^{ -1 }\left( sin\left( \frac { 5\pi }{ 6 } \right) \right) \)

 11. (3,4) மற்றும் (2,-7) என்ற புள்ளிகள் வழிச்செல்லும் வட்டத்தின் சமன்பாடு காண்க.

 12. பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
  x2+y2-x+2y-3=0

 13. பின்வரும் கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் காண்க.
   \(\vec { r } =(4\hat { i } -{ j } )+t(\hat { i } +2\hat { j } -2\hat { k } ), \vec { r } =(\hat { i } -2\hat { j } +4\hat { k } )+s(-\hat { i } -2\hat { j } +2\hat { k } )\).

 14. ஒரு நகரும் தளம் ஆய அச்சுக்களில் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகளின் தலைகீழிகளின் கூடுதல் ஒரு மாறிலியாக இருக்குமாறு நகர்கிறது எனில், அத்தளமானது ஒரு நிலைத்த புள்ளி வழியாகச் செல்கிறது எனக்காட்டுக.

 15. \(s(t)=\frac{t^{3}}{3}-t^{2}+3\) எனும் விதிப்படி ஒரு துகள் நகரும் தூரம் அமைகின்றது. எந்தெந்த நேரங்களில் அதன் திசைவேகமும் முடுக்கமும் பூச்சிய மதிப்பை அடையும்?

 16. கொடுக்கப்பட்ட சார்புகளுக்கு  கொடுக்கப்பட்ட இடைவெளியில் ரோலின் தேற்றம் ஏன் பயன்படுத்த முடியாது என்பதை விளக்குக.
  (ii) \(f(x)=tan x,x \in [0, \pi]\)

 17. f(x)=x4+32x என்ற சார்பின் இடஞ்சார்ந்த அறுதி மதிப்புகளைக் காண்க.

 18. பின்வரும் சார்புகளுக்கு வகையீடு dy காண்க
  y = ( 3 + sin(2 x))2/3

 19. f (x) = f (a + x)  எனில் \(\int ^{2a}_{0}\) f(x) dx = 2  \(\int ^{a}_{0}\) f(x) dx

 20. பரவளையம்  y = x,  x-அச்சு, கோடுகள்  x = 0 மற்றும் x = 1 ஆகியவற்றால்
  அடைப்பட்டுள்ள அரங்கத்தின் பரப்பை x-அச்சைப் பொருத்துச் சுழற்றினால் உருவாகும் திடப்  பொருளின் கன அளவைக்  காண்க.

 21. பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
  \(\sqrt { \frac { { d }y }{ { d }x } } -4\frac { { d }y }{ { d }x } -7x=0\)

 22. y = emx எனும் சார்பு கொடுக்கப்பட்ட வகைக்கெழுச் சமன்பாட்டிற்கு தீர்வாக அமையுமாறு m -ன் மதிப்புகளைக் காண்க.
  y '' - 5y' + 6y = 0

 23. கீழ்க்காணும் ஒரு சமவாய்ப்பு மாறி X -ன் நிகழ்தகவு நிறை சார்புகளுக்கு சராசரி மற்றும் பரவற்படி காண்க:

 24. கீழ்க்காணும் ஈருறுப்புச் செயலிகள், அதற்குரிய கணங்களில் அடைவுப் பண்பைப் பெற்றுள்ளதா என்பதைச் சோதிக்க . அவ்வாறில்லாதவற்றிற்கு ஈருப்புச் செயலியின் நிபந்தனையை நிறைவேற்றும் முறையைக் காண்க.
  (i) a*b = a + 3ab − 5b2; ∀ a, b ∈ ℤ
  (ii) a*b = \((\frac {a-1}{b-1}), \forall a,b \in \) ℚ

 25. \(Let\quad A=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix} \right) ,\quad B=\left( \begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) ,\quad C=\left( \begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 1 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 0 \\ 1 \end{matrix} \right) \) என்பவைகள் ஒரே மாதிரியான வகையினை உடைய ஏதேனும் மூன்று பூலியன் அணிகள் எனில் (A ∧ B) ∨ C ஆகியவைகளைக் காண்க.

 26. p மற்றும் q என்ற கூற்று மாறிகளைக் கொண்டு பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்தையும் குறியீட்டு அமைப்பில் எழுதுக.
  19 ஒரு பகா எண் அல்ல மற்றும் ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்கள் சமம்.

 27. பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மை அட்டவணைகளை அமைக்க.
  ​​​​​​¬(p ∧ ¬q)

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய 2 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Maths Important 2 Mark Book Back Questions (New Syllabus) 2020

Write your Comment