வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ஒரு பலூனானது செங்குத்தாக மேல்நோக்கி 10 மீ/வி வீதத்தில் செல்கிறது. பலூன் செலுத்தப்பட்ட இடத்திலிருந்து 40 மீ தொலைவில் இடருந்து ஒருவர் இதனைப் பார்க்கிறார். பலூனின் ஏற்றக் கோணத்தில் ஏற்படும் மாறுபாட்டு வீதத்தை பலூன் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது காண்க.

    (a)

    \(\frac { 3 }{ 25 } \)ரேடியன்கள்/வினாடி

    (b)

    \(\frac { 4 }{ 25 } \)ரேடியன்கள்/வினாடி

    (c)

    \(\frac { 1 }{ 5 } \)ரேடியன்கள்/வினாடி

    (d)

    \(\frac { 1 }{ 3 } \)ரேடியன்கள்/வினாடி

  2. f(x) = 2cos 4x என்ற வளைவரைக்கு x =\(\frac { \pi }{ 12 } \)-ல் செங்கோட்டின் சாய்வு _______.

    (a)

    -4\(\sqrt { 3 } \)

    (b)

    −4

    (c)

    \(\frac { \sqrt { 3 } }{ 12 } \)

    (d)

    4\(\sqrt { 3 } \)

  3. y2 -xy + 9 = 0 என்ற வளைவரையின் தொடுகோடு எப்போது நிலைகுத்தாக இருக்கும்?

    (a)

    y = 0

    (b)

    y =\(\pm \sqrt { 3 } \)

    (c)

    y = \(\frac { 1 }{ 2 } \)

    (d)

    y =士3

  4. sin4 x + cos4 x என்ற சார்பு இறங்கும் இடைவெளி _______.

    (a)

    \(\left[ \frac { 5\pi }{ 8 } ,\frac { 3\pi }{ 4 } \right] \)

    (b)

    \(\left[ \frac { \pi }{ 2 } ,\frac { 5\pi }{ 8 } \right] \)

    (c)

    \(\left[ \frac { \pi }{ 4 } ,\frac { \pi }{ 2 } \right] \)

    (d)

    \(\left[ 0,\frac { \pi }{ 4 } \right] \)

  5. y = ex sin x, x∊ [0,2\(\pi \) ] என்ற வளைவரையின் மீப்பெரு சாய்வு எங்கு அமையும்?

    (a)

    x=\(\frac { \pi }{ 4 } \)

    (b)

    x=\(\frac { \pi }{ 2 } \)

    (c)

    x =\(\pi \)

    (d)

    x=\(\frac { 3\pi }{ 2 } \)

  6. 3 x 2 = 6
  7. 400 அடி உயர மலை உச்சி முகட்டிலிருந்து தவறுதலாக ஒரு புகைப்படக் கருவி விழுகிறது. t வினாடிகளில் புகைப்படக் கருவி விழும் தூரம் s =16t2 ஆகும்.
    (i) தரையைத் தொடும் முன்னர் புகைப்படக் கருவி விழ எடுத்துக்கொண்ட நேரம் என்ன?
    (ii) கீழே விழுந்த இறுதி 2 வினாடிகளில் புகைப்படக் கருவியின் சராசரி திசைவேகம் என்ன?
    (iii) தரையைத் தொடும்போது புகைப்படக் கருவியின் கணப்பொழுது திசைவேகம் என்ன?

  8. 400 அடி உயர மலை உச்சி முகட்டிலிருந்து தவறுதலாக ஒரு புகைப்படக் கருவி விழுகிறது. t வினாடிகளில் புகைப்படக் கருவி விழும் தூரம் s =16t2 ஆகும்.
     கீழே விழுந்த இறுதி 2 வினாடிகளில் புகைப்படக் கருவியின் சராச ரி திசைவேகம் என்ன ?

  9. 400 அடி உயர மலை உச்சி முகட்டிலிருந்து தவறுதலாக ஒரு புகைப்படக் கருவி விழுகிறது. t வினாடிகளில் புகைப்படக் கருவி விழும் தூரம் s =16t2 ஆகும்.
    தரையைத் தொடும் போது புகைப்படக் கருவியின் கணப்பொழுது திசைவேகம் என்ன?

  10. 3 x 3 = 9
  11. \(s(t)=\frac{t^{3}}{3}-t^{2}+3\) எனும் விதிப்படி ஒரு துகள் நகரும் தூரம் அமைகின்றது. எந்தெந்த நேரங்களில் அதன் திசைவேகமும் முடுக்கமும் பூச்சிய மதிப்பை அடையும்?

  12. தரையிலிருந்து மேல்நோக்கி சுடப்படும் ஒரு துகள் s அடி உயரத்தை t வினாடிகளில் சென்று அடைகிறது. இங்கு s(t)=128t - 16t2
    (i) துகள் அடையும் அதிகபட்ச உயரத்தைக் கணக்கிடுக?
    (ii) தரையைத் தொடும் போது அதன் திசைவேகம் என்ன ?  

  13. \(f(x)=log(\frac{x^{2}+6}{5x})\) என்ற சார்பிற்கு [2,3] என்ற இடைவெளியில் ரோலின் தேற்றத்தை நிறைவு செய்யும் 'c ' -ன் மதிப்பைக் கணக்கிடுக.

  14. 2 x 5 = 10
  15. log(1+ x) -ன் மெக்லாரனின் விரிவை  -1 <  x ≤ 1 -ல் நான்கு பூச்சியமற்ற உறுப்புகள் வரை காண்க.

  16. tan x -ன் விரிவை \(-\frac{\pi}{2}< x< \frac{\pi}{2}\) -ல்  x -ன் அடுக்குகளாக  5ஆவது அடுக்குவரை காண்க.

*****************************************

Reviews & Comments about 12th கணிதம்  - வகை நுண்கணிதத்தின் பயன்பாடுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Maths - Application of Differential Calculus Model Question Paper )

Write your Comment