" /> -->

தனிநிலைக் கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. ℤ என்ற கணத்தில் '+' என்ற ஈருறுப்புச் செயலி கொண்டு (i) அடைவுப் பண் பு (ii) பரிமா ற்றுப் பண்பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவைகளைப் பெற்றுள்ளதா எனச் சரிபார்க்க .

 2. \(A =\left[ \begin{matrix} \begin{matrix} 0 & 1 \end{matrix} \\ \begin{matrix} 1 & 1 \end{matrix} \end{matrix} \right] , B =\left[ \begin{matrix} \begin{matrix} 1 & 1 \end{matrix} \\ \begin{matrix} 0 & 1 \end{matrix} \end{matrix} \right] \) ஆகிய இரண்டும் ஒரே வகையான பூலியன் அணிகள் எனில், A∨B மற்றும் A∧B ஆகியவற்றைக் காண்க.

 3. p மற்றும் q என்ற கூற்று மாறிகளைக் கொண்டு பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்தையும் குறியீட்டு அமைப்பில் எழுதுக.
  19 ஒரு பகா எண் அல்லது ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமமல்ல.

 4. p மற்றும் q என்ற கூற்று மாறிகளைக் கொண்டு பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்தையும் குறியீட்டு அமைப்பில் எழுதுக.
  19 ஒரு பகா எண் மற்றும் ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமம்.

 5. பின்வரும் கூற்றுகளுக்கு மெய்மை அட்டவணைகளை அமைக்க.
  ​​​​​​¬(p ∧ ¬q)

 6. பின்வரும் கூட்டு கூற்றுகளில் எவைகள் மெய்மம் அல்லது முரண்பாடுகள் அல்லது நிச்சயமின்மை என்று காண்க.
  ( p Λ q) ∧¬( p v q)

 7. \(\neg (p\wedge q)\equiv \neg p\vee \neg q\) எனக் காட்டுக.

 8. q ⟶ p ≡ ¬p ⟶ ¬q என நிறுவுக.

 9. p → q மற்றும் q → p ஆகியவைகள் சமானமற்றவை எனக் காட்டுக.

 10. மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தாமல் p → (q → r) ≡ ( p Λ q) → r என நிரூபிக்க.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணிதம் - தனிநிலைக் கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th Maths Discrete Mathematics Two Marks Question Paper )

Write your Comment