சமன்பாட்டியல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    4 x 1 = 4
  1. x3+64 -ன் ஒரு பூச்சியமாக்கி _______.

    (a)

    0

    (b)

    4

    (c)

    4i

    (d)

    -4

  2. x-ல் n படியுள்ள ஒரு பல்லுறுப்புக்கோவைச் சமன்பாடு பெற்றுள்ள மூலங்கள் _______.

    (a)

    n வெவ்வேறு மூலங்கள்

    (b)

    n மெய்யெண் மூலங்கள்

    (c)

    n கலப்பெண் மூலங்கள்

    (d)

    அதிகபட்சம் ஒரு மூலம்

  3. x3+2x+3 எனும் பல்லுறுப்புக்கோவைக்கு _______.

    (a)

    ஒரு குறை மற்றும் இரு மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்

    (b)

    ஒரு மிகை மற்றும் இரு மெய்யற்ற கலப்பெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்

    (c)

    மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருக்கும்

    (d)

    பூச்சியமாக்கிகள் இல்லை

  4. \(\overset { n }{ \underset { r=0 }{ \Sigma } } \)nCr(-1)rxr எனும் பல்லுறுப்புக்கோவையின் மிகையெண் பூச்சியமாக்கிகளின் எண்ணிக்கை _______.

    (a)

    0

    (b)

    n

    (c)

    < n

    (d)

    r

  5. 3 x 2 = 6
  6. 2-\(\sqrt { 3 } \)i--ஐ மூலமாகக் கொண்ட குறைந்தபட்ச படியுடன் மெய்யெண் கெழுக்களுடைய தலைஒற்றைப் பல்லுறுப்புக்கோவைச் சமன்பாட்டை காண்க.

  7. தீர்க்க: \(2\sqrt { \frac { x }{ a } } +3\sqrt { \frac { a }{ x } } =\frac { b }{ a } +\frac { 6a }{ b } \).

  8. விகிதமுறு மூலங்கள் உள்ளதா என ஆராய்க.
    x8 − 3x +1 = 0 .

  9. 5 x 3 = 15
  10. 17x+ 43x - 73 = 0 எனும் இருபடிச் சமன்பாட்டின் மூலங்கள், α மற்றும் β எனில் α+2 மற்றும் β+2 என்பவற்றை மூலங்களாகக் கொண்ட ஒரு இருபடிச்சமன்பாட்டை உருவாக்கவும்.

  11. ஒரு கனச் சதுரப் பெட்டியின் பக்கங்களை 1, 2, 3 அலகுகள் அதிகரிப்பதால் கனச்சதுரப் பெட்டியின் கொள்ளளவைவிட 52 கன அலகுகள் அதிகமுள்ள கனச் செவ்வகம் கிடைக்கிறது எனில், கன செவ்கத்தின் கொள்ளளவைக் காண்க.

  12. x4-9x2+20=0 எனும் சமன்பாட்டைத் தீர்க்க.

  13. x3 − 6x2 − 4x + 24 = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் கூட்டுத் தொடர் முறையாக உள்ளது என அறியப்படுகிறது. சமன்பாட்டின் மூலங்களைக் காண்க.

  14. 2cos2 x − 9cos x + 4 = 0 . எனும் சமன்பாட்டிற்குத் தீர்வு இருப்பின் காண்க.

  15. 2 x 5 = 10
  16. x3-9x2+14x+24=0 எனும் சமன்பாட்டின் இரு மூலங்கள் 3:2 என்ற விகிதத்தில் அமைந்தால், சமன்பாட்டை தீர்க்க.

  17. 6x4 − 5x3 − 38x2 − 5x + 6 = 0எனும் சமன்பாட்டின் ஒரு தீர்வு \(\frac{1}{3}\) எனில், சமன்பாட்டின் தீர்வு காண்க.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணிதம் - சமன்பாட்டியல் Book Back Questions ( 12th Standard Maths - Theory of Equations Book Back Questions )

Write your Comment