இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம் 

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. (1, 5) மற்றும் (4, 1) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் y-அச்சைத் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு x+ y− 5x − 6y + 9 + λ(4x + 3y − 19) = 0 எனில் λ-ன் மதிப்பு _______.

    (a)

    \(0,-\frac { 40 }{ 9 } \)

    (b)

    0

    (c)

    \(\frac { 40 }{ 9 } \)

    (d)

    \(\frac { -40 }{ 9 } \)

  2. செவ்வகல நீளம் 8 அலகுகள் மற்றும் துணையச்சின் நீளம் குவியங்களுக்கிடையே உள்ள தூரத்தில் பாதி உள்ள அதிபரவளையத்தின் மையத்தொலைத் தகவு _______.

    (a)

    \(\frac { 4 }{ 3 } \)

    (b)

    \(\frac { 4 }{ \sqrt { 3 } } \)

    (c)

    \(\frac { 2 }{ \sqrt { 3 } } \)

    (d)

    \(\frac { 3 }{ 2 } \)

  3. நேர்க்கோடு 2x + 4y = 3-க்கு இணையாக x+ y− 2x − 2y + 1 = 0 என்ற வட்டத்தின் செங்கோட்டுச் சமன்பாடு _______.

    (a)

    x + 2y = 3

    (b)

    x + 2y + 3 = 0

    (c)

    2x + 4y + 3 = 0

    (d)

    x − 2y + 3 = 0

  4. x + y = k என்ற நேர்க்கோடு பரவளையம் y2 = 12x -இன் செங்கோட்டுச் சமன்பாடாக உள்ளது எனில் k-ன் மதிப்பு _______.

    (a)

    3

    (b)

    -1

    (c)

    1

    (d)

    9

  5. (x−3)2 + (y−4)2 = \(\frac { { y }^{ 2 } }{ 9 } \) என்ற நீள்வட்டத்தின் மையத்தொலைத் தகவு _______.

    (a)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (b)

    \(\frac { 1 }{ 3 } \)

    (c)

    \(\frac { 1 }{ 3\sqrt { 2 } } \)

    (d)

    \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)

  6. (-4, 4) ல் x= -4yன் தொடுகோட்டு சமன்பாடு 

    (a)

    2x - 4y + 4 = 0

    (b)

    2x + y - 4 = 0

    (c)

    2x - y - 12 = 0

    (d)

    2x + y + 4 = 0

  7. ஒரு நீள்வட்டத்தில் குவியங்களுக்கு இடைப்பட்ட தூரம் 6 மற்றும் அதனுடைய குற்றச்சு 8 எனில், e என்பது 

    (a)

    \(\cfrac { 4 }{ 5 } \)

    (b)

    \(\cfrac { 1 }{ \sqrt { 52 } } \)

    (c)

    \(\cfrac { 3 }{ 5 } \)

    (d)

    \(\cfrac { 1 }{ 2 } \)

  8. \(\cfrac { { x }^{ 2 } }{ 9 } +\cfrac { { y }^{ 2 } }{ 5 } =1\) என்ற நீள்வட்டத்தின் இயக்கு விட்டம் என்பது 

    (a)

    x+ y= 4

    (b)

    x+ y= 9

    (c)

    x+ y2 = 45

    (d)

    x+ y= 14

  9. \(\cfrac { { x }^{ 2 } }{ a^{ 2 } } -\cfrac { { y }^{ 2 } }{ { b }^{ 2 } } =1\)  என்ற அதிபரவளையத்தின் இயக்கு வட்டத்தின் சமன்பாடு _______

    (a)

    x2+y2=a2+b2

    (b)

    x2+y2=a2

    (c)

    x2+y2=b2

    (d)

    x2+y2=a2-b2

  10. அதிபரவளையம் \(\cfrac { { x }^{ 2 } }{ 16 } -\cfrac { { y }^{ 2 } }{ 9 } =1\) க்கான செங்குத்து தொடுகோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளிகளின் நியமப்பாதை _______

    (a)

    x+ y= 25

    (b)

    x+ y= 4

    (c)

    x+ y= 3

    (d)

    x+ y= 7

  11. 5 x 2 = 10
  12. y = 4x + c என்ற நேர்க்கோடு x+ y= 9 என்ற வட்டத்தின் தொடுகோடு எனில் c-ன் மதிப்புக் காண்க.

  13. ஆரம் 5 செ.மீ. அலகுகள் உடையதும், x-அச்சை ஆதிப்புள்ளியில் தொட்டுச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாட்டைத் தருவிக்க.

  14. பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
    y+ 4x + 3y + 4 = 0

  15. பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
     x2+ y2+ 6x - 4y + 4 = 0

  16. பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
    x2+y2-x+2y-3 = 0

  17. 5 x 3 = 15
  18. ஒரு வட்டத்தின் சமன்பாடு 3x2 + (a +1) y2 + 6x − 9y + a + 4 = 0 எனில் அதன் மையம், ஆரம் காண்க.

  19. x+ y= 25 என்ற வட்டத்திற்கு P(-3, 4) -இல் தொடுகோடு மற்றும் செங்கோட்டுச் சமன்பாடுகளைக் காண்க.

  20. இரு அச்சுக்களையும் தொட்டுச் செல்வதும், (-4, -2) என்ற புள்ளி வழிச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு காண்க.

  21. முனைகள் (0, ±4) மற்றும் குவியங்கள் (0, ±6) உள்ள அதிபரவளையத்தின் சமன்பாடு காண்க

  22. x2 + 6x + 4y + 5 = 0 என்ற பரவளையத்திற்கு (1, -3) என்ற புள்ளியில் தொடுகோடு மற்றும் செங்கோட்டுச் சமன்பாடுகளைக் காண்க.

  23. 3 x 5 = 15
  24. 11x2 − 25y2 − 44x + 50y − 256 = 0 என்ற அதிபரவளையத்தின் மையம், குவியங்கள் மற்றும் மையத் தொலைத்தகவு காண்க.

  25. \(\frac { { x }^{ 2 } }{ 16 } -\frac { { y }^{ 2 } }{ 64 } \) = 1 என்ற அதிபரவளையத்திற்கு, 10x−3y+9 = 0 என்ற நேர்க்கோட்டிற்கு இணையான தொடுகோட்டுச் சமன்பாடுகளைக் காண்க.

  26. ஒரு அணு உலை குளிரூட்டும் தூணின் குறுக்கு வெட்டு அதிபரவளைய வடிவில் உள்ளது. மேலும் அதன் சமன்பாடு \(\frac { { x }^{ 2 } }{ { 30 }^{ 2 } } -\frac { { y }^{ 2 } }{ { 44 }^{ 2 } } =\)1. தூண் 150மீ உயரமுடையது. மேலும் அதிபரவளையத்தின் மையத்திலிருந்து தூணின் மேல்பகுதிக்கான தூரம் மையத்திலிருந்து அடிப்பகுதிக்கு உள்ள தூரத்தில் பாதியாக உள்ளது. தூணின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியின் விட்டங்களைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணிதம்  இரு பரிமாண பகுமுறை வடிவியல் - II மாதிரி வினாத்தாள் ( 12th Standard Maths Two Dimensional Analytical Geometry - II Model Question Paper )

Write your Comment