" /> -->

ஆயத்தொலைவு வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  10 x 1 = 10
 1. (−5,0) , (0,−5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு

  (a)

  0 ச. அலகுகள்

  (b)

  25 ச. அலகுகள்

  (c)

  5 ச. அலகுகள்

  (d)

  எதுவுமில்லை

 2. x =11 எனக் கொடுகப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடானது

  (a)

  X -அச்சுக்கு இணை

  (b)

  Y -அச்சுக்கு இணை

  (c)

  ஆதிப் புள்ளி வழிச் செல்லும்

  (d)

  (0,11) என்ற புள்ளி வழிச் செல்லும்

 3. (5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோட்டமைந்தவை எனில், p–யின் மதிப்பு

  (a)

  3

  (b)

  6

  (c)

  9

  (d)

  12

 4. 3x - y = 4 மற்றும் x + y = 8 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி

  (a)

  (5, 3)

  (b)

  (2, 4)

  (c)

  (3,5)

  (d)

  (4, 4)

 5. (12, 3), (4, a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு \(\frac 18\) எனில், ‘a’ –யின் மதிப்பு

  (a)

  1

  (b)

  4

  (c)

  -5

  (d)

  2

 6. Y அச்சில் அமையும் புள்ளி A -யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B–யின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு

  (a)

  8x + 5y = 40

  (b)

  8x - 5y = 40

  (c)

  x = 5

  (d)

  y = 5

 7. 7x - 3y + 4 = 0என்ற நேர்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு

  (a)

  7x - 3y + 4 = 0

  (b)

  3x - 5y + 4 = 0

  (c)

  3x + 7y = 0

  (d)

  7x - 3y = 0

 8. 8y = 4x + 21 என்ற நேர்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை

  (a)

  சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6

  (b)

  சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6

  (c)

  சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத்துண்டு 1.6

  (d)

  சாய்வு 5 மற்றும் y வெட்டுத்துண்டு 2.6

 9. ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை

  (a)

  இரு பக்கங்கள் இணை

  (b)

  இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை

  (c)

  எதிரெதிர் பக்கங்கள் இணை

  (d)

  அனைத்துப் பக்கங்களும் சமம்.

 10. சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை

  (a)

  இரு பக்கங்களின் சாய்வுகள்

  (b)

  இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

  (c)

  அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்

  (d)

  இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்

 11. 11 x 2 = 22
 12. (-3,5) , (5,6) மற்றும் (5,-2) ஆகியவற்றை முனைகளாகக் கொண்ட கோணத்தின் பரப்பைக் காண்க.

 13. P(-1.5,3), Q(6,-2)மற்றும் R(-3,4) ஆகிய புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமையும் எனக் காட்டுக.

 14. ஓர் அறையின் தளமானது ஒரே மாதிரியான முக்கோண வடிவத் தரை ஓடுகளைக் கொண்டு (tiles) அமைக்கப்படுகிறது. அதில் ஓர் ஓட்டின் முனைகள் (-3,2),(-1,-1) மற்றும் (1,2) ஆகும். தரைத்தளத்தை முழுமையாக அமைக்க 110 ஓடுகள் தேவைப்படுகின்றது எனில், அதன் பரப்பைக் காண்க.

 15. (8,6) , (5,11), (-5,12) மற்றும் (-4,3) ஆகிய புள்ளிகளை முனைகளாகக் கொண்ட நாற்கரத்தின் பரப்பைக் காண்க.

 16. (5,7) என்ற புள்ளி வலி செல்லும்
  X அச்சுக்கு இணையாகவும்

 17. 8x − 7y + 6 = 0 என்ற கோட்டின் சாய்வு மற்றும் y வெட்டுத்துண்டு ஆகியவற்றைக் கணக்கிடுக.

 18. (2,5) மற்றும் (4,7) என்ற புள்ளிகளைச் சேர்க்கும் நேர்கோட்டிற்குச் செங்குத்தாகவும், A(1,4) என்ற புள்ளி வழி செல்லுவதுமான நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

 19. ஆய அச்சுகளுடன் சமமாகவும், எதிர் குறியும் உடைய வெட்டுத்துண்டுகளை ஏற்படுத்தி, (5,7) என்ற புள்ளி வழி செல்லும் நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

 20. ஓர் அலைபேசி மின்கலத்தின் சக்தி 100% இருக்கும்போது (battery power) அலைபேசியைப் பயன்படுத்த தொடங்குகிறோம். x மணி நேரம் பயன்படுத்திய பிறகு மீதி இருக்கும் மின்கலத்தின் சக்தி y சதவீதம் (தசமத்தில்) ஆனது y=− 0.25 x + 1 ஆகும்

  இந்த சமன்பாட்டிற்க்கான வரைபடம் வரைக.

 21. வரைபடமானது y அச்சில் பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலையையும் x அச்சில் செல்சியஸ் டிகிரி வெப்பநிலையையும்  குறிக்கிறது எனில்,
  கோட்டின் சமன்பாட்டை எழுதுக.

 22. A (-5, 7), B (-4, -5), C (-1, -6) மற்றும் D(4, 5) உச்சிகளைக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு காண்க.

 23. 4 x 5 = 20
 24. ஒரு கோட்டின் சாய்வுக் கோணம் 30°எனில், அக்கோட்டின் சாய்வைக் காண்க.

 25. (–2, 2), (5, 8) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்கோடு r மற்றும் (–8, 7), (–2, 0) ஆகிய புள்ளிகள் வழிச் செல்லும் நேர்கோடு s ஆகும் எனில், நேர்கோடு r - ஆனது நேர்கோடு s - க்கு செங்குத்தாக அமையுமா?

 26. 2x + 3y - 8 = 0, 4x + 6y + 18 = 0 ஆகிய நேர்கோடுகள் இணை எனக் காட்டுக.

 27. A(1,-2) , B(6,-2), C(5,1) மற்றும் D(2,1) என்பன நான்கு புள்ளிகள் எனில், 
  விடைகளிலிருந்து நீங்கள் அறிவது என்ன?

 28. 1 x 8 = 8
 29. ஒரு பூனை xy-தளத்தில் (-6, -4) என்ற புள்ளியில் உள்ளது. (5, 11) என்ற புள்ளியில் ஒரு பால் புட்டி வைக்கப்பட்டுள்ளது. பூனை மிகக் குறுகிய தூரம் பயணித்துப் பால் அருந்த விரும்புகிறது எனில், பாலைப் பருகுவதற்குத் தேவையான பாதையின் சமன்பாட்டைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - ஆயத்தொலைவு வடிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Maths - Coordinate Geometry Model Question Paper )

Write your Comment