" /> -->

அளவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. கித்தானைக் கொண்டு 7மீ ஆரமும் 24மீ உயரமும் உடைய ஒரு கூம்பு வடிவக் கூடாரம் உருவாக்கப்படுகிறது. செவ்வக வடிவக் கித்தானின் அகலம் 4மீ எனில், அதன் நீளம் காண்க.

 2. 704 ச.செ.மீ மொத்தப் புறப்பரப்பு கொண்ட ஒரு கூம்பின் ஆரம் 7செ.மீ எனில், அதன் சாயுயரம் காண்க.

 3. 2.4 செ.மீ உயரமுள்ள ஒரு திண்ம உருளையின் விட்டம் 1.4செ.மீ ஆகும். உருளையினுள் அதே ஆரமுள்ள கூம்பு வடிவக் குழிவு (படம் 7.13) உருளையின் உயரத்திற்கு ஏற்படுத்தப்படுகிறது எனில், மீதமுள்ள திண்மத்தின் மொத்தப் புறப்பரப்பு காண்க.

 4. ஒரு திண்மம் அரைக்கோளத்தின் அடிப்பரப்பு 1386 ச.மீ எனில், அதன் மொத்தப் புறப்பரப்பைக் காண்க.

 5. ஒரு கோளம், உருளை மற்றும் கூம்பு ஆகியவற்றின் ஆரங்கள் சமம். படம் 7.20-ல் உள்ளபடி கூம்பு மற்றும் உருளையின் உயரங்கள் ஆரத்திற்குச் சமம் எனில், அவற்றின் வளைபரப்புகளின் விகிதம் காண்க.

 6. ஒரு கூம்பின் இடைக்கண்டச் சாயுயரம் 5செ.மீ ஆகும். அதன் இரு ஆரங்கள் 4செ.மீ மற்றும் 1 செ.மீ எனில், இடைகண்டத்தின் வளைபரப்பைக் காண்க.

 7. அருள் தனது குடும்ப விழாவிற்கு 150 நபர்கள் தங்குவதற்கு கூடாரம் அமைக்கிறார். கூடாரத்தின் அடிப்பகுதி உருளை வடிவிலும் மேற்பகுதி கூம்பு வடிவிலும் உள்ளது. ஒருவர் தங்குவதற்கு 4ச.மீ அடிப்பகுதி பரப்பும் 40க.மீ காற்றும் தேவைப்படுகிறது. கூடாரத்தில் உருளையின் உயரம் 8மீ எனில், கூம்பின் உயரம் காண்க.

 8. ஓர் உருளையின் மீது ஓர் இடைக்கண்டம் இணைந்தவாறு அமைந்த ஒரு புனலின் (funnel) மொத்த உயரம் 20 செ.மீ. உருளையின் உயரம் 12செ.மீ எனில், புனலின் வெளிப்புறப் பரப்பைக் கணக்கிடுக.

 9. ஒரு இடைக்கண்ட வடிவிலான வாளியின் மேற்புறம் மற்றும் அடிப்புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7செ.மீ. அதன் உயரம் 45செ.மீ எனில், அதன் கொள்ளளவைக் காண். (\(\pi =\frac { 22 }{ 7 } \) பயன்படுத்தி)

 10. செவ்வக வடிவ தொட்டியின் கொள்ளவு 28மீx16மீ x 11மீ ஆரமும் கொண்ட உருளையின் உயரம் என்ன?

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - அளவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 10th Maths - Mensuration Two Marks Questions Paper )

Write your Comment