உறவுகளும் சார்புகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    6 x 1 = 6
  1. n(A x B) = 6 மற்றும் A = {1,3} எனில், n(B) ஆனது _____.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    6

  2. A = {1, 2, 3, 4, 5} -லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B -ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை _____.

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    8

  3. A = {a,b,p}, B = {2,3}, C = {p,q,r,s} எனில், n[(A U C) x B] ஆனது

    (a)

    8

    (b)

    20

    (c)

    12

    (d)

    16

  4. (a + 2, 4) மற்றும் (5, 2a + b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில் (a, b) என்பது _____.

    (a)

    (2,-2)

    (b)

    (5,1)

    (c)

    (2,3)

    (d)

    (3,-2)

  5. f(x) = 2x2 மற்றும் g(x) = \(\frac { 1 }{ 3x } \) எனில்  f o g ஆனது _____.

    (a)

    \(\frac { 3 }{ 2x^{ 2 } } \)

    (b)

    \(\frac { 2 }{ 3x^{ 2 } } \)

    (c)

    \(\frac { 2 }{ 9x^{ 2 } } \)

    (d)

    \(\frac { 1 }{ 6x^{ 2 } } \)

  6. f(x) = (x + 1)3 - (x - 1)3 குறிப்பிடும் சார்பானது_____.

    (a)

    நேரிய சார்பு

    (b)

    ஒரு கனச் சார்பு

    (c)

    தலைகீழ்ச் சார்பு

    (d)

    இருபடிச் சார்பு

  7. 7 x 2 = 14
  8. A = {1,3,5}, B = {2,3} எனில்
    (i) A x B மற்றும் B x A-ஐ காண்க.
    (ii) A x B = B x A ஆகுமா? இல்லையெனில் ஏன்?
    (iii) n(A x B) = n(B x A) = n(A) x n(B) எனக் காட்டுக.

  9. If A x B = {(3,2), (3,4), (5,2), (5,4)} எனில் A மற்றும் B -ஐ காண்க.

  10. f : X →Y என்ற உறவானது f(x) = x2 - 2 என வரையறுக்கப்படுகிறது. இங்கு, X = {-2,-1,0,3} மற்றும் Y = R எனக் கொண்டால் (i) f-யின் உறுப்புகளைப் பட்டியலிடுக. (ii) f -ஒரு சார்பாகுமா?

  11. f(x) = 2x - x2 எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில்,
    (i) f (1)
    (ii) f (x + 1)
    (iii) f (x) + f (1) ஆகியவற்றைக் காண்க.

  12. f(x) = \(\sqrt { 2x^{ 2 }-5x+3 } \) -ஐ இரு சார்புகளின் சேர்ப்பாகக் குறிக்க.

  13. f(x) = 2x + 3, g(x) = 1 - 2x மற்றும் h(x) = 3x எனில், f o(g o h) = (f o g) o h என நிறுவுக.

  14. A = {0, 1, 2, 3}, B = {1, 3, 5, 7, 9} மற்றும் சார்பு f: A ⟶ B என்ற சார்பானது f(x) = 2x + 1 என வரையறுக்கப்படுகிறது. இதனை (i) வரிசைச் சோடி கணம் (ii) அட்டவணை (iii) அம்புக்குறிபடம் (iv) வரைபட முறையில் குறிக்க.

  15. 4 x 5 = 20
  16. படத்தில் காட்டப்பட்டுள்ள (படம்) அம்புக்குறி படமானது P மற்றும் Q கணங்களுக்கான உறவைக் குறிக்கின்றது. இந்த உறவை
    (i) கணகட்டமைப்பு முறை
    (ii) பட்டியல் முறைகளில் எழுதுக
    (iii) R -ன் மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.

  17. A = {1,2,3,4} மற்றும்  B = {2,5,8,11,14} என்பன இரு கணங்கள் என்க. f : A ⟶ B எனும் சார்பு f(x) = 3x - 1 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சார்பினைக் கொண்டு
    (i) அம்புக்குறி படம்
    (ii) அட்டவணை
    (iii) வரிசைச் சோடிகளின் கணம்
    (iv) வரைபடம் ஆகியவற்றைக் குறிக்க.

  18. f: N ⟶ N என்ற சார்பானது f(x) = 3x + 2, x∈N என வரையறுக்கப்பட்டால்
    (i) 1, 2, 3 -யின் நிழல் உருக்களைக் காண்க
    (ii) 29 மற்றும் 53-யின் முன் உருக்களைக் காண்க.
    (iii) சார்பின் வகையைக் காண்க.

  19. சார்பு f:R ⟶ R ஆனது 


    (i) f(4)
    (ii) f(-2)
    (iii) f(4) + 2f(1)
    (iv) \(\frac { f(1)-3f(4) }{ f(-3) } \)
    ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - உறவுகளும் சார்புகளும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Maths - Relations and Functions Model Question Paper )

Write your Comment