புள்ளியியலும் நிகழ்தகவும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை?

    (a)

    வீச்சு 

    (b)

    திட்டவிலக்கம் 

    (c)

    கூட்டுச் சராசரி 

    (d)

    விலக்க வர்க்கச் சராசரி 

  2. 8, 8, 8, 8, 8. . ., 8 ஆகிய தரவின் வீச்சு ______.

    (a)

    0

    (b)

    1

    (c)

    8

    (d)

    3

  3. சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது_______.

    (a)

    எப்பொழுதும் மிகை எண் 

    (b)

    எப்பொழுதும் குறை எண் 

    (c)

    பூச்சியம் 

    (d)

    பூச்சியமற்ற முழுக்கள் 

  4. 100 தரவுப் புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில், தரவுகளின் வர்க்கங்களின் கூடுதலானது ____.

    (a)

    40000

    (b)

    160900

    (c)

    160000

    (d)

    30000

  5. முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரியானது _____.

    (a)

    32.25

    (b)

    44.25

    (c)

    33.25

    (d)

    30

  6. ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது.

    (a)

    3

    (b)

    15

    (c)

    5

    (d)

    225

  7. x, y, z  ஆகியவற்றின் திட்டவிலக்கம் p-எனில், 3x + 5, 3y + 5, 3z + 5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது _____.

    (a)

    3p + 5

    (b)

    3p 

    (c)

    p + 5

    (d)

    9p + 15

  8. கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?

    (a)

    P(A) > 1

    (b)

    0 \(\le \) P(A) \(\le \) 1

    (c)

    P(\(\phi \)) = 0

    (d)

    P(A) + P(\(\overset {-}{A}\)) = 1

  9. ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது \(\frac{x}{3}\). வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac{2}{3}\) எனில் x யின் மதிப்பானது _____.

    (a)

    2

    (b)

    1

    (c)

    3

    (d)

    1.5

  10. கமலம், குலுக்கல் போட்டியில் கலந்துகொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு \(\frac{1}{9}\) எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை,___.

    (a)

    5

    (b)

    10

    (c)

    15

    (d)

    20

  11. 7 x 2 = 14
  12. கொடுக்கப்பட்ட தரவுப் புள்ளிகளுக்கு வீச்சு மற்றும் வீச்சுக்கெழு ஆகியவற்றைக் காண்க: 25, 67, 48, 53, 18, 39, 44.

  13. ஒரு தரவின் வீச்சு 13.67 மற்றும் மிகப் பெரிய மதிப்பு 70.08 எனில் மிகச் சிறிய மதிப்பைக் காண்க.

  14. ஒரு வகுப்புத் தேர்வில், 10 மாணவர்களின் மதிப்பெண்கள் 25, 29, 30, 33, 35, 37, 38, 40, 44, 48 ஆகும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் திட்ட விலக்கத்தைக் காண்க.

  15. முதல் n இயல் எண்களின் சராசரி மற்றும் விலக்க வர்க்கச் சராசரிகளைக் காண்க.

  16. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளன.

    மதிப்பெண்கள்  0-10 10-20 20-30 30-40 40-50 50-60 60-70
    மாணவர்களின் எண்ணிக்கை  8 12 17 14 9 7 4

    இத்தரவிற்குத் திட்ட விலக்கம் காண்க.

  17. இரண்டு நாணயங்கள் ஒன்றாகச் சுண்டப்படுகின்றன. இரண்டு நாணயங்களிலும் வெவ்வேறு முகங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

  18. படத்தில் காட்டியுள்ள அம்புக்குறி சுழற்றும் விளையாட்டில் 1, 2, 3, …12 என்ற எண்கள் சமவாய்ப்பு முறையில் கிடைக்க வாய்ப்புள்ளது. அம்புக்குறியானது (i) 7 (ii) பகா எண் (iii) பகு எண் ஆகியவற்றில் நிற்பதற்கான நிகழ்தகவுகளைக் கண்டறிக.

  19. 4 x 5 = 20
  20. தரவின் சராசரியானது 25.6 மற்றும் அதன் மாறுபாட்டுக் கெழுவானது, 18.75 எனில், அதன் திட்ட விலகத்தைக் காண்க.

  21. பின்வரும் அட்டவணையில் ஒரு பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் உயரம் மற்றும் எடைகளின் சராசரி மற்றும் விலக்க வர்க்க சராசரி ஆகிய மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

      உயரம்  எடை 
    சராசரி  155 செ.மீ  46.50 கி.கி 
    விலக்க வர்க்கச் சராசரி  72.25 செ.மீ2 28.09 கி.கி2 

    இவற்றில் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது?

  22. P(A) = 0.37, P(B) = 0.42, P(A\(\cap\)B) = 0.09 எனில், P(A\(\cup\)B) ஐக் காண்க.

  23. A மற்றும் B ஆகிய இரு விண்ணப்பதாரர்கள் IIT -யில் சேர்வதற்காகக் காத்திருப்பவர்கள். இவர்களில் A தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு 0.5, A மற்றும் B இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு 0.3 எனில், B தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அதிகபட்ச நிகழ்தகவு 0.8 என நிரூபிக்க.

  24. 2 x 8 = 16
  25. கொடுக்கப்பட்ட தரவின் வீச்சைக் காண்க.

    வருமானம்  400-450 450-500 500-550 550-600 600-650
    ஊழியர்களின் எண்ணிக்கை 8 12 30 21 6
  26. 100 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவில், அவர்கள் எடுத்த மதிப்பெண்களின் சராசரி மற்றும் திட்டவிலக்கமானது முறையே 60 மற்றும் 15 ஆகும். பின்னர் 45 மற்றும் 72 என்ற இரு மதிப்பெண்களுக்குப் பதிலாக முறையே 40 மற்றும் 27 என்று தவறாகப் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. அவற்றைச் சரி செய்தால் கிடைக்கப்பெறும் புதிய தரவின் சராசரியும் திட்ட விலக்கமும் காண்க.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் - புள்ளியியலும் நிகழ்தகவும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Maths - Statistics and Probability Model Question Paper )

Write your Comment