Full Portion எட்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 80
    10 x 8 = 80
  1. ஜெர்மன் பேரரசர்
    அ) ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் இயல்பு யாது?
    ஆ) ஜெர்மனின் வன்முறைசார் தேசியம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
    இ) மொராக்கோ விவகாரத்தில் கெய்சர் வில்லியம் தலையிட்டதேன்?
    ஈ) ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகளுக்கு என்ன நேர்ந்தது?

  2. பால்கன் போர்கள்
    அ) பால்கன் கழகம் ஏன் உருவாக்கப்பட்டது?
    ஆ) முதல் பால்கன் போரின் விளைவுகள் யாவை?
    இ) இப்போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் யாவர்?
    ஈ) இரண்டாவது பால்கன் போரின் இறுதியில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின் பெயரென்ன?

  3. ஹோ சி மின்
    அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
    ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
    இ) ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
    ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பக்கப்பட்டது?

  4. ஸ்டாலின் கிரேடு போர்
    அ) ஜெர்மனி ஸ்டாலின் கிரேடை எப்போது தாக்கியது?
    ஆ) ஸ்டாலின் கிரேடின் முக்கிய உற்பத்திப் பொருள்கள் யாவை?
    இ) ஸ்டாலின் கிரேடைத் தாக்குவதற்கு ஹிட்லர் தீட்டிய திட்டத்தின் பெயரென்ன?
    ஈ) ஸ்டாலின் கிரேடு போரின் முக்கியத்துவமென்ன?

  5. பனிப்போர்
    அ) இரண்டாம் உலகப்போருக்குப்பின் உருவான இரு இராணுவப்பிரிவுகளைப் பற்றிக் கூறுக.
    ஆ) பனிப்போர் என்ற சொல்லாடலை உருவாக்கியவர் யார்? அதை முதலில் பயன்படுத்தியவர் யார்?
    இ) நேட்டோவின் உருவாக்கத்திற்கு சோவியத் ரஷ்யாவின் பதிலடி யாது?
    ஈ) எவ்வகைப் பட்டியில் வார்சா உடன்படிக்கை கலைக்கப்பட்டது?

  6. கொரியப்போர்
    அ) கொரியப்போரின் போது வட கொரியாவின் அதிபர் யார்?
    ஆ) வடகொரிய அதிபரின் தெற்குப்புற எதிரி யார்?
    இ) கொரியப் போர் எத்தனை காலம் நீடித்தது?
    ஈ) போரின் விளைவாக ஏற்பட்ட மனித உயிரிழப்பு எவ்வளவு?

  7. அணிசேரா இயக்கம்
    அ) அணிசேரா இயக்கத்தின் முதல் மாநாடு எங்கே எப்போது நடைபெற்றது?
    ஆ) முதல் மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்கள் யாவர்?
    இ) அணிசேரா இயக்கத்தின் குறிக்கோள்கள் என்ன?
    ஈ) அணிசேரா இயக்கத்தின் பெல்கிரேட் மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இரு அடிப்படைக் கோள்களைக் கூறுக.

  8. பெர்லின் அவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
    அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
    ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றார்?
    இ) 1961 ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
    ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?

  9. அலிகார் இயக்கம்
    அ) இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள் என்ன?
    ஆ) இவ்வியக்கத்தின் ஆன்மாவாகக் கருதப்படுபவர் யார்?
    இ) ஆங்கில நூல்கள் ஏன் உருது மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன?
    ஈ) பல்கலைக்கழகமாக  தரம் உயர்த்தப்பட்ட கல்லூரியின் பெயரைக் குறிப்பிடுக

  10. ராமலிங்க அடிகள்
    அ) ஜீவகாருண்யம் என்றா ல் என்ன?
    ஆ) அருட்பா என்றா ல் என்ன?
    இ) சமரச வேத சன்மார்க்க சத்ய சங்கத்தின் முக்கியப் பங்களிப்பை குறிப்பிடுக.
    ஈ) தன து இலவச உணவகத்தை அவர் எங்கே அமைத் திருந்தார் ?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - Full Portion எட்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 10th Social Science - Full Portion Eight Marks Question Paper )

Write your Comment