" /> -->

அரையாண்டு மாதிரி வினாத்தாள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  14 x 1 = 14
 1. ஜெர்மனியர்கள் இறுதியில் ________ ஆம் ஆண்டு நவம்பரில் சரணமடைந்தனர்

  (a)

  1914

  (b)

  1918

  (c)

  1920

  (d)

  1925

 2. யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?

  (a)

  ஹெர்மன் கோர்ட்ஸ் 

  (b)

  பிரான்சிஸ்பிசாரோ 

  (c)

  தெளசெயின்ட் லாவெர்ட்யூர் 

  (d)

  முதலாம் பெட்ரோ 

 3. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் ________ ல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்

  (a)

  1941 ஆம் ஆண்டு ஜூன்

  (b)

  1941 ஆம் ஆண்டு மார்ச்

  (c)

  1942 ஆம் ஆண்டு மார்ச்

  (d)

  1942 ஆம் ஆண்டு ஜூன்

 4. சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்

  (a)

  சுவாமி விவேகானந்தரின் சீடர்

  (b)

  இந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

  (c)

  ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்

  (d)

  சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்

 5. நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.

  (a)

  கோடைக்காலம்

  (b)

  குளிர்க்காலம்

  (c)

  மழைக்காலம்

  (d)

  வடகிழக்கு பருவக்காற்று காலம்

 6. எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?

  (a)

  இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

  (b)

  இந்திய வானியல் துறை

  (c)

  இந்திய மண் அறிவியல் நிறுவனம்

  (d)

  இந்திய மண் ஆய்வு நிறுவனம்

 7. _______ சணல் உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் உள்ளது.

  (a)

  இந்தியா 

  (b)

  வங்கதேசம் 

  (c)

  மலேசியா 

  (d)

  சீனா 

 8. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை ________ 

  (a)

  16

  (b)

  19

  (c)

  20

  (d)

  22

 9. இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள் 

  (a)

  கல்கத்தா, பம்பாய், சென்னை 

  (b)

  டெல்லி மற்றும் கல்கத்தா

  (c)

  டெல்லி,கல்கத்தா, சென்னை 

  (d)

  கல்கத்தா,சென்னை,டெல்லி 

 10. நாடு வருமானம் அளவிடுவது 

  (a)

  பணத்தின் மொத்தமதிப்பு 

  (b)

  உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு 

  (c)

  நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு 

  (d)

  பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு 

 11. மாண்டேகு-செம்ஸ்போர்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு _________.

  (a)

  1919

  (b)

  1918

  (c)

  1916

  (d)

  1914

 12. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?

  (a)

  S. சத்தியமூர்த்தி

  (b)

  கஸ்தூரிரங்கர்

  (c)

  P. சுப்பராயன்

  (d)

  பெரியார் ஈ.வெ .ரா

 13. கேத்தரீன் மற்றும் பைக்கார நீர்விழ்ச்சிகள் அமைந்துள்ள மாவட்டம் ________.

  (a)

  விருதுநகர் 

  (b)

  நீலகிரி 

  (c)

  மதுரை 

  (d)

  திருப்பூர் 

 14. ________ முதல் பல பொருளாதார வல்லுநர்கள் வரி விதிப்புக் கொள்கைகளைக் கொடுத்துள்ளனர்.

  (a)

  ஆடம் ஸ்மித் 

  (b)

  கீன்ஸ் 

  (c)

  மார்ஷல் 

  (d)

  எதுவுமில்லை 

 15. பகுதி - II

  எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  10 x 2 = 20
 16. கொரியாவை ஜப்பான் 1910 ல் ஏன் இணைத்துக் கொண்டது?

 17. பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ட்றுமீனின் வரையறை எழுதுக

 18. அலிகார் இயக்கம் யாரால் நிறுவப்பட்டது? அதன் நோக்கம் யாது?

 19. இந்தியாவில் நெல் பயிரிடப்படும் முறைகளை குறிப்பிடுக.

 20. இந்திய இரயில்வேயின் நான்கு வகைகளை எழுதுக.

 21. அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன?

 22. உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை?

 23. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்றால் என்ன?

 24. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?

 25. சேரன்மகாதேவி குருகுல நிகழ்ச்சி குறித்து நீங்கள் அறிந்ததென்ன ?

 26. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களின் பெயர்களை எழுதுக.

 27. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.

 28. OPEC இலச்சினை எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?

 29. தொழில்மயமாதல் என்றால் என்ன?

 30. பகுதி - III

  ஏதேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்.

  10 x 5 = 50
 31. உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்

 32. அடால்ப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ஒரு கட்டுரை வரையவும்.

 33. நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக

 34. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.

 35. இந்திய விவசாயிகள் எதிர் கொள்ளும் முக்கிய சவால்கள் விவரிக்க.

 36. இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் - விவரிக்க.

 37. இந்தியாவின் பொதுத் தகவல் தொடர்பு அமைப்பு பற்றி விரிவாக எழுதவும்.

 38. சிவகங்கையின் துன்பகரமான வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக.

 39. ஜில்லஸ்பியின் கொடுங்கோன்மை ஆட்சிப் பற்றி எழுதுக.

 40. சார்க் - தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு விவரிக்கவும்.

 41. குறைந்த பட்ச ஆதரவு விலையை விளக்குக.

 42. இந்தியாவின் பல பரிமாண வறுமை குறியீடு 2018 பற்றி விவரி.

 43. இந்தியாவில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்த சமீபத்திய சட்ட முயற்சிகளை எழுதுக.

 44. தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக?

 45. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  2 x 8 = 16
  1. அணிசேரா இயக்கம்
   அ) அணிசேரா இயக்கத்தின் முதல் மாநாடு எங்கே எப்போது நடைபெற்றது?
   ஆ) முதல் மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்கள் யாவர்?
   இ) அணிசேரா இயக்கத்க்கத்தின் குறிக்கோள்கோள்கோள்கள் என்ன?
   ஈ) அணிசேரா இயக்கத்க்கத்தின் பெல்கிரேட் மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இரு அடிப்படைக் கோள்கைகளைக் கூறுக.

  2. ஹோ சி மின்
   அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
   ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
   இ)ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
   ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பக்கப்பட்டது?

  1. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
   1. கிரேட் பிரிட்டன்
   2.ஜெர்மனி 
   3. பிரான்ஸ் 
   4. இத்தாலி 
   5. மொராக்கோ 
   6. துருக்கி 
   7. செர்பியா 
   8. பாஸ்னிய 
   9. கிரீஸ் 
   10. ஆஸ்திரிய-ஹங்கேரி 
   11. பல்கேரியா 
   12. ருமேனியா

  2. தேசிய நெடுஞ்சாசலை எண். 7(NH7).

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 10th Social Science Half Yearly Model Question Paper )

Write your Comment