" /> -->

இயற்கணிதம் முக்கிய வினாக்கள்

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. மூன்று மாறிகளில் அமைத்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்.

  (a)

  ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன.

  (b)

  ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன

  (c)

  ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்

  (d)

  ஒன்றையொன்று வெட்டாது. 

 2. x+y-3x=-6, -7y+7z=7, 3z=9 என்ற தொகுப்பின்  தீர்வு

  (a)

  x=1,y=2,z=3

  (b)

  x=-1,y=2,z=3

  (c)

  x=-1,y=-2,z=3

  (d)

  x=1,y=2,z=3

 3. (2x-1)2 =9 யின் தீர்வு

  (a)

  -1

  (b)

  2

  (c)

  -1,2

  (d)

  இதில் எதுவும்இல்லை

 4. 4x4-24x3+76x2+ax+b ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b -யின் மதிப்பு

  (a)

  100,120

  (b)

  10,12

  (c)

  -120,100

  (d)

  12,10

 5. q2x2+p2x+r2=0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள் qx2+px+r=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில்,q,p,r என்பன

  (a)

  ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன.

  (b)

  ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் உள்ளன.

  (c)

  கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத் தொடர்வரிசை இரண்டிலும் உள்ளன.

  (d)

  இதில் எதுவும் இல்லை.

 6. 5 x 2 = 10
 7. பள்ளிகளுக்கிடையேயான ஒரு தடகளப் போட்டியில், 24 தனிநபர்  போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 56 புள்ளிகள் ஒதுக்கப்ப்கப்பட்டுள்ளது. முதலிடம் பெறுபவருக்கு 5 புள்ளிகளும், இரண்டாமிடம் பெறுபவருக்கு 3 புள்ளிகளும், மூன்றாமிடம் பெறுபவருக்கு 1 புள்ளியும் அளிக்கப்ப்கப்படும். மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்தவர்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமம் எனில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களின் எண்ணிக்கையைக் காண்க.

 8. தீர்க்க :x+2y-z=5;x-y+z=-2;-5x-4y+z=-11

 9. தீர்க்க 3x+y-3z=1;-2x-y+2z=1;-x-y+z=2

 10. இருபடி சூத்திரத்தைப் பயன்படுத்தி பின்வரும் சமன்பாடுகளை தீர்க்க.
  9x2-9(a+b)x+(2a2+5ab+2b2)=0

 11. மூலங்கள் சமமெனில் கீழ்க்கண்ட சமன்பாட்டில் k-யின் மதிப்பை காண்க.
  (k-12)x2+2(k-12)x+2=0

 12. 5 x 3 = 15
 13. x3+x2-x+2 மற்றும் 2x3-5x2+5x-3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ காண்க.

 14. சூத்திர முறையைப் பயன்படுத்தி 2x2-3x-3=0 -ஐத் தீர்க்க

 15. \(ad\neq bc\) எனில், சமன்பாட்டிற்கு x2(a2+b2)+2x(ac+bd)+(c2+d2)=0 இதற்கு மெய்யெண் தீர்வு இல்லை என நிரூபி.

 16. இரு எண்களின் கூடுதல் 15. அவற்றின் தலைகீழிகளின் கூடுதல் \(\cfrac { 3 }{ 10 } \) எனில், அந்த எண்களைக் காண்க.

 17. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் பெருக்கற்பலன் 12 இதனுடன் 36 ஐக் கூட்டினால் அந்த எண்ணானது இலக்கங்கள் இடமாறி கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்.

 18. 4 x 5 = 20
 19. பின்வருவனவற்றில் முறையே f(x) மற்றும் g(x) ஆகியவற்றின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம காண்க. மேலும் f(x) x g(x)=(மீ.பொ.ம) × (மீ.பொ.வ) என்பதைச் சரிபார்க்க.
  21x2y, 35xy2

 20.  a+ 4a - 12, a2 - 5a + 6 என்ற பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ a - 2 எனில் அவற்றின் மீ.பொ.ம காண்க.

 21. இரு அடுத்தடுத்த இயல் எண்களின் பெருக்கற்பலன் 20 எனில், அந்த எண்களைக் காண்.

 22. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் பெருக்கற்பலன் 10.அந்த எண்ணிலிருந்து 63 ஐக் கழிப்பதால் அந்த எண்ணின் இலக்கங்கள் இடம் மாறுகின்றன எனில் அந்த எண்ணைக் காண்க. 

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் Chapter 3 இயற்கணிதம் முக்கிய வினாத்தாள் ( 10th Standard Maths Chapter 3 Algebra Important Question Paper )

Write your Comment