ஆயத்தொலைவு வடிவியல் மாதிரி வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. (−5,0) , (0,−5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ________.

    (a)

    0 ச. அலகுகள்

    (b)

    25 ச. அலகுகள்

    (c)

    5 ச. அலகுகள்

    (d)

    எதுவுமில்லை

  2. (0, 0) மற்றும் (–8, 8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு_______.

    (a)

    -1

    (b)

    1

    (c)

    \(\frac 13\)

    (d)

    -8

  3. 7x - 3y + 4 = 0 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு _______.

    (a)

    7x - 3y + 4 = 0

    (b)

    3x - 5y + 4 = 0

    (c)

    3x + 7y = 0

    (d)

    7x - 3y = 0

  4. சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை

    (a)

    இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

    (b)

    இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

    (c)

    இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்

    (d)

    அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்

  5. (2, 1) ஐ வெட்டுப் புள்ளியாகக் கொண்ட இரு நேர்க்கோடுகள் ____.

    (a)

    x - y - 3 = b; 3x - y - 7 = 0

    (b)

    x + y = 3; 3x + y = 7

    (c)

    3x + 3y = 0; x + y = 7

    (d)

    x + 3y - 3 = 0; x - y - 7 = 0

  6. 5 x 2 = 10
  7. P(-1.5,3), Q(6,-2) மற்றும் R(-3,4) ஆகிய புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமையும் எனக் காட்டுக.

  8. (8,6) , (5,11), (-5,12) மற்றும் (-4,3) ஆகிய புள்ளிகளை முனைகளாகக் கொண்ட நாற்கரத்தின் பரப்பைக் காண்க.

  9. வரைபடமானது y அச்சில் பாரன்ஹீட் டிகிரி வெப்பநிலையையும் x அச்சில் செல்சியஸ் டிகிரி வெப்பநிலையையும் குறிக்கிறது எனில், (a) கோட்டின் சாய்வு மற்றும் yவெட்டுத்துண்டு காண்க. (b) கோட்டின் சமன்பாட்டை எழுதுக. (c) பூமியின் சராசரி வெப்பநிலை 25° செல்சியஸாக இருக்கும்போது பூமியின் சராசரி வெப்பநிலையைப் பாரன்ஹீட்டில் காணவும

  10. (x,y) எனும் புள்ளி (7, 1) மற்றும் (3, 5) லிருந்து சமதூரத்தில் உள்ளதெனில், x மற்றும் y கிடையேயான உறவைக் காண்க. 

  11. A (-5, 7), B (-4, -5), C (-1, -6) மற்றும் D(4, 5) உச்சிகளைக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு காண்க.

  12. 5 x 3 = 15
  13. (–2, 2), (5, 8) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்க்கோடு r மற்றும் (–8, 7), (–2, 0) ஆகிய புள்ளிகள் வழிச் செல்லும் நேர்க்கோடு s ஆகும் எனில், நேர்க்கோடு r - ஆனது நேர்க்கோடு s - க்கு செங்குத்தாக அமையுமா?

  14. 3x - 7y = 12 என்ற நேர்க்கோட்டிற்கு இணையாகவும் (6,4) என்ற புள்ளிவழிச் செல்வதுமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

  15. A(2, -2) மற்றும் B(-7, 4) ஐச் சேர்க்கும் கோட்டுத் துண்டினை முப்பிரிவுகளாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆய அச்சுத் தொலைவுகளைக் காண்க.

  16. A(6, 1), B(8, 2), C(9, 4) மற்றும் D(P, 3) என்பன ஒரு இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் எனில், Pயின் மதிப்பைக் காண்.

  17. கீழ்கண்ட புள்ளிகளை உச்சிகளாக கொண்ட Δ- ன் பரப்பு காண். (1, -1), (-4, 6) மற்றும் (-3, -5). 

  18. 4 x 5 = 20
  19. கொடுக்கப்பட்ட புள்ளிகள் ஒரு கோட்டில் அமைந்தவை எனில் ‘a’ –யின் மதிப்பைக் காண்க.
    (2, 3), (4, a) மற்றும் (6, –3)

  20. கொடுக்கப்பட்ட நேர்க்கோடுகளின் சமன்பாட்டிலிருந்து ஆய அச்சுகளின் மேல் ஏற்படுத்தும் வெட்டுத்துண்டுகளைக் காண்க.
    4x + 3y + 12 = 0

  21. கீழ்கண்ட புள்ளிகள் ஒரு இணைகரத்தின் உச்சிகள் எனில் a,b-ன் மதிப்புகளைக் காண்.
    A(-2, -1), B(a, 0), C(4, b) மற்றும் D(1, 2)  

  22. A(2, 3), B(4, k) மற்றும் (6, -3) ஒரே நேர்க்கோட்டில் அமைவன எனில் k-யின் மதிப்பு காண்க.

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் Chapter 5 ஆயத்தொலைவு வடிவியல் மாதிரி வினாத்தாள் ( 10th Standard Maths Chapter 5 Coordinate Geometry Model Question Paper )

Write your Comment