எண்களும் தொடர் வரிசைகளும் Book Back Questions

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    7 x 1 = 7
  1. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?

    (a)

    6

    (b)

    7

    (c)

    8

    (d)

    9

  2. t1, t2, t3,..... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில் t6, t12, t18,.... என்பது _____.

    (a)

    ஒரு பெருக்குத் தொடர்வரிசை

    (b)

    ஒரு கூட்டுத் தொடர்வரிசை

    (c)

    ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்கு தொடர்வரிசையுமல்ல

    (d)

    ஒரு மாறிலித் தொடர் வரிசை

  3. (1+ 2+ 33+ ...+ 153) - (1 + 2 + 3+....+15) யின் மதிப்பு _______.

    (a)

    14400

    (b)

    14200

    (c)

    14280

    (d)

    14520

  4. யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள் ____.

    (a)

    0, 1, 8

    (b)

    1, 4, 8

    (c)

    0, 1, 3

    (d)

    1, 3, 5

  5. 1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண் ____.

    (a)

    2025

    (b)

    5220

    (c)

    5025

    (d)

    2520

  6. F1 = 1 , F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது ______.

    (a)

    3

    (b)

    5

    (c)

    8

    (d)

    11

  7. ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல் ______.

    (a)

    16 m

    (b)

    62 m

    (c)

    31 m

    (d)

    \(\frac{31}{2}\) m

  8. 5 x 2 = 10
  9. பின்வரும் ஒவ்வொன்றிலும் a -யை b ஆல் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு மற்றும் மீதியைக் காண்க. (i) a = −12 , b = 5 (ii) a = 17 , b = −3 (iii) a = −19 , b = −4

  10. 445 மற்றும் 572 –ஐ ஒரு குறிப்பிட்ட எண்ணால் வகுக்கும்போது முறையே மீதி 4 மற்றும் 5 –ஐ தரக்கூடிய மிகப்பெரிய எண்ணைக் கண்டறிக.

  11. தீர்க்க 8x ≡ 1 (மட்டு 11)

  12. 3x ≡ 1 (மட்டு 15) என்ற சமன்பாட்டிற்கு எத்தனை முழு எண் தீர்வுகள் உள்ளன எனக் காண்க.

  13. ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் l, m மற்றும் n ஆவது உறுப்புகள் முறையே x, y மற்றும் z எனில், பின்வருவனவற்றை நிரூபிக்க.
    (i) x(m - n) + y(n - l) + z(l - m) = 0
    (ii) (x - y)n + (y - z)l + (z - x)m = 0

  14. 2 x 5 = 10
  15. ஒரு தொடர்வரிசையின் பொது உறுப்பு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
     
    11 -வது உறுப்பு மற்றும் 18 -வது உறுப்புக் காண்க.

  16. 300–க்கும் 600-க்கும் இடையே 7-ஆல் வகுபடும் அனைத்து இயல் எண்களின் கூடுதல் காண்க.

  17. 1 x 8 = 8
  18. 24,15,36 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய ஆறிலக்க எண்ணைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 10th Standard கணிதம் - எண்களும் தொடர் வரிசைகளும் Book Back Questions ( 10th Standard Maths - Numbers and Sequences Book Back Questions )

Write your Comment