" /> -->

pre model half yearly examination

10th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:03:00 Hrs
Total Marks : 100
  7
 1. தென்னாப்பிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?

  (a)

  வெர்வோர்டு

  (b)

  ஸ்மட்ஸ்

  (c)

  ஹெர்சாக்

  (d)

  போதா

 2. இன ஒதுக்கல் கொள்கை பின்பற்றிய நாடு _______ 

  (a)

  தென் அமெரிக்கா

  (b)

  தென் ஆப்ரிக்கா

  (c)

  பிரேசில்

  (d)

  எகிப்து

 3. இந்தியாவின் தென்கோடி முனை

  (a)

  அந்தமான்

  (b)

  கன்னியாகுமரி

  (c)

  இந்திராமுனை

  (d)

  காவரட்தி

 4. இந்தியாவின் காலநிலை __________ ஆக பெயரிடப்பட்டுள்ளது.

  (a)

  அயன மண்டல ஈரக் காலநிலை

  (b)

  நிலநடுக்கோட்டுக் காலநிலை 

  (c)

  அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை

  (d)

  மித அயனமண்டலக் காலநிலை

 5. கம்பு ________ ஐ பூர்விகமாகக் கொண்ட ஒரு பயிராகும்.

  (a)

  ஆசியா 

  (b)

  ஆப்ரிக்கா 

  (c)

  ஐரோப்பா 

  (d)

  அமெரிக்கா 

 6. மாநில ஆளுநரை நியமிப்பவர்.

  (a)

  பிரதமர் 

  (b)

  முதலமைச்சர் 

  (c)

  குடியரசுத் தலைவர் 

  (d)

  தலைமை நீதிபதி 

 7. ________ என்பது அந்நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் மதிப்பைக் குறிக்கும்.

  (a)

  மொத்த நாட்டு உற்பத்தி (GNP)

  (b)

  மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

  (c)

  நிகர நாட்டு உற்பத்தி (NNP)

  (d)

  தலா வருமானம் (PCI)

 8. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?

  (a)

  தாதாபாய் நௌரோஜி

  (b)

  நீதிபதி கோவிந்த் ரானடே

  (c)

  பிபின் சந்திரபால்

  (d)

  ரொமேஷ் சந்திரா

 9. இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில்_____________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

  (a)

  1860

  (b)

  1870

  (c)

  1880

  (d)

  1850

 10. தூத்துக்குடி _________  என அழைக்கப்படுகிறது.

  (a)

  இந்தியாவின் நுழைவாயில்

  (b)

  தமிழ்நாட்டின் நுழைவாயில்

  (c)

  குழாய் நகரம்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 11. முதல் உலகப்போருக்குப் பின் ________ உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல் சிக்கல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது

  (a)

  அமைதி

  (b)

  வெர்செய்ல்ஸ் 

  (c)

  பாரிஸ்

  (d)

  லண்டன்

 12. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப் படுத்தினார்?

  (a)

  ரஷ்யர்கள்

  (b)

  அரேபியர்கள்

  (c)

  துருக்கியர்கள்

  (d)

  யூதர்கள்

 13. வெர்செயில்ஸ் உடன்படிக்கை கையெழுத்திட்ட ஆண்டு ______  

  (a)

  1918

  (b)

  1925

  (c)

  1919

  (d)

  1935

 14. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

  (a)

  ஆரிய சமாஜம்

  (b)

  பிரம்ம சமாஜம்

  (c)

  பிரார்த்தனை சமாஜம்

  (d)

  ஆதி பிரம்ம சமாஜம்

 15. உலகில் மிக அதிக அளவு மழை பெறும் பகுதியான மௌசின்ராம் _____ ல் அமைந்துள்ளது.

  (a)

  மேகாலயா 

  (b)

  அஸ்ஸாம் 

  (c)

  மணிப்பூர் 

  (d)

  அருணாச்சல பிரதேசம் 

 16. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை 

  (a)

  ஹிராகுட் அணை 

  (b)

  பக்ராநங்கல் அணை 

  (c)

  மேட்டூர் அணை 

  (d)

  நாகர்ஜூனா சாகர் அணை 

 17. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்

  (a)

  சேலம்

  (b)

  சென்னை 

  (c)

  மதுரை 

  (d)

  கோயம்புத்தூர்

 18. சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது

  (a)

  போக்குவரத்து

  (b)

  கனிமப்படிவுகள்

  (c)

  பெரும் தேவை 

  (d)

  மின்சக்தி சக்தி கிடைப்பது

 19. இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டுள்ள மாநிலம் _____ ஆகும்.

  (a)

  தமிழ்நாடு 

  (b)

  ஆந்திர பிரதேசம் 

  (c)

  குஜராத் 

  (d)

  மகாராஷ்ட்ரம் 

 20. இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம்

  (a)

  5846 கி.மீ

  (b)

  5847 கி.மீ

  (c)

  5849 கி.மீ

  (d)

  5800 கி.மீ

 21. தங்க நாற்கரச் சாலைகள் திட்டம் ______ ல் தொடங்கப்பட்டது.

  (a)

  1998

  (b)

  1991

  (c)

  1997

  (d)

  1999

 22. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

  (a)

  ஒரு முறை 

  (b)

  இரு முறை 

  (c)

  மூன்று முறை 

  (d)

  எப்பொழுதும் இல்லை 

 23. இந்திய அரசியலமைப்பின் முன்னுரை ஜவஹர்லால் நேருவின் ________ அடிப்படையில் அமைந்துள்ளது.

  (a)

  கடமைகள் 

  (b)

  உரிமைகள் 

  (c)

  குறிக்கோள் மற்றும் தீர்மானத்தின் 

  (d)

  பிரிவுகள் 

 24. ______ மத்திய அரசின் அரசியலமைப்புத் தலைவர் ஆவர்.

  (a)

  குடியரசுத் தலைவர் 

  (b)

  தலைமை நீதிபதி

  (c)

  பிரதம அமைச்சர் 

  (d)

  அமைச்சர்கள் குழு 

 25. இந்தியாவின் முதல் குடிமகன் _______ ஆவார்.

  (a)

  பிரதம அமைச்சர் 

  (b)

  குடியரசுத் தலைவர் 

  (c)

  துணை குடியரசுதலைவர் 

  (d)

  உச்சநீதிமன்ற நீதிபதி 

 26. தமிழகத்தின் முதலமைச்சர் ஆக 1947-1949 வரை இருந்தவர் _________ 

  (a)

  திரு.C.N அண்ணாதுரை 

  (b)

  திரு.P.S. குமாரசாமி ராஜா 

  (c)

  திரு.ஒ.பி. காமராஜ் 

  (d)

  திரு.K.காமராஜ் 

 27. GNP யின் சமம் 

  (a)

  பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP 

  (b)

  பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்டு GDP 

  (c)

  GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம் 

  (d)

  NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

 28. வர்த்தக நோக்கத்திற்காக முதலில் இந்தியாவுக்கு வந்தவர்கள் 

  (a)

  ரோமானிய பேரரசு 

  (b)

  போர்ச்சுகீயர்

  (c)

  டச்சு 

  (d)

  டேனிஷ் 

 29. _______ ன் முதல் சுற்று ஜெனிவாவில் நடைபெற்றது.

  (a)

  WTO 

  (b)

  IMF 

  (c)

  GATT 

  (d)

  எதுமில்லை 

 30. கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார் ?

  (a)

  மருது சகோதரர்கள்

  (b)

  பூலித்தேவர்

  (c)

  வேலுநாச்சியார்

  (d)

  வீரபாண்டிய கட்டபொம்மன்

 31. _________ ஆற்காட்டு நவாபின் சகோதரர்.

  (a)

  மாபூஸ்கான்

  (b)

  ஹைதர் அலி

  (c)

  திப்பு சுல்தான்

  (d)

  முகமது அலி

 32. ஜான்சி ராணி லட்சுமி பாய் தனது வாரிசை தத்து எடுத்துக் கொள்ள அனுமதி தர மறுத்துவிட்ட வங்காள ஆளுநர் _________.

  (a)

  டல்ஹெளசி

  (b)

  கர்சன்

  (c)

  கானிங்

  (d)

  வில்லியம் பெண்டிங்

 33. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

  (a)

  பம்பாய்        

  (b)

  மதராஸ்

  (c)

  லக்னோ

  (d)

  நாக்பூர்

 34. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்த போது
  காந்தியடிகள் எங்கிருந்தார்?

  (a)

  புதுதில்லி

  (b)

  அகமதாபாத்

  (c)

  வார்தா 

  (d)

  நவகாளி

 35. ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டித்து ________ வீரத்திருமுகன் என்ற அரசுப் பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

  (a)

  காந்தியடிகள்

  (b)

  இரபீந்திரநாத் தாகூர்

  (c)

  சுபாஷ் சந்திரபோஸ்

  (d)

  நேரு

 36. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

  (a)

  K. காமராஜ்

  (b)

  C. ராஜாஜி

  (c)

  K. சந்தானம்

  (d)

  T. பிரகாசம்

 37. இந்திய தேசியக் காங்கிரசின் முதல்கூட்டத்தில் கலந்துகொண்ட 72 பிரதிநிதிகளில் _________ பிரதிநிதிகள் சென்னையைச் சேர்ந்தோராவர்.

  (a)

  22

  (b)

  20

  (c)

  25

  (d)

  30

 38. 1893இல் ஆதி திராவிட மகா ஜன சபையை_____________ நிறுவினார் .

  (a)

  இரட்டைமலை சீனிவாசன்

  (b)

  B.R. அம்பேத்கார்

  (c)

  ராஜாஜி

  (d)

  எம்.சி. ராஜா

 39. தமிழ்மொழி ஒரு செம்மொழி என்றும் எனவே சென்னைப் பல்கலைக் கழகம் தமிழை வட்டார மொழியென அழைக்கக் கூடாதென ஒரு முதன்முதலாக வாதாடியவர் ________

  (a)

  பாரதிதாசன்

  (b)

  பரிதிமாற் கலைஞர்

  (c)

  சுப்பிரமணிய பாரதி

  (d)

  திரு.வி.க.

 40. கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?

  (a)

  பாலக்காடு

  (b)

  செங்கோட்டை

  (c)

  போர்காட்

  (d)

  அச்சன்கோவில்

 41. ஆகாய கங்கை நீர்விழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் _________.

  (a)

  தருமபுரி 

  (b)

  திருநெல்வேலி 

  (c)

  நாமக்கல் 

  (d)

  தேனி 

 42. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர்_______________

  (a)

  பருப்பு வகைகள்

  (b)

  சிறுதானியங்கள்

  (c)

  எண்ணெய் வித்துக்கள்

  (d)

  நெல்

 43. __________ அணை நாட்டின் மண் -கல் கலவையில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும்.

  (a)

  மேட்டுர் 

  (b)

  சாத்தூர் 

  (c)

  பவானிசாகர் 

  (d)

  கிருஷ்ணகிரி 

 44. இன ஒதுக்கல் கொள்கை என்பது

  (a)

  ஒரு சர்வதேச சங்கம்

  (b)

  இராஜதந்திரம்

  (c)

  ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை

  (d)

  மேற்ற்கூறியவைகளில் எதுவுமில்லை

 45. அணிசேரா இயக்கமானது  ________ உறுப்பு நாடுகளையும் ________ பார்வையாளர்களையும் கொண்டுள்ளது.

  (a)

  100,13

  (b)

  120,7

  (c)

  100,33

  (d)

  120,31

 46. இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?

  (a)

  ஜி 20

  (b)

  ஏசியான் (ASEAN)

  (c)

  சார்க் (SAARC)

  (d)

  பிரிக்ஸ் (BRICS)

 47. _______ மற்றும் ________ உறவு நட்பு ரீதியாக அமைந்து இருக்கிறது.

  (a)

  இந்தியா மற்றும் சீனா 

  (b)

  இந்தியா மற்றும் நேபாளம் 

  (c)

  இந்தியா மற்றும் இலங்கை 

  (d)

  இந்தியா மற்றும் பூடான் 

 48. தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை_____________ மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.

  (a)

  FCI

  (b)

  நுகர்வோர் கூட்டுறவு

  (c)

  ICICI

  (d)

  IFCI

 49. தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து கூட்டணி அறிமுகப்படுத்தியவர் ________ 

  (a)

  அகரம் நிறுவனம் ஐ.நா.ஆர்.ஆர். சி

  (b)

  அப்துல்கலாம் அறக்கட்டளை மற்றும் இஸ்ரோ

  (c)

  எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்சி அறக்கட்டளை மற்றும் UNICEF

  (d)

  ஆதிசெய்வம் அறக்கட்டளை மற்றும் UNO

 50. விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட ________ கொள்கை 2018-ல் மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

  (a)

  நுகர்வோர் கூட்டுறவு கழகம்

  (b)

  புதிய விவசாயக் கொள்கை

  (c)

  தொழிற்துறை புரட்சி

  (d)

  ஏதுமில்லை

 51. எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது _________ அத்தியாவசியப் பணியாகக் கருதப்படுகிறது.

  (a)

  இராணுவ 

  (b)

  அயல்நாட்டுக் கொள்கை 

  (c)

  சட்டம் மற்றும் ஒழுங்கு 

  (d)

  தேர்தலை நடத்துதல் 

 52. TIDCO தொடங்கப்பட்ட ஆண்டு _________.

  (a)

  1971

  (b)

  1970

  (c)

  1965

  (d)

  1966

 53. முதல் உலகப்போரினால் _________ நாடுகள் நிதிசார்ந்த வகையிலும், அரசியல் நீதியாகவும் வலிமைகுன்றின

  (a)

  ஆசிய

  (b)

  ஐரோப்பிய

  (c)

  ஆப்ரிக்கன்

  (d)

  ஆஸ்திரேலியன்

 54. 1931 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் _________ தோற்கடிக்கப்பட்டது

  (a)

  தொழிலாளர் கட்சி

  (b)

  நாசி கட்சி

  (c)

  பாசிச கட்சி

  (d)

  ரிபப்ளிக் கட்சி

 55. மேற்கு ஐரோப்பாவில் பழைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராகத் திரும்பிய நாடுகளும் முதல்நாடு ______ ஆகும்

  (a)

  ஜப்பான்

  (b)

  ஜெர்மனி

  (c)

  இத்தாலி

  (d)

  அமெரிக்கா

 56. 1918 முதல் 1933 முடிய _________ நாடு ஒரு குடியரசாக இருந்தது

  (a)

  ஜெர்மனி

  (b)

  ஆஸ்திரியா

  (c)

  ஹங்கேரி

  (d)

  போர்ச்சுகல்

 57. ஹிட்லர் எழுதிய நூலின் பெயர் _______

  (a)

  குலாம்கிரி

  (b)

  அகிலதிரட்டு

  (c)

  மெயின் காம்ப்

  (d)

  திருவருப்பா

 58. ________ இல் இந்திய அரசுச்சட்டம் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்தது.

  (a)

  1819

  (b)

  1919

  (c)

  1915

  (d)

  1914

 59. _______ தென்னாப்பிரிக்காவின் முதல் உறுப்பின குடியரசுத் தலைவரானார்.

  (a)

  நெல்சன் மண்டேலா

  (b)

  ஹோ - சி - மின்

  (c)

  மா - சே - துங்

  (d)

  ரூஸ்வெல்ட்

 60. தென் அமெரிக்காவில் அஸ்டெக்குதல் _______ ஆண்டுகள் தங்கள் பேரரசை ஆட்சி செய்தனர்.

  (a)

  250

  (b)

  200

  (c)

  300

  (d)

  100

 61.  _______ ல் தென் ஆப்ரிக்க கட்சியும் தேசியக் கட்சியும் இணைந்து சவுத் ஆப்ரிக்க பார்ட்டி என்றழைக்கப்பட்டது

  (a)

  1924

  (b)

  1928

  (c)

  1934

  (d)

  1935

 62. 43 x 2 = 86
 63. நவாப் சந்தா சாகிப்பின் முகவர்களாக செயல்பட்டவர்கள் பெயர்களை எழுதுக.

 64. வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?

 65. தன்னாட்சி இயக்கத்துக்கான ஆங்கிலேயர்களின் பதில் நடவடிக்கை என்னென்ன?

 66. ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப்பெற்றார் ?

 67. 1919 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய அரசுச் சட்டம் பற்றி எழுதுக.

 68. கிலாபத் இயக்கம் ஏன் தொடங்கப்பட்டது?

 69. நீதிக்கட்சியால் நிறைவேற்றப்ப ட்ட இந்துசமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.

 70. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.

 71. பேரிடர் என்றால் என்ன?

 72. ஊட்டி, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளதா?

 73. தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பட்டியலிடுக.

 74. தமிழ்நாட்டின் அஞ்சலக மாவட்டங்கள் மற்றும் தலைமையகம் குறிப்பு எழுதுக.

 75. அணைகள் (Dams)

 76. இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி.

 77. சாபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.

 78. மெலுக்கா என்றால் என்ன?

 79. பிரிக்ஸ் (BRICS) குறிப்பு எழுதுக.

 80. உணவு மற்றும் ஊட்டச்சத் து பாதுகாப்பின் அடிப்படைக் கூறுகள் யாவை?

 81. வளர்வீத வரி என்றால் என்ன?

 82. பொழுதுபோக்கு வரி என்றால் என்ன?

 83. விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?

 84. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (MEPZ) பற்றி எழுதுக.

  1. மன்றோ கோட்பாட்டை விளக்குக.

  2. இராமலிங்க அடிகள் - குறிப்பு தருக

  3. வன உயிரினங்கள் என்றால் என்ன? அவை எத்தனை வகைப்படுகின்றன? அவை யாவை?

  4. துணைக்குடியரசுத் தலைவர் - தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் பதவிக்காலம் பற்றி எழுதுக.

  5. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?

  6. மொத்த உள்நாட்டு உற்பத்தியான மூன்று கணக்கிட்டு முறைகள் பற்றி எழுதவும்.

  7. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

  8. கூட்டு நிறுவனம் என்றால் என்ன?

  9. நெல்சன் மண்டேலா பற்றி விவரித்து எழுதவும்

  10. இரண்டாம் உலகப்போரின் முடிவு உலகிற்கு எதை குறிப்பாய் உணர்த்தியது?

  11. மேற்கத்திய நாடுகளின் தேவையின் பொருட்டே இஸ்ரேல்
   உருவாக்கப்பட்டதென்பது சூயஸ் கால்வாய் பிரச்சனையில் உறுதியானது – விளக்குக.

  12. பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ட்றுமீனின் வரையறை எழுதுக

  13. இந்தியாவின் நான்கு பருவக் காலங்களைக் குறிப்பிடுக.

  14. வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.

  15. ஆற்றல் வளங்கள் என்றால் என்ன? இது எத்தனை வகைப்படும்? அவை யாவை?

  16. மக்கள் தொகைக் கலவை என்றால் என்ன?

  17. அரசியலமைப்பு என்றால் என்ன?

  18. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பொருள் 

  19. நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?

  20. கீழ்க்கண்டவற்றுள் விரிவாக்கம் செய்க.
   (i) GATT 
   (ii) WTO 
   (iii) FDI 
   (iv) TRIPS 
   (v) TRIMS 

  21. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.

 85. 33 x 1 = 33
 86. ________ என்னும் அமெரிக்ககப்பல் ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது

  ()

  லூசிடானியா

 87. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி________  இல் நிறுவப்பப்பட்டது.

  ()

  1927

 88. டாக்டர் சன் யாட் செசென்னின் மறைவுக்குப் பின்னன்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர்______  ஆவார்.

  ()

  ஷியாங் - கை - ஷேக்

 89. சத்யார்த்த பிரகாஷ் எனும் நூல்_______  நேர்மறைக் கொள்கைகளைப் பட்டியலிடுகிறது

  ()

  ஒரு கடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டை நிராகரித்தல் பிராமணர் மேலாதிக்கம், சமூக நடைமுறைகள் ஆகியவற்றை மறுத்தல்

 90. 1970 களில் பள்ளிகள் மற்றும் வங்கிகளில் ______ பேனாக்கள் பயன்படுத்த அனுமதிக்கவில்லை.

  ()

  பந்துமனை 

 91. "வரி” என்ற வார்த்தை_______________ சொல்லிலிருந்து பெறப்பட்டது.

  ()

  வரிவிதிப்பு 

 92. 1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட _______ உடன்படிக்கையின்படி அல்பேனியா

  ()

  இலண்டன்

 93. வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் மூலமாக ______க்கு மிகச்சிறிய பகுதிகளே கிடைத்து

  ()

  இத்தாலி

 94. ______ என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.

  ()

  ரேடார்                 

 95. பிரம்ம சமாஜம் இராஜாராம் மோகன்ராயால் ________ ல் நிறுவப்பட்டது

  ()

  1828

 96. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு _____ 

  ()

  நவம்பர் 26,1949

 97. இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் ______ முறை திருத்தப்பட்டுள்ளது.

  ()

  பிரிவு 12 முதல் பிரிவு 35 வரை 

 98. பிரதம அமைச்சரையும் அமைச்சரவை உறுப்பினர்களையும் ______ நியமிக்கிறார்.

  ()

  குடியரசுத் தலைவர் 

 99. ________ தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் ஆவார்.

  ()

  எம்.பாத்திமா பீவி 

 100. ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் செய்தித் தொடர்புகளில் ________ முதன்மையாக விளங்குகிறார்.

  ()

  முதலமைச்சர் 

 101. GDP _________ பொருளாதாரத்தின் ஒரு குறியீடாகும்.

  ()

  ஒரு நாட்டின் 

 102. இந்தியாவின் _____ பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன.

  ()

  15

 103. வேலுநாச்சியாரும் அவரது மகளும் எட்டாண்டுகளாக________ பாதுகாப்பில் இருந்தனர்.

  ()

  கோபால நாயக்கர்

 104. மருது சகோதரர்களை கட்டபொம்மன் சந்திப்பதை ஆட்சியர் _________ தடுக்க முயன்றார்.

 105. தோட்டங்களில் வேலை செய்ய _________ இன மக்கள் கொத்தடிமைகளாக வலுக்கட்டாயமாக பணியில் அமர்த்தப்பட்டனர்.

  ()

  முண்டா

 106. காந்தியடிகளின் அரசியல் குரு ____________ ஆவார்

  ()

  கோபால கிருஷ்ண கோகலே

 107. காந்தியடிகள் ................... தென்னாப்ரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்.

  ()

  1893 ஏப்ரல் மாதம்

 108. சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி
  ____________ ஆவார்.

  ()

  T. முத்துசாமி

 109. சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக .............. பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு இடம்பெயர்ந்தார்.

  ()

  சுப்ரமணிய பாரதி

 110. ___________தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார் .

  ()

  மறைமலை அடிகள்

 111. ..................... இல் முழுமையான அச்சகம் சீகன்பாகு என்பவரால் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டது.

  ()

  1790

 112. கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம்___________ ஆகும்.

  ()

  சோலைக்கரடு 

 113. ________ மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதியாகும்.

  ()

  பழனிமலை 

 114. _________ அணை செங்கம் தாலுக்காவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

  ()

  சாத்தனூர் 

 115. ____________என்ப து ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.

  ()

  இராஜதந்திரம் 

 116. இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக ____________ இருக்கிறது

  ()

  மியான்மர் 

 117. இந்தியா ஏராளமான ________ நாடுகளுடன் சூழப்பட்டிருக்கிறது.

  ()

  அண்டை 

 118. _____ என்பது பொதுவான சந்தை மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.

  ()

  தொழில்துறை தொகுப்புகள்

 119. 13 x 1 = 13
 120. சாங்போ

 121. (1)

  பிரபலமான ஓர் அவை 

 122. கரும்பு 

 123. (2)

  உப்பு சத்தியாகிரகம்

 124. சட்டப்பிரிவு 356

 125. (3)

  மறைமுக வரி

 126. சட்டமன்றம் 

 127. (4)

  உள்நாட்டு நெருக்கடிநிலை 

 128. வேதாரண்யம்

 129. (5)

  பிரம்மபுத்ரா

 130. இந்திரா காந்தி 

 131. (6)

  கொரியா

 132. ஆயத்தீர்வை    

 133. (7)

  கோயம்புத்தூர் 

 134. சிங்மென் ரீ

 135. (8)

  நிரங்கரி இயக்கம் 

 136. பாபா தயாள்தாஸ்

 137. (9)

  இராஜஸ்தான் 

 138. தாமிரம் 

 139. (10)

  உத்திர பிரதேசம் 

  4 x 2 = 8
 140. இமயமலை ஆறுகள் மற்றும் தீப கற்ப ஆறுகள்

 141. வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று 

 142. ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்

 143. தேயிலை மற்றும் காபி 

 144. 4 x 4 = 16
 145. வேலுநாச்சியார்
  அ) வேலுநாச்சியாரின் இராணுவத் தளபதி யார்?
  ஆ) அவர் தேர்ச்சிப் பெற்றிருந்த தற்காப்புக் கலைகள் எவை?
  இ) அவர் யாரை மணமுடித்தார்?
  ஈ) அவரது மகளின் பெயர் என்ன?

 146. தமிழகத்தில் தொழிலாளர் இயக்கம்
  அ) மதராசில் தொழில் சங்க இயக்கம் தோன்றியதற்குக் காரணமாயிருந்த
  சூழலை முதன்மைப்படுத்திக் காட்டவும்.
  ஆ) சென்னை தொழிலாளர் சங்கத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான மூவரை அடையாளம் காண்க.
  இ) அகில இந்திய தொழில் சங்க காங்கிரசின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது?
  ஈ) முதன்முதலாக மதராசில் மே தின விழாவை நட த்தியது யார்? எந்த ஆண்டில் நடந்தது?

 147. மறைமலை அடிகள்
  அ) மறைமலை அடிகள் விளக்கவுரை எழுதிய சங்க நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
  ஆ) இளைஞராக இருந்தபோது மறை மலை அடிகள் பணியாற்றிய பத்திரிகையின் பெயரைக் குறிப்பிடுக.
  இ) இந்தித் திணிப்பை அவர் ஏன் எதிர்த்தார்?
  ஈ) மறைமலை அடிகளின் வாழ்க்கையின் மீது செல்வாக்குச் செலுத்தியவர்களில் முக்கியமானவர்கள் யாவர்?

 148. 8 x 2 = 16
 149. கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.
  காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
  அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.
  ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
  இ) இரண்டுமே தவறு.
  ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.

 150. கூற்று: இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.
  காரணம்: இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.
  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
  (இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  (ஈ) கூற்று தவறு காரணம் சரி.

 151. கூற்று: ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருள்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின.
  காரணம்: இருநாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்தன.
  அ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.
  ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
  இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு
  ஈ) காரணம் சரி, ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை.

 152. (i) பாளையக்காரர் முறை காகத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
  (ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும்செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.
  (iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
  (iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
  அ) (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி
  ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
  இ) (iii) மற்றும் (iv) மட்டும் சரி
  ஈ) (i) மற்றும் (iv) மட்டும் சரி

 153. கூற்று: பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப் பெற முயன்றார்.
  காரணம்: மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.
  அ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச் சரியாக விளக்கவில்லை 
  ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை .
  இ) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.
  ஈ) கூற்று தவறானது காரணம் சரியானது

 154. (i)) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழில் புரட்சி மேம்பட முதலீடு செய்தது.
  (ii) 1831 - 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன்கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.
  (iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.
  (iv) 1879ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
  (அ) (i) (ii) மற்றும் (iii) சரியானவை
  (ஆ) (ii) மற்றும் (iii) சரியானவை
  (இ) (iii) மற்றும் (iv) சரியானவை
  (ஈ) (i) மற்றும் (iv) சரியானவை

 155. கூற்று: இந்தியாவில் உள்ள பழங்குடியினர் இந்திய சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.
  காரணம்: இந்திய வேளாண்மைச் சூழலுக்கு ஏற்றவாறு அவர்கள் இடம்பெயர் வேளாண்மை முறையை பின்பற்றினர்.
  அ. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  ஆ. கூற்று மற்றும்ம் காரணம் இரண்டுமே தவறு. 
  இ. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  ஈ. கூற்று தவறு காரணம் சரி.

 156. (i) இந்துஸ்தா ன் குடியரசு ராணுவம் 1924 ஆம் ஆண்டு கான்பூரில் உருவானது
  (ii) காகோரி சதித்திட்ட வழக்கில் ராம் பிரசாத் பிஸ்மில் விசாரிக்கப்பட்டார்.
  (iii) இந்துஸ்தான் சமதர்மச குடியரசு அமைப்பு சூர்யா சென் என்பவரால் உருவாக்கப்பட்டது
  (iv) சிட்டகாங் ஆயுதக்கிடங்குத் தாக்குதல் B.K. தத்தால் நடத்தப்பட்டது.
  அ) (i) மற்றும் (ii) சரியானது
  ஆ) (i) மற்றும் (iii) சரியானது
  இ) (iii) சரியானது
  ஈ) (iii) மற்றும் (iv) சரியானது

 157. 4 x 1 = 4
 158. இந்தியாவின் மீதான தாக்கம்
  i) முதல் உலகப்போர் இந்தியாவின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது
  ii) ஐரோப்பா, ஆப்ரிக்கா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் போர்ப்பணி செய்வதற்காக ஆங்கிலேயர் இந்தியர்களைக் கொண்ட பெரும்படையைத் திரட்டினார்
  iii) போர் செலவுக்காக இந்தியா 125 மில்லியன் பவுண்டுகளை கடனாக வழங்கியது
  iv) இதன் விளைவாக இந்தியாவில் பெருமளவிலான பொருளாதார இன்னல்கள் ஏற்பட்டன
  அ) (i) மற்றும் (ii) சரி
  ஆ) (i) மற்றும் (iv) சரி
  இ) (i), (ii), (iii) மற்றும் (iv) சரி
  ஈ) (i), (ii) மற்றும் (iv) சரி

 159. i) அணி சேராமை என்பது இந்திய வெளியுறவு கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
  ii) இதன் நோக்கம் ராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தை பராமரித்தலாகும்.
  iii) இது மிகப்பெரிய அரசியல் குழுவாக விளங்கவில்லை.
  iv) வளர்ச்சி குறைந்த நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பிற்கான அடித்தளத்தை நிறுவுவதில் அணிசேரா நாடுகள் வெற்றி அடைந்துள்ளன.
  அ) (i) மற்றும் (ii) சரி 
  ஆ) (ii) மட்டும் சரி 
  இ) (i) மட்டும் சரி 
  ஈ) (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி 

 160. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
  ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
  iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது.
  iv) சூயஸ் கால்வாவாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்ட்கப்பட்டது.
  அ) i), ii) ஆகியன சரி
  ஆ) i), iii) ஆகியன சரி
  இ) iv) சரி
  ஈ) i), ii), iv) ஆகியன சரி

 161. i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கியக்கடமையாக இருந்தது.
  ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.
  iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாளில் எற்பட்டது.
  iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966 இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
  அ) i), ii) ஆகியவை சரி
  ஆ) iii) சரி
  இ) iii), iv) ஆகியவை சரி
  ஈ) i), ii), iii) ஆகியவை சரி

 162. 1 x 2 = 2
 163. தமிழகத்திலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs)
  அ. ராம்கோ சிமெண்ட் நிறுவனம்
  ஆ. இந்தியா சிமெண்ட் நிறுவனம்
  இ. அசோக் லேலண்ட்
  ஈ. டாட்டா நிறுவனம்

 164. 2 x 2 = 4
 165. பின்வ ருவனவற்றில் அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?
  (i) அணிசேரா இயக்கம் என்ற சொல் வி.கிருஷ்ணமேனன் என்ப வரால்
  உருவாக்கப்பட்டது.
  (ii) இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும்.
  (iii) தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
  (iv) இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது.
  அ) (i) மற்றும் (ii)
  ஆ) (iii) மற்றும் (iv)
  இ) (ii) மட்டும்
  ஈ) (iv) மட்டும்

 166. இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் ராணுவ முகாம்களில் இணைவதைத் தவிர்ப்பது அவசியமாக இருந்தது. ஏனெனில், இந்தியா இதனை / இவைகளை மீட்க வேண்டி இருந்தது
  அ) கடுமையான வறுமை
  ஆ) எழுத்தறிவின்மை
  இ) குழப்பமான சமூக பொருளாதார நிலைமைகள்
  ஈ) மேற்கூறிய அனைத்தும்

 167. 1 x 2 = 2
 168. i) ரௌலட் சட்டம் காவல் துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்கியது.
  ii) காந்தியின் தந்தை காபாகாந்தி போர்பந்தரின் திவான் ஆக இருந்தார்.
  iii) 1928 இல் நடைபெற்ற அகமதாபாத் மில் வேலை நிறுத்தம் காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கின.
  iv) சௌரி சௌரா நிகழ்ச்சிக்கு பிறகு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றார்.
  அ) (i) மற்றும் (ii) சரி
  ஆ) (i), (ii) மற்றும் (iv) சரி
  இ) (ii) மற்றும் (iii) சரி
  ஈ) (iii) மற்றும் (iv) சரி

 169. 17 x 5 = 85
 170. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.

 171. ஐரோப்பியக்குழுமம் எவ்வாறு ஐரோப்பிய இணைவானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக

 172. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.

 173. இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் நீதிவரையறைகளை விளக்குக.

 174. தென்னிந்தியாவில் வர்த்தகம் மற்றும் வர்த்தகர்களை பற்றி சுருக்கமாக விளக்குக.

 175. சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக

 176. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.அதன் தோல்விக்கான காரணங்களையும் குறிப்பிடுக.

 177. பெண்களின் மேம்பாட்டிற்கு 19 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.

 178. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.

 179. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.

 180. இந்திய மண் வகைகளைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.

 181. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.

 182. கீழ்கண்ட பொருளாதார கொள்கைகளை விவரி?
  1) விவசாய கொள்கை 
  2) தொழிற் கொள்கை 
  3) புதிய பொருளாதார கொள்கை 

 183. தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.

 184. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.

 185. வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளைப் பற்றி
  விவாதிக்கவும்

 186. பொது விநியோக முறையை விவரிக்கவும்.

 187. 2 x 8 = 16
 188. பால்கன் போர்கள்
  அ) பால்கன் கழகம் ஏன் உருவாக்கப்பட்டது?
  ஆ) முதல் பால்கன் போரின் விளைவுகள் யாவை?
  இ) இப்போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் யாவர்?
  ஈ) இரண்டாவது பால்கன் போரின் இறுதியில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின் பெயரென்ன?

 189. இந்தோ-சீனாவின் காலனிய எதிப்புப் போராட்டம்
  அ) காலனியாதிக்க நீக்கம் எனும் கோட்பாட்டைத் தெளிவுபட விளக்குக.
  ஆ) இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் எவை?
  இ) காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள் வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள் எவ்வாறு உதவின?
  ஈ) இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல் கட்சி எது?

 190. 2 x 10 = 20
 191. கொடுக்கப்பட்டுள்ள இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
  மலைத் தொடர்கள்:
  காரகோரம், லடாக், ஜாஸ்கர், ஆரவல்லி, மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை.

 192. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
  1. கிரேட் பிரிட்டன்
  2.ஜெர்மனி 
  3. பிரான்ஸ் 
  4. இத்தாலி 
  5. மொராக்கோ 
  6. துருக்கி 
  7. செர்பியா 
  8. பாஸ்னிய 
  9. கிரீஸ் 
  10. ஆஸ்திரிய-ஹங்கேரி 
  11. பல்கேரியா 
  12. ருமேனியா

 193. 1 x 10 = 10
 194. கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்
  1934 – நீண்ட பயணம்
  1949 - வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ NATO)
  1954 - தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைவு (சீட்டோ SEATO)
  1955 - வார்சா ஒப்பந்தம்
  1956 - சூயஸ் கால்வாய் சிக்கல்
  1961 - பெல்கிரேட் மாநாடு

*****************************************

Reviews & Comments about pre model half yearly examination

Write your Comment